Saturday, September 10, 2005

 

அரசு சொல்லுறான் ஆண்டவன் செய்யிறான்!

பெண்களை கேலி- கிண்டல் செய்து பாடல். வாலி - பா.விஜய் உள்பட சினிமா கவிஞர்கள் மீது திடீர் வழக்கு,

பா.விஜய்
சென்னை, செப். 10- பெண்களை கேலி - கிண்டல்; செய்யும் வகையில் சினிமா பாடல்களை எழுதும் சினிமா கவிஞர்கள் வாலி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ரகு. இவர் சென்னை ஐகோர்ட்டில் சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது„-

தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்கள் பெண்களை கேலி-கிண்டல் செய்யும் வகையில் பாடல்களை எழுதி வருகின்றனர். பெண்களை கேலி செய்பவர்கள் மீது ஈவ்டீசிங் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சினிமா கவிஞர்கள் வாலி, வைரமுத்து, விஜய் உள்பட 5 பேர் பெண்களை கேலி-கிண்டல் செய்யும் வகையில் ஆபாசமாக சினிமா பாடல்களை எழுதுகிறhர்கள். சிலர் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பாடல் எழுதுகிறhர்கள்.

இந்த பாடல்களினால், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், இளைய தலைமுறையினரிடையே ஆபாசத்தையும். பாலியல் உணர்ச்சிகளையும் தூண்டிவிடும் வகையில் உள்ளது. ஆகவே இந்த பாடல் ஆசிரியர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நன்றி-தினகரன்

அரசு சொன்னது என்ன இங்க வாங்க

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்பொமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 08, 2005

 

ஜெயலலிதாவுக்கு பின்தான்!

பெருசுங்க(என்னைவிடப் பெரியவர்கள்) பேசியதில் கேட்டதுங்க. உங்களுக்கு தெரிஞ்சா உங்கள்கருத்தை சொல்லுங்க.

சினிமாவில் நாகரீகம் கெட்டதும் ஜெயலலிதா வருகைக்குப் பின்தான்
அரசியலில் நாகரீகம் கெட்டதும் ஜெயலலிதா வருகைக்குப் பின்தான்.
நீங்க என்னத்த சொல்லனுமோ சொல்லிட்டு போங்க!.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, September 07, 2005

 

சிறந்த ஆசிரியர்கள் யார்?

தன்னிடம் படிக்கும் மாணவ மாணவிகளை பண்பாடு மிக்கவர்களாகவும் ஒழுக்கம் மிக்கவர்களாகவும் அவர்களின் வாழ்வின் மேன்மைக்கு வழி காட்டுபவர்களாகவும் அமைபவர்களே சிறந்த ஆசிரியர்கள். அவர்களுடய நடைமுறைகளும் மாணவர்களுக்கு ஒருபாடமாக இருக்கவேண்டும்.

நான் படித்த உயர் நிலைப் பள்ளியில் என்னுடய ஆசிரியர்களில் அப்படி ஒரு சிறந்த ஆசிரியர் அமையப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பெயர் சூசைராஜன் மிகவும் எளிமையானவர் நல்லகுணம் படைத்தவர். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் அவர் நடத்தியது உயிரியல்(Biolage) பாடம், வாரத்தில் இரண்டு நாட்கள்தான் அவருடய பிரியட், பிரியட் நேரம் 45 நிமிடங்கள்தான் அதில் 15 நிமிடங்கள் மாணவர்களின் ஒழுக்கங்கள் பற்றியே அவருடய பாடம் இருக்கும்.
மது அருந்துவதின் தீமைகள் பீடி, சிகெரட் பிடிப்பதின் தீமைகள், மாணவர்களின் ஒழுக்க கேடால் அவர்களுட வாழ்க்கை எவ்வாறு கெட்டுப் போகிறது, மாணவர்களின் வாழ்க்கையை எதிர்காலத்தில் எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும், உங்களின் தவறான செயல்கள் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது போன்ற பல அறிவுறைகளை சொல்லியபின்பே அவர் பாடம் நடத்துவார்.
அவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதால் அவர் சொல்கின்ற விதம் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்கும்படியாக இருக்கும். மாணவர்களை அடிப்பது கிடையாது, அவரிடமும் எந்த கெட்டப் பழக்கங்களும் கிடையாது அதனால்தான் அவருட அறிவுறைகளை பற்றி விமர்சனம் செய்யாமல் என் போன்றவர்களால் நடைமுறைப் படுத்த முடிந்தது.
மாணவர்களின் முன்னிலையில் புகை பிடிப்பது, மது அருந்திவிட்டு போதையில் பாடம் நடத்துவது, அல்லது போதையில் டீச்சர்ஸ் ரூமிலேயே இருந்து விடுவது போன்ற ஆசிரியர்களும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்
இது போன்ற ஆசிரியர்களிடம் படித்த மாணவர்களிடம் எப்படி ஒழுக்கத்தையும் நேர்மையும் நன்னடத்தையும் எதிர்பார்க்கமுடியும். வருங்காலத்தில் நல்ல சமுதயத்தை உருவாக்குகின்ற பொறுப்பு நம்மிடமுள்ளது என்ற உணர்வு எல்லா ஆசிரியர்களிடமும் இருக்கவேண்டும்.

மற்றவர்களுக்கு அறிவுறை சொன்னால் மட்டும் போதாது சொல்லுகிறவர் அதற்கு தகுதியானவர்களாக இருக்கவேண்டும் அப்பொதுதான் கேட்கிறவர்களுக்கும் நடைமுறைப்படுத்த கூடிய ஆர்வம் இருக்கும்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் எந்த விதிமுறைகளுமின்றி
ஆசிரியர் பணிக்கு சேர்த்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம்.


ஆசிரியர் பணிக்கு கல்வித்தகுதி மட்டும் இல்லாமல் ஒழுக்கமும், நேர்மையும், உண்மையும், சமுதாயப் பொறுப்பும் அவசியம். மாணவர்களை நல்லவர்களாக ஆக்குவது ஆசிரியரின் கடமை என்றால் அதற்குத் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் கடமை.

திரைப்படத்தில் மது அருந்துவதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தடை விதித்த அரசாங்கம் ஆசிரியர்களுக்கும் இது போன்ற தடைவிதித்தால் மிகவும் நன்மையாக இருக்கும்.
அதை மீருபவர்களுக்கு கடும் தண்டனையும் வழங்கவேண்டும்.
செய்வார்களா!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, September 05, 2005

 

டாக்டர் செய்தது சரியா?

எனது நன்பர் மூலம் அறிந்தது அவருடய மனைவிக்கு இரண்டாவது பிரவசத்திற்கு மருத்துவமனையில் சேர்த்து இருந்தபபோது மருத்துவரிடம் குழந்தை பிறந்தவுடன் எனது மனைவிக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்து விடுங்கள் எனகூறியுள்ளார். அதற்கு மருத்துவர் அவரிடம் கேட்ட கேள்வி ஏன் நீங்கள் கருத்தடை செய்து கொள்ளலாம்தானே என்று. நன்பர் பரவாயில்லை எனக்கும் கருத்தடை ஆப்ரேசன் செய்து கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
டாக்டர் மீண்டும் ஆப்ரேசன் செய்வதற்கு முன் என்னுடய கருத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அதன் பின்பு உங்கள் முடிவை கூறுங்கள் என்று இந்த கருத்தை கூறியுள்ளார்.

1) உங்கள் இரண்டு குழந்தைகளின் ஆயுளுக்கு உத்திரவாதம் என்ன?
2) கணவன் மனைவி இருவரும் சின்ன வயதுடையவர்கள் நீங்கள் கருத்தடை அப்ரேசன் செய்து கொண்டால், உங்கள் மனைவி இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்களின் மறுவாழ்க்கை கேள்விக் குறியாகிவிடாதா, கருத்தடை ஆப்ரேசன் செய்துகொண்ட உங்களை திருமணம் செய்ய பெண் முன்வருவார்களா?
3) நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் மனைவின் மறுவாழ்க்கை கேள்விக் குறியாகிவிடாதா, ஆப்ரேசன் செய்துகொண்ட உங்கள் மனைவியை திருமணம் செய்ய ஆண் முன்வருவார்களா?
4) நீங்கள் நிறந்தறமான கருத்தடை செய்வதற்கு பதிலாக தற்காலிகமாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாமே என்று அறிவுரையும் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் ஆப்ரேசன் செய்யும் எண்ணத்தை கைவிட்டுவிட்டதாக கூறினார்.

இப்போது என்னுடய கேள்வி

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை மாறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகி இப்போது நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்ற வேலையில் டாக்டர் இதுபோன்று செய்வது தேசதுரோக மில்லையா?

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 04, 2005

 

கிராம பஞ்சாயத்துக்களின் அட்டகாசம்!

கற்பழித்தால் அபராதம் போதுமா? உ.பி.,யில் கொதிப்பு * கிராம பஞ்சாயத்துக்களின் அட்டகாசம்

சாகரான்பூர்: கற்பழித்தவர்களுக்கு வெறும் அபராதம் விதிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர் கிராமப்புற கீழ்தட்டு மக்கள். ஆனாலும், போலீசை விட பலம் வாய்ந்த கிராம பஞ்சாயத்துக்களின் ஆதிக்கமே அதிகம் என்பதால் இந்த கொடூர நடைமுறையை மாற்ற முடியவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பல மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்துக்களின் அட்டகாசம் அதிகம். கீழ்தட்டு மக்களை, மேல் ஜாதி மக்கள் கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதுவும் கூலித் தொழிலாளிகள், ஏழை மக்களை வதைப்பதுடன், கற்பழிப்பு கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இருந்தாலும், கிராம பஞ்சாயத்துக்களை எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் ஆதரவு உள்ளதால், அவர்கள் போலீசை விட பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் முழுக்க இப்படித்தான் மேல் ஜாதி மக்களின் அட்டகாசம், நகரங்களில் இருக்கிறதோ இல்லையோ, கிராமங்களில் பரவலாக உள்ளது. கற்பழிப்புகள் அதிகம் காணப்படுகிறது. சாகரான்பூர் மாவட்டம், சிம்லானா கிராமத்தில் தலித் பெண்ணை கற்பழிக்க முயன்றது ஒரு கும்பல். அந்த பெண் எப்படியோ தப்பி விட்டாலும், கிராம பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், மேல் ஜாதியை சேர்ந்த ஒருவரோ, சிலரோ அமர்ந்து தான் தீர்ப்பு கூறுவர்.

"என்னை கற்பழிக்க முயன்றவருக்கு அபராதம் போடுவதை விட, நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டார் அந்த பெண். விசாரித்த கிராம பஞ்சாயத்து நடுவரோ, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

"எங்களுக்கு பணம் வேண்டாம், நீதி நியாயமே வேண்டும். கடுமையான தண்டனை தர வேண்டும்' என்று கிராம கீழ்த்தட்டு மக்கள் கோரியும் எதுவும் பலனளிக்கவில்லை. இது தொடர்பாக போலீசுக்கும் போக அவர்களுக்கு பயம்.

இதேபோல, தியோபந்த் கோலா பஸ்தி என்ற கிராம பஞ்சாயத்தில், கற்பழிப்பு குற்றவாளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஐந்து மாதத்திற்கு முன்பு கற்பழிக்கப்பட்ட பெண், இப்போது கர்ப்பிணியாக உள்ளார். கற்பழித்தவன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார். இருந்தும், அது பற்றி கவலைப்படாமல், குற்றவாளிக்கு அபராதம் விதித்து விடுவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி-தினமலர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது