Wednesday, September 28, 2005

 

மூடர்கள் நாங்கள்!

இங்கு எல்லோரும் ராமர்கள், சீதைகள்
காண்டம் வாங்கச் சொல்லி
கவர்மெண்ட் விளம்பரம்
மக்கள்தொகையை கட்டுப்படுத்த அல்ல
புள்ளி ராஜாக்களை மட்டுப்படுத்த

விபச்சாரம் என்னும் விஷக்காற்றுக்கு
வாசல் திறந்துவிட்டு
காற்றாடியையும் சுழலவிட்டதினால்
காற்று வாங்க போனவர்கலெல்லாம்
புள்ளி ராஜாவாகிப் போனார்கள்.

விபச்சாரம் என்னும் விஷத்தை
விதைத்து அது மரமாகி
உயிர் கொல்லும் கனி தந்தபின்பும்
வேருக்கு வெண்ணீர் ஊற்றாமல்
மரத்திற்கு பூ வேலி போடும்
மூடர்கள் நாங்கள்.

எனது தேசம் வல்லரசு ஆகுமுன்
ஆரோக்கியமான மக்கள்
இல்லா அரசாகி விடுமோ
என அச்சத்துடன்.
-அரசு-

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, September 26, 2005

 

புதிய கலாச்சாரம்!

பெண்கள் முன்பெல்லாம் தெரிந்த ஆண்களை நன்பர்களை சந்தித்துக் கொண்டால் கையெடுத்துக் கும்பிட்டு மரியாதை செய்வார்கள்.அதன்பின்பு நாகரீகம் வளர்ச்சி பெற்று கை குலுக்கிக் கொண்டர்கள், அதன்பின்பு நாகரீகம் மேலும் முதிர்ச்சி அடைந்து கட்டி அனைத்துக் கொண்டார்கள்,இப்போது முத்தம் கொடுக்கின்ற அளவுக்கு முன்னேறி உள்ளார்கள்.இப்போது ஆண்களுடன் “பாரு”சென்று மது அருந்துகின்ற அளவுக்கு கலாச்சார முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். நம் கலாச்சாரம், நாகரீகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை இங்க போய் பாருங்க!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 25, 2005

 

தஸ்லீமா & குஷ்பு

பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு
கொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு
பல தரப்பிலிருந் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
‘’தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார்.
தனது சொந்த வாழ்க்கயைப் போல மொத்த
சமுதாயமும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.
தனது, கொச்சயான கருத்துக்கு அவர் மன்னிப்பு
கேட்டே ஆகவேண்டும்‘’ என்றும் எதிர்ப்புக் குரல் கிளம்பி
இருக்கிறது.

தமிழக பெண்கள் கற்பு இல்லாதவர்களா?

சமீபத்தில் வெளியான இந்தியா டுடே இதழில் செக்ஸ் பற்றி குஷ்பு
கூறிய கருத்து இதுதான்:
‘’பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல்
இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந் நம் சமூகம்
விடுதலயாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான்
திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்துக்கு
மு ன் பு செக்ஸ் வத்க்கொள்ளும் போது கர்ப்பம் ஆகாமலும். பால்வின நோய்
வராமலும் பெண் தன்ன தற்காத்துக்கொள்ள வேண்டும்‘’
குஷ்பு வின் இக்கருத்க்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்
உள்ளனர். அதன் விவரம்:

நாஞ்சில்சம்பத் ( ம . தி . மு . க .கொள்கைப்பரப்பு செயலாளர்): தமிழையும் தமிழ் கலாசாரத்தயும் கொச்சப்படுத்துகிற விஷயம் இது. நடிகை குஷ்பு, தன்னுடய நீதியை பொது
நீ தியாக மா ற்று ம் முய ற் சி யி ல் இ ற ங் கி யி ரு க் கிறார் .
உயிரவிடவும், கற்ப மேலாக மதிப்பது தமிழ்க்கலாசாரம்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,ஒழுக்கம் தேவயே
இல்ல என்பது சிலரின் வாழ்க்க முறயாக இருக்கலாம்.
மொத்த சமுதாயமும் அப்படி இருக்க வேண்டும் என்று
அவர் எதிர்பார்ப்பது சுத்த அபத்தம்.
பெண், எல்லா வகயிலும் உரிம பெற்றவளாக
மாற வேண்டும், வாழ வேண்டுமென்பதே எங்களின்
லட்சியம். அது ஒழுங்கீனத்தில் போய் விட்டுவிடக்கூடாது.
இது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் சேர்த்துதான்.

பிரவீன்காந்த் (இயக்குநர்): குஷ்பு தமிழ்நாட்டுக்கு தெரியாத
நடிகயே இல்ல. அவருக்கு இங்கே கோயில் கட்டி
கும்பிட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இப்படி ஒரு
கேவலமான, கலாசார சீரழிவான கருத்த சொல்லி இருப்பதால் கழிவறையில்
ஆண் பெண் என்று வித்தியாசம் கா ட் டு ம் ப ட மாக இ வ ர் படத்தை ஒட்ட வேண்டும். அ ந் த அ ள வு க் கு இ ந் த க் க ரு த் தி ன் மூ ல ம் த ர ம்
தா ழ்ந்துவிட்டார் . நடிகை என்பதால்தான் அவர் இப்படி பேசுகிறார் .அ வரை
பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை. தனது கருத்துக்கு குஷ்பு நிச்சயம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இல.கணேசன் (பா.ஜ.க. அகில இந்திய செயலாளர்):குஷ்புவின் கருத்து கவலை அளிக்கிறது. ஒட்டுமொத்த சமுதா யமே இதற்கு கவலைப்பட வேண்டும்.

தேன்மொழி (ஐகோர்ட் முன்னாள் அரசு வழக்கறிஞர்):கு ஷ் பு த ன்னை வை த் துக்கொண்டு எல்லோரையும் மட்டமாக பேசககூடா து . இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும் கருத்து இது. குஷ்பு எல்லா பெண் களையும் இழிவுபடுத்துகிறார்.

உமா மகேஸ்வரி (கவிஞர்):படித்தவனோ படிக்காதவனோ தன்மனை வியிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்காமல் இருப்பான் என்பதை என்னா ல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சினேகன் (பாடலாசிரியர்): தமிழச்சிகளுக்கு தனி வரலாறு உண்டு. அதை ஓடி வந்தவர்கள் அசிங்கப்படுத்த வேண்டாம்.

சு ந் த ர் . சி . ( குஷ்புவின் கணவர்): குஷ்புவின் பேட்டியை படித்தேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதைப் போய் ஏன்
பெரி து ப டு த் து கி றீ ர் கள் ? அசிங்கமான விஷயத்தைப்
பற்றி நான் பேசுவதே இல்லை. இதை வி ட் டு வேறு
விஷயத்தைக் கேளுங்கள்.
நன்றி: தமிழ் முரசுதஸ்லீமாவை அன்று ஆதரித்ததினால் குஷ்புவுக்கு இப்படி ஒரு கருத்தை கூற துனிவு வந்துள்ளது.

நம்முடய மக்கள் நடிகர், நடிகைகளை தலைவர்களகவும் வழிகாட்டியாகவும், கடவுளுக்கு இணையாகவும் உயர்த்திப் பிடிப்பதனால் இவர்கள் இது போன்ற அசிங்கங்களை வாந்தி எடுக்கிறார்கள்.அவர்கள் எதை சாப்பிட்டர்களோ அதை த்தான் வாந்தி எடுப்பார்கள், அவர்களைப்போல் எல்லோரும் அசிங்கத்தை உண்ணவேண்டும் என்று சொல்லுவது கேவலமானது என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை,அவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டதால் மக்களுக்கு அருள்வாக்கு சொல்ல துணிந்துள்ளனர்.

குஷ்பு அவர்களே எல்லாப் பெண்களும் உங்களைமாதிரி இருக்கவேண்டும் என்றும், எல்லா ஆண்களும் சுந்தர். சி, மாதிரி இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறீகளா?
`

மிஷ்டர் சு ந் த ர் . சி, வாழ்க்கையில் சிலநேரம் வளையலாம் ஆனால் ஒடியக்கூடாது.

விஜயகாந்த் அவர்களே உங்கள் கட்சிக்கு குஷ்புவை கொ.ப.செ.வாகப்போடலாம் உங்ககுடும்ப (கலைக்குடும்பம்) த்தை சேர்ந்தவர் இது போன்ற நல்ல புரட்சிகரமான கருத்துக்களை கூறி கட்சிக்கு புகழ்சேர்ப்பார்.
நீங்கள் தருமியை கொ.ப.செ.வாகப்போட்டால் பின்பு நான் ஏன் கட்சி மாறினேன் என்று ஒரு பதிவுப்போட்டு உங்களைப்பற்றி எழுத ஆரம்பித்துவிடுவார்.

குஷ்புவுக்கு முஸ்லீம் முல்லாக்கள் பத்துவா கொடுத்து இருந்தால் தஸ்லீமாவைப் போல் குஷ்புவையும் தாங்கிப்பிடிக்க ஒரு கூட்டம் தயராகி இருக்கும் குஷ்புவின் துரதிஷ்டம் அப்படி எதும் நடக்கவில்லை.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது