Wednesday, September 21, 2005

 

இதோ எந்தன் தெய்வம்!

ஆளும் அரிதாரம்

தமிழர்கள் மீது திரைப்படத் துறை செலுத்திவரும் ஆளுமை பற்றிய சித்திரத் தொடர்
முதல் பகுதி
திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் விம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து.
மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு (எம்.ஜி.ஆர்) கோயில் கட்டுவதற்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணமாகும்.
ஆம், சென்னையில் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி அதில் தொடர்ந்து பூசை செய்துவரும் காந்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் அந்தளவுக்கு எம்.ஜி.ஆரை தனது தெய்வமாகவே வரித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் குடித்த எச்சி குளிர்பானத்தை தான் பருகியதை இன்றும் காந்தா ஒரு பெரும் விசயமாகக் கூறுகிறார். தனது இந்தப் பக்தியை எவரும் பரிகாசம் செய்வதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை.
திரைப்படக் காதாநாயகர்களின் விம்பங்களை ஆராதிக்கும் இந்த பாங்கு எம்.ஜி.ஆருக்கு மாத்திரமான ஒரு சிறப்பு என்றும் கூறமுடியாது.இன்றும் ஏனைய காதாநாயகர்களுக்கும் இது தொடர்கிறது.


இதற்கு இன்னுமொரு உதாரணமாக நடிகர் விஜயகாந்துக்கு கோயில் கட்டியுள்ளார் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசப்பட்டியில் இருக்கும் இராஜேந்திரன்.
ஒரு நடிகருக்கு ஏன் கோயில் கட்டினீர்கள் என்று எமது செய்தியாளர் கேட்டதற்கு, “ உங்களுக்கு அவர் கடவுள், ஆனால் எனக்கு அவர் கடவுள்” என்று பதிலளித்தார் இராஜேந்திரன்.
இராஜேந்திரனை பொறுத்தவரை அரிதார ஆளுமைக்குக் முன்னால் அன்னைக்குக்கூட
இரண்டாவது இடந்தான்.

நன்றி: BBC

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 18, 2005

 

சுயேட்சை வேட்பாளர்!

என்னுடய சிறுவயதில் ஒரு வாரப் பத்திரிக்கையில் படித்த கதை எந்தப் பத்திரிக்கை என்று நினைவில்லை.

நினைவில் நின்றதை எழுதி உள்ளேன்.

தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடக்கிறது பிரபல அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் அவர்களோடு ஒரு சுயேட்சை வேட்பாளறும் போட்டியிடுகிறார் கட்சி வேட்பாளர்களைப் போன்று இவரும் பல வாக்குறுதிகள் சொல்லி ஓட்டு கேட்கிறார்.
மாற்றத்தை விரும்பிய மக்கள் சுயேட்சை வேட்பாளருக்கு ஓட்டுபோட்டு எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கின்றனர்.

சுயேட்சை வேட்பாளரின் தொகுதி என்பதினால் ஆளுங்கட்சியினரால் புறக்கனிக்கப்படுகிரது இவரது தொகுதி, இவரது கோரிக்கைகள் ஏதும் செயல்படுத்தப் படவில்லை,
இதைக் கண்டித்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்துவிடுகிறார், ஆளுங்கட்சியின் கவணம் அந்த தொகுதியின் பக்கம் திரும்புகிறது மிகவும் கவனத்தோடு அங்கு திட்டப்ணிகள் நிறைவேற்றப் படுகிறது,
சாலை வசதிகள், குடிநீர்வசதிகள் என் பல்வேறு வசதிகள் செய்துதரப்படுகிறது. அதை தொடர்ந்து இடைத்தேர்தலும் வருகிறது. மீண்டும் நமது பழய சுயேட்சை வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓட்டுக்கேட்டு மக்களிடம் செல்கிறார்,
மக்கள் ஏற்கனவே பலவாக்குருதிகளை சொல்லி எம்.எல்.ஏவாக சென்றீர்கள் நீங்கள் எதுவும் செய்யாமல் பதவியை ராஜினாமாசெய்து விட்டீர்கள் இப்பொது மீண்டும் ஓட்டுக்கேட்டு வந்துள்ளீர்களே இது நியாயமா என்று, அதற்கு அவர் என்னால்தான் இந்த தொகுதிக்கு இவ்வளவு திட்டங்களும் நிரைவேற்றப் பட்டுள்ளது என்று கூறினார்.

மக்கள் குழப்பத்துடன் எப்படி என்று கேட்டதற்கு அவர் நான் எனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் இந்தத் தொகுதியில் இவ்வளவு திட்டங்கள் நிறைவேறி இருக்குமா,
நான் ராஜினாமா செய்தினால்தான் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று ஆளும்கட்சியினார் எல்லா வசதிகளையும் செய்துள்ளார்கள் என்றார். மீண்டும் மக்கள் அவருக்கே வாக்களித்து வெற்றி பெறச்செய்தனர்.


அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது