Wednesday, August 31, 2005

 

அரசு பதில்கள்

குமுதம் அரசு தான் பதில் சொல்லுவாரா
நம்ம அரசு பதில் எப்படின்னு பாருங்க.

பதிவும் நானே பின்னூட்டமும் நானே என்கிற மாதிரி கேள்வியும் நானே பதிலும் நானே!விக்ரம்ப்ரியன்
சங்கரன் கோவில்.
கேள்வி:-அந்நியன் படம் பார்த்தீங்களா?

பதில்:-இந்தியன் பார்த்துவிட்டதால் அந்நியன் பார்க்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சிங்.
அயோத்தி குப்பம்.
கேள்வி:-அரசுக்கு பிடித்தது எது? பிடிகாதது எது?

பதில்:-பிடித்தது அத்வானி பாக்கிஸ்தான் போனது.
பிடிக்காதது அவர் திரும்பி வந்தது.

எம்.ஜி. ராமசாமி.
மாந்தோட்டம்
கேள்வி:-இரட்டை இலைக்கு என்ன அர்த்தம்

பதில்:-ஒன்னு தின்னுரதுக்கு ஒன்னு ஆய்போறதுக்கு.இங்கிலீஸ்காரன்
சத்யாந்கர்.
கேள்வி:-உங்களுக்கு ஆங்கிலம் புடிக்காதா உங்கள் பதிலில் ஆங்கில வார்த்தைகளே இருப்பதில்லை.

பதில்:-என்னமாக்கன்னு உனக்கு விஷயம் தெரியாதா.அரசுக்கு ஆங்கிலத்தின் மீது வெறுப்புல்லாம் கிடையாது ஆங்கிலம் தெரியாது. நீ கேட்டுப்புட்ட இந்தாபுடி ABCDEFGH.போதுமா.

சின்னச்சாமி
சிவகாசி.
கேள்வி:அரசு ஒரு ஏ ஜோக் சொல்லுங்களேன்

பதில்:-ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஜோக்!.போதுமா

லலிதா
போன்னாவரம்
கேள்வி:-உங்களுக்கு பிடித்த முதல்வர்.

பதில்:-இந்தியாவில் நான். தமிழகத்தில் என்மனைவி.

விஜயன்
மதுரை
கேள்வி:-விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாறே அதை பறிய உங்கள் கருத்து.

பதில்:-மொதல்ல கொ.ப.செ.யாருன்னு சொல்லட்டும் அப்புறம் பார்ப்போம்
(இது திருநாவுக்கரசு கிட்ட கேட்ட கேள்வி இல்லையே!)

பன்னீர்
தஞ்சாவூர்
கேள்வி:-காவிரி பிரச்சினை தீருமா.
பதில்:-வாஸ்த்துப்படி காவிரி என்பது சரி இல்லை, கா என்பது காகம், காகம் சனி பகவான், வி அப்படின்னா விட்டம் காகமாகிய சனி வி ஆகிய விட்டத்தில் இருப்பதால் காவிரி பிரச்சினை தீரூவதற்கான வாய்ப்பு இல்லை.(உங்க மனைவி பெயர் காவிரி இல்லைய,.நான் சொன்ன பதில் காவிரி ஆற்றுக்கு, உங்க ஆத்துக்காரிக்கு பொருந்தாது)

ராமானுஜம்
ராமநாடு
கேள்வி:-ஒரு கணக்கு சொல்லுங்களேன்.

பதில்:-பள்ளியில் படிக்கும் போது கணக்கு வாத்தியாருக்கே அரசு தான் கணக்கு சொல்லிக் கொடுக்கறது, அரசு கணக்குல புலின்னு நெனச்சுக்காதிங்க, என்னோட கணக்கு வாத்தியார் மக்கு. இந்த கணக்கு எப்படின்னு சொல்லுங்க.
(1) 12345679*9=111111111.
(2) 12345679*18=222222222.
(3) 12345679*27=333333333.
(4) 12345679*36=444444444.
(5) 12345679*45=555555555.
(6) 12345679*54=666666666.
(7) 12345679*63=777777777.
(8) 12345679*72=888888888.
(9) 12345679*81=999999999.

துரை முருகன்
கோபாலபுரம்
கேள்வி:-கருணாநிதி ராஜ தந்திரியா?
பதில்:-எப்பவும் ராஜா என்கிறமாதிரி எப்பவும் முதல்வர் ஆகவல்லவா இருந்து இருப்பார்!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 30, 2005

 

பஞ்ச் டயலாக்

எங்களுக்கும் பஞ்ச் டயலாக் உடத்தெரியும்ல!.

அரசுக்கும் அடி சறுக்கும்.

அரசு சொல்லுறான்
ஆண்டவன் செய்யிறான்.

சீட்டு கொடுத்தா கூட்டு
இல்லாட்டா நோ’ ஓட்டு

நீ குடிச்சா தண்ணி(மது)
பொண்டாட்டி வடிச்சா கண்ணீர்


திருப்பிச் சொல்லுற பழக்கம்
திருநெல்வேலிக் காரனுக்கு கிடையாது.

வங்கோ தொரை
கிழேதரை
மேலே பிறை
கண்ணத்திலே அரை
வாயிலே நுரை
என் ஊரு கீழக்கரை.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 29, 2005

 

பாக்கிஸ்தனுடன் பிஜேபி ரகசிய ஒப்பந்தம்!

புலன் விசாரனை.
நம் நாட்டில் நடக்கின்ற குண்டு வெடிப்பு பற்றி புலன் விசாரனை செய்து CBIஅளித்த அறிக்கையின் விவரம்.

நமது நாட்டில் நடைபெரும் குண்டு வெடிப்பினைபற்றி சிபிஐக்கு சில சந்தேகம் எழுந்ததால் வேறு கண்ணோட்டத்தில் விசாரனை செய்ய முடிவு செய்தது. பிஜெபி ஆர்.எஸ்.எஸில் ஏதும் பிரச்சினை வரும் போதெல்லாம் இந்தியாவில் குண்டு வெடிக்கிறதே ஏன்? காந்தியை தூற்றும் அத்வானியின் கூட்டம் ஜின்னாவை புகழ்வதேன்? என்று யோசித்த புலனாய்வுத்துரை இயக்குனர்
அது தொடர்பான விசாரனையை முடுக்கிவிட்டார். அதன் மூலம் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன் விவரம் வறுமாறு, பிஜேபிக்கும் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. பாக்கிஸ்தான் அடிக்கடி இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடவேண்டும். இதை வைத்து அரசியல் செய்து ஆட்சியை பிடிக்கவேண்டும், கூட்டனியில், அல்லது சங்பரிவார் அமைப்பில் ஏதும் பிரச்சினை வந்தால் பாக்கிஸ்தான் அரசாங்கம் திவிரவாதிகள் மூலம் இந்தியாவில் தீவிரவாத செயலில் ஈடுபடவேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபடும் தற்கொலைப்படை தீவிரவாதிகள், பாக்கிஸ்தான் காரன் என்று தெரியும் படியான சில ஆதரங்களையும் அவர்கள் வைத்து இருக்கவேண்டும். இதுவே அந்த ரகசிய ஒப்பந்தத்தின் சாரம்சம்.குஜராத் கலவரத்தின் போது எல்லா கட்சிகளும் எல்லா அமைப்புகளும் ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்துவா அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தபோது பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் குஜரத்தில் தாக்குதல் நடத்தியதும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் என்றும் தெரியவந்துள்ளது.

தற்கொலைப் படையினருக்கு கோடிக்கான ருபாய் அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பின் மூலம் கைமாறியுள்ளது என்ற விபரமும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த ஒப்பந்தம் காலாவதியாக உள்ளதால் அதை புதுப்பிப்பதற் காகத்தான் அத்வானி பாக்கிஸ்தான் சென்றுள்ளார்,
இப்போது இந்தியா பாக்கிஸ்தான் அமைதிப் பேச்சுவர்த்தை நடப்பதால் முதலில் முஷ்ரஃப் ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கு சம்மதிக்கவில்லை முரண்டு பிடித்துள்ளார்.
அவரை சம்மதிக்கவைக்கவே பாக்கிஸ்தான் மக்களையும் ஜின்னாவையும் புகழ்ந்து பேசி முஷ்ரஃபை சம்மதிக்க வைத்துள்ளார். இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் சம்மதின் பேரில்ததன் நடந்தது. ரகசிய ஒப்பந்தத்தின் விபரம் வெளியே தெரியக்கூடாது என்றுதான் அத்வானியின் பேச்சுக்கு எதிப்பு தெரிவிப்பதாக நாடகம் நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

இப்பொது பாக்கிஸ்தானுடன் பிஜேபி ஒப்பந்தம் செய்து கொண்டாலும் இந்தியா பாக்கிஸ்தான் அமைதிப் பேச்சுவர்த்தை நடப்பதால் பாக்கிஸ்தானை முழுமையாக நம்பத்தயாரில்லை சங்பரிவார். எனவே அவர்களே லஸ்கரி தொய்பா என்ற பெயரில் ஒரு தற்கொலைப்படை உருவாக்கி அதில் ஆர்.எஸ்.எஸின் வீரமும் தீவிரவாத சிந்தனையும் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து வருகிறது அவர்களுக்கு முஸ்லீம் பெயர்சூட்டி சுன்னத்தும் செயப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடும்பொழுது பாக்கிஸ்தான்காரன் என்று அடையாலப் படுத்தும்வகயில் தாடியும் பாக்கிஸ்தான் பத்திரிக்கையின் சிலதுண்டுகள், சிறிய குரான்பேப்பர்கள் சட்டைப்பைகளில் வைத்து இருக்கவேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டுள்ளதாக விசாரனயில் தெரிய வந்துள்ளது.மேலும் புலன் விசாரனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
காங்கிரஸில் உள்ள சிலஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர்களுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பதாக CBIக்கு சந்தேகம் வந்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் கலக்கத்தில் உள்ளது.

(பத்திரிக்கை காரர்கள் கற்பனைப்போல இது அரசுவின் கற்பனை,சில வேலை இது உண்மையாகவும் இருக்கலாம்)

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, August 28, 2005

 

ராம ராஜ்யம்!

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஆலயம் திறந்தனர். அந்தக் கோயிலின் பெயர், சதிமாதா மந்திர்.

எழுத்தறிவு எட்டாத ஒரு கிராமத்தில், நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் இறந்தார். அவரது சடலம், மயானம் சென்றது. தீ மூட்டினர். அந்தத் தீயில், உயிரோடு அவருடைய மனைவியும் தீக்குளித்தாள். இல்லை. தள்ளப்பட்டாள். இதனை உடன்கட்டை ஏறுதல் என்றனர்.

ஆதிகாலம் தொட்டு வளர்ந்து வந்த இந்தக் கொடிய பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக ஆர்வலர்கள், அதற்காகப் போராடினர். எனவே, உடன் கட்டை ஏறும் ‘சதி’ பழக்கம், தடை செய்யப்பட்டது.

கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுகிறாள். மனைவி இறந்தால் கணவன் தீக்குளிக்கிறானா? இல்லை. அவன் இன்னொரு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம்.

கால மாற்றங்கள் துரிதகதியில் நடைபெறுகின்றன. எல்லா வகையிலும் பெண்ணடிமைத்தனம் ஒழிந்து வருகிறது. ஆனால், வசுந்தரா ராஜே என்ற பெண் முதல்வர், அரசாளும் ராஜஸ்தானில் பெண்ணடிமைத்தனத்திற்கு ஆலயம் எழுப்பப்படுகிறது. அந்த சதிமாதா மந்திர் நோக்கி, மக்கள் படை திரண்டு செல்கின்றனர். உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்திற்கு மீண்டும் முடிசூட்டப்படுகிறது.

பகவத் கீதை பிறந்ததற்குப் பின்னர் எழுதப்பட்ட சாஸ்திரங்கள்தான், ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்றிப் போற்றுகின்றன. அதற்கு முந்தைய அதர்வ வேதம் என்ன சொல்கிறது? இளம் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது.

மன்னராட்சி மண்டலங்கள் நிறைந்தது ராஜஸ்தான். அந்தக் காலத்தில் மன்னர் இறந்தால், அவருடைய அந்தப்புர நாயகிகளும் எரியும் நெருப்பில் இறக்கப்பட்டனர். அந்தக் கால ஜோத்பூர் மன்னர் இறந்தபோது, 85 பெண்கள் உடன்கட்டை ஏறினர். ஆனால், இன்றைக்கு எந்த மன்னராவது இறந்தால், அவருடைய ஆசை நாயகிகள் உடன்கட்டை ஏறுகிறார்களா?

ஆனால், அதே ராஜஸ்தானில் நாகரிக வாடை வீசாத தொலைதூர கிராமத்தில், உயிரோடு எரிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஆலயம் எழுப்புகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு சமூகசேவகி தாக்கப்பட்டார். குழந்தைத் திருமணங்கள் கூடாது என்று அவர் எடுத்துரைத்தார். ஒரு குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முயன்றார். அதுதான் அவர் செய்த குற்றம்.

பழைமை விரும்பிகள், அவரைத் தாக்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொடுமையை மறைக்க, மாநில அரசு எவ்வளவோ முயன்றது. ஆனால், உண்மை மைதானத்திற்கு வந்து விட்டது.

அந்தச் சமூக சேவகியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று ஏடுகள் எழுதின. அரசில் எந்தச் சலனமும் இல்லை.

பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் லேசான அசைவுகள் தெரிந்தன.

‘‘குழந்தைத் திருமணம் என்பது பரம்பரையாக வருகின்ற பழக்கம். அந்தச் சம்பிரதாயத்தை விட்டு விடுங்கள் என்று நிர்ப்பந்திக்க முடியாது. படிப்படியாகத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

குழந்தைத் திருமணத்திற்கு இப்படி நியாயம் பேசியவர், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பாபுலால் கவுர்தான். அதனால் தாக்கியவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை ஏற்கவில்லை. பெண்களின் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு நகரும் என்று நம்பிக்கை இல்லை.

இந்த வாரம் ஒரிசாவிலிருந்து இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அங்கு கொடுமை கூத்தாடியிருக்கிறது.

உயர்ஜாதி வீட்டுத் திருமணம் என்றால் உள்ளூர் முடிதிருத்தும் தொழிலாளி வரவேண்டும். வாயிலில் அண்டா குண்டாக்களில் தண்ணீரை நிரப்பிக் காத்திருக்க வேண்டும்.

மணமகன் காலைக் கழுவ வேண்டும். மணமகள் காலைக் கழுவ வேண்டும். போதாது என்று மணவிழாவுக்கு வரும் அனைவரின் பாதார விந்தங்களையும் நீராட்ட வேண்டும்.

இந்தக் கேவலச் செயலை இனியும் செய்ய மாட்டோம் என்று இளைஞர்கள் துணிந்தனர். நாங்கள் முடிதிருத்தும் தொழில் செய்வதால்தானே இந்த இழிவான காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, குலத் தொழிலுக்கு முழுக்குப் போடுகிறோம் மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மாநில அரசைக் கோரினர்.

பலமுறை படையெடுப்பிற்குப் பின்னர் அரசு, சிந்திக்கத் தொடங்கியது. ஆனால், உயர் ஜாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் குலத் தொழிலை வேறு யார் செய்வது? என்று வாதாடினர். ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை.

பூரி மாவட்டத்தில் புவனாபதி என்று ஒரு கிராமம். சென்ற மாதம் இங்கே ஒரு திருமணம் நடந்தது. கால் கழுவும் தொழிலைச் செய்ய சவரத் தொழிலாளி மறுத்தார். உருட்டல் மிரட்டல்களுக்கு அவர் அடி பணியவில்லை.

அந்தக் கிராமத்தில் நான்கு நாவிதர் குடும்பங்கள் உண்டு. அந்த நான்கு குடும்பங்களுமே உயர் ஜாதியினரின் கட்டளைகளை உடைத்தெறிந்தன.

உயர்ஜாதியினர் கூடினர். ‘பண்டைக் காலம் தொட்டு இருந்துவரும் பழக்கத்தை இவர்கள் எப்படி மாற்றலாம்? அபசாரம். அபசாரம்’ என்றனர்.

கல்யாண வீட்டிற்கு வந்து கால் கழுவி விட மறுத்த அந்த நாவித இளைஞனுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். ஆசார அனுஷ்டானங்களை அவன் மதிக்கவில்லையாம்.

அத்தோடு அவர்கள் நிற்கவில்லை. நான்கு நாவிதர் குடும்பங்களையும் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். அவர்களுக்கு இனி வேலை இல்லை. ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது. கடைகளில் அவர்கள் உணவுப் பொருள்கள் வாங்க அனுமதியில்லை.

நெஞ்சைச் சுடும் இந்தச் செய்திகள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. சவரத் தொழிலாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். ‘மாற்றுத் தொழிலுக்கு எப்போது ஏற்பாடு செய்வீர்கள்? நாங்கள் மானத்தோடு வாழ்வது எப்போது?’ என்று கேள்விக்கணைகள் தொடுத்தனர். ‘ஆகட்டும். பார்க்கலாம். ஆவன செய்வோம்’ என்றுதான் அப்போதும் பதில் வந்தது.

சனாதனிகளைப் பகைத்துக் கொள்ள அரசு தயாராக இல்லை.

இப்போது மாவட்டவாரியாக, மாநில ரீதியாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் கண்டுவிட்டனர்.

மாவட்டந்தோறும் நீதிமன்றங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் என்று முடிவு செய்து விட்டனர். இனி மரபு வழித் தொழிலை, குலத் தொழிலைச் செய்ய மாட்டோம் என்று உறுதி கொண்டு விட்டனர். அதனை உயர்ஜாதி ஆதிக்கச் சக்திகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. ஒரிசா அரசு, உறக்கத்தில் இருக்கிறது.

ராஜஸ்தானில் பி.ஜே.பி. அரசு _ அங்கே சதி மாதா ஆலயம் எழுப்புகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பி.ஜே.பி. அரசு _ அங்கே குழந்தைத் திருமணம் வேண்டாம் என்றால் அது சம்பிரதாயம் என்கிறது.

ஒரிசாவில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி _ குலத் தொழிலைச் செய் என்று ஆதிக்க சக்திகள் மிரட்டுகின்றன.

இதோ, இப்போது இன்னொரு சேதி வருகிறது. குஜராத் நரேந்திர மோடி அரசு, பத்தாம் வகுப்பிற்கு சமூக விஞ்ஞானப் பாடப் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அந்தப் புத்தகம் ஓர் அபார காரணம் கூறியிருக்கிறது.

இளம் விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படுவதால்தான் மக்கள் தொகை பெருகுகிறது என்று அந்தப் பாடப் புத்தகம் கூறுகிறது.

மனு தர்ம காலத்திற்கு நாட்டை இழுத்துச் செல்ல இவர்கள் ஆசைப்படுகிறார்களா?

சரித்திரச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்றிப்
பார்க்கிறார்கள்.
நன்றி:-குமுதம் ரிப்போர்ட்டர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

சட்ட சபையில் நடந்தது என்ன?!

முதல்வர் அரசு முன்னாள் முதல்வர் ஆனார்!

நேற்றய சட்டசபை நிகழ்ச்சி பற்றி தமிழ் நாளிதழ்கள்.
தினமந்தி(காலையில் வருவது தினமந்தி பொய்களை தருவது மிகமுந்தி)
சட்டசபையில் வரலாறுகாணாத அடி தடி ரகளை கிழிந்த சட்டையுடன் முதல்வர் அரசு ஓட்டம்.

தினவனி: அசெம்பெலியில் ஆர்பாட்டம் முதல்வர் வெளி நடப்பு செய்தார். தமிழக அசெம்பெலியில் முதல் முறையாக நடந்தது.

தினமலம்: சட்டசபையா! கள்ளுக்கடையா! முதல்வரின் மோசமான நடவடிக்கை உருப்பினர்கள் ஆவேசம்.

சூனியர் அகடம்: சட்டசபையில் நடந்தது என்ன? நமது நிருபரின் புலனாய்வுத்தகவல்.

அமுதம்:சட்டசபையில் சூடு பரக்கும் வாதாம் அம்பானந்தாவின் சூடானசெய்தி.
சுக்கீரன்:முதல்வரின் மோசமான உரை மாரப்பன் மனைவிக்கு உதவி அளிக்கும் திட்டம் ஏதும் இல்லை.

மாலை உரசு: முதல்வர் அரசு முன்னால் முதல்வர் ஆனார்!
அதன் விபரம்:
சென்னை :முதலவர் அரசு இன்று காலை தமிழக கவர்னரை சந்தித்து பேசினார்.
முதல்வரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு
அவரின் பதில்கள்: நான் நம் நாட்டின் நலனுக்கும் நாட்டு மகக்ளின் உயர்வுக்கும் பாடுபடுவேன் என்று உறுதிமொழி செய்து முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் ஆனால் நேற்று நடந்த சபை நிகழ்வுகள் என்னுடய நம்பிக்கையைத் தகர்த்து விட்டது.
இப்படிப்பட்ட உறுப்பினர்களை வைத்துகொண்டு எப்படி மக்கள் நலப்பணிகள் செய்ய முடியும் இவர்களுடன் ஜல்லி அடித்துக்கொண்டு என்பெயரை கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆகையால் ராஜினாமா செய்து விட்டேன். இனி நான் முதல்வர் அரசு இல்லை உங்கள் அரசு. என்று சிரித்தபடி கூறினார், ஒருநாள் முதல்வர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

முதல்வர் அரசு!

சட்டசபையில் இன்று

என்னுடய கற்பனையில் சட்டசபை விவாதம்
சிலவேளை இது உண்மையாகவும் மாறலாம்.


தமிழக சட்டசபை கூடுகிறது அதை பற்றி
காமஹாசனிடம் நிருபர் கேள்வி கேட்கிறார்

நிருபர்: இன்று தமிழக சட்டசபை கூடுகிறது
அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

காமஹாசன்: நம்மகிட்டவந்து இன்னா கேள்வி கேட்டுப்புட்ட
நம்மளுக்கு இந்த அரசியல் கஸ்மாலமெல்லாப் புடிக்காது,
நாலு புட்டி ரத்தம் குடுத்தோமா,நாலு குட்டிக்கு முத்தம் குடுத்தோமான்னு என் ரூட்ல நான் போய்கினுகீறன் நம்மகிட்டவந்து கேள்வி கேட்டுகினு கீரியே.

அடுத்து சட்டசபை வளாகம்.
முன்னாள் முதல்வர்கள் முதல்வராகத்தான் சபைக்கு வருவேன். என்று சபதம் எடுத்து கொண்டதால் அவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!.


சபாநாயகர் மாரிமுத்து சபைக்கு வருகிறார்.அடுத்து
மற்ற எம்.எல்.ஏக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்
அதில் முக்கியமானவர்கள்

மருத மண்ணாரு:நான் நாட்ட..திருத்தப்போறன் அந்த கோட்டய புடிக்க... போறன் அந்த கோட்டய புடிக்க... போறன் என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்.

ஆகஸ்ட் அர்சுன்:தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்க்ஹிந் என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்

நெல்லை நடகுமார்:இடுப்பு எதுக்கடி துடிக்குது வயிறு எதுக்கடி எரியுது என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்

போயஸ் கார்னர் பாப்பா:
எம்பேரு சடயப்பா எனக்கில்லை முடியப்பா என்கிட்ட உள்ளதெல்லாம் தறுதலை பிள்ளையப்பா தறுதலை பிள்ளையப்பா தறுதலை பிள்ளையப்பா என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார் சபாநாயகர் மாரி முத்து விடம் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்.

திருச்சி கப்போலியன்: திருப்பாச்சி அருவாள தூக்கிட்டு வாடா வாடா என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்

தஞ்சை விசயராசு:எனக்கொரு மகன் இருக்கான் அவன் என்னைபோலவே அறுப்பான் என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்.

முதலமைச்சர் அரசு சபைக்குள் செல்கிறார்(நான்தானுங்க)
சபாநாயகர் மாரிமுத்து தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டியபடி எழுந்து குனிந்து கும்பிடுகிறார்.

அவரை அமரச்சொல்லியபடி முதல்வர் இருக்கையில் அமருகிறார்.
சபாநாயகர் மாரிமுத்து போயஸ் கார்னர் பாப்பா எம்.எல்.ஏ கொடுத்த கடிதத்தை முதல்வரிடம் கொடுக்கிறார் நீங்களே படிங்க சபையில் எல்லாருக்கும் தெரியட்டுமே என்று முதல்வர் உத்தரவிட,சபாநாயகர் மாரிமுத்து கடிதத்தை பிரித்து படிக்கிறார்.
மேதகு கணம் பொருந்திய சபையின் நாயகருக்கு எம்.எல்.ஏ
ஆகிய போயஸ் கார்னர் பாப்பா எழுதுவது நான் அவசரமாக இமயமலைக்கு செல்வதால் இந்தக்கூட்டத்திற்கு வரமுடியவில்லை,ஆனா எப்ப வரணுமோ அப்பவருவேன்.

கடுப்பாகிப்போன மருத மண்ணாரு அவர் எப்பவோ வரட்டும் நம்ம ஆரம்பிப்போம் என்கிறார்.

உடனே சபாநாயகர் மாரிமுத்து கம்முன்னுகட,கம்முன்னுகட,கம்முன்னுகட,என்று சொல்ல
முதல்வர் எழுந்து அவர் சொல்லவந்ததை சொல்லட்டுமே என்று சபநாயகர் மாரித்துவிடம் கத்த சரிங்க சாமி என்று கூறியபடி கையால் வாயை பொத்துகிறார்
இதைக்கவனித்த முதல்வர் அப்படியெல்லாம் பன்னப்படாது,
உங்கப் பெயர் மாரிமுத்தா காளிமுத்தா என்று கிண்டலடிக்க சபையோர் அனைவரும் சிரிக்கிறார்கள்.

விவாதம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்
முதல்வர்:மத்திய அரசாங்கம் அதிகமான நிதியை நமது மாநிலத்திற்கு வழங்கி உள்ளது,அந்த நிதியைக் கொண்டு நமது மாநிலத்தில் பல நல்லபணிகளை செய்ய அரசு நாடியுள்ளது ஆகவே அனைத்து உருப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி நமது மாநில முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதைகேட்ட உருப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
முதல்வர் தொடருகிறார் நீங்கள் சந்தோசப்படுகிற மாதிரி
உங்களிடம் இந்த நிதியை வழங்காமல் அரசே நேரடியாக திட்டங்களை செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

மருத மண்னாரு குருக்கிட்டு அரசின் இந்த முடிவிற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்,அரசின் செயல் எங்களை அவமானப் படுத்துவதாக உள்ளது.

ஆகஸ்ட் அர்சுன்: ஜெய்ஹிந்! ஜெய்ஹிந்!

நெல்லை நடகுமார்:ஏனுங்க சாமி நல்ல ரோசனபண்ணித்தான்
சொல்லுறியளா.

திருச்சி கப்போலியன்: எடு அறுவாள வக்காளி என்ன நனைச்சி இருக்கான் அவன்.

உடனே சபாநாயகர் மாரிமுத்து கம்முன்னுகட,கம்முன்னுகட,கம்முன்னுகட,
அவை அடக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர் உரையை தொடரலாம்.

முதல்வர்:நன்றி சபையோர் அனைவரும் நான் சொல்வதை முழுவதுமாக கேட்டுவிட்டு உங்களின் கருத்துக்களை கூறலாம்.
நம் மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லாத எல்லா கிராமங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் கட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மருதமன்னாரு:குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்.
பள்ளிக்கூடங்கள் கட்டுவதால் அரசுக்கு இழப்புதான் ஏற்படும்,
அதனால் எந்த வருவாயும் ஏற்படப் போவதில்லை.ஏற்கனவே படித்த மாணவர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை, இந்ததிட்டத்தின் மூலம் வேலை இல்லாபட்டதாரிகள் அதிகமாவார்கள். அதற்கு பதிலாக எல்லாகிரமங்களிலும் தியேட்டர் கட்டினால் வரி என்ற பெயரில் மறைமுகமாக அரசுக்கு நிதி கிடைக்கும்.,கேபிள் டி.வி, சி.டி க்களுக்கு தடைவிதிக்க வேண்டும் இதனால் தியேட்டருக்கு மக்கள் அதிகம் வருவார்கள், சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கும் உதவிசெய்ததாக இருக்கும்.இப்பொழுது திரைப்படத்துறை மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளது,நடிகர் நடிகைள் உடுக்க துணியில்லாமல் மிகவும் கஷ்ட்டப் படுகிறார்கள். உடுக்க உடை இல்லத காரணத்தினால் குறைந்த ஆடையை அணிந்து கொண்டு தொழில் செய்ய (நடிக்க)வேண்டி உள்ளது. இதை நான் கற்பனையாக சொல்லவில்லை இப்பொழுது வரும் திரைப் படங்களை முதல்வர் பார்த்தால் அவர்களின் கஷ்டம் புரியும்.

முதல்வர்:கல்விக்காக இன்று செலவிடுவதை இழப்பு என்று சொல்கிறீர்கள்,ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை இப்ப உள்ள சமுதாயத்தை முழுமையாக கல்வி கற்றவர்களாக ஆக்கிவிட்டால் இனிவரும் சமுதாயத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள் என்ற தொலை நோக்குப்பார்வையுடன் அரசு சிந்திக்கிறது.படித்த பட்டாதாரி மாணவர்கள் விவசாயம் செய்வதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.அறிவியல் பூர்வமாக விவசாயம் செய்ய அரசு அவர்களுக்கு உதவும், அதன் மூலம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறுவதோடல்லாமல் நாம் விவசாயப் பொருட்களை அண்டை மாநிலத்திற்கு விற்பனை செய்யலாம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை அதிகப்படுத்தலாம்.

திருச்சி கப்போலியன்:ஆங்... கிழிப்பிய தண்ணி இல்லாம என்னத்த புடுங்குவிய.

தஞ்சை விசயராசு:என்மகன் பேரு சாம்பு அவன் உடுவான் அம்பு நீபண்ணுனா வம்பு நான் உடுவேன் பாம்பு.

சபநாயகர் மாரிமுத்து:இது சட்டசபை பாம்பு உங்க வீட்டுல போய்வுடுங்க, உங்க தாடிக்குள்ள பாம்பு இருக்கப்போவுது மொதல்ல தாடிய வெட்டிட்டு வாங்க.

முதல்வர்: காவிரி பிரச்சினையை மனதில் கொண்டு கோபப்படுகிறர் உருப்பினர்.தண்ணீர் பிரச்சினை தீர்ப்பதற்கும் அரசிடம் திட்டம் உள்ளது.காவிரி ஆற்றில் கோடைக் காலங்களில் தண்ணீர் வராததால் அல்லது கர்நாடகம் தண்ணீர் தராததால் மேட்டூர் அனைநீரின்றி வறண்டு போகிறது ஆனால் மழைக் காலங்களில் அதிகமான நீர்வருவதால் அணைநிரம்பி வெல்லப்பெருக்கு ஏற்படுகிறது வீணாக எல்லாத்தண்ணீரும் கடலில் கலக்கிறது,அப்படி வீணாகும் தண்ணீரை தடுக்கும் நோக்கில் காவிரி ஆற்றில் மேலும் ஒரு அணைகட்ட அரசு உத்தேசித்துள்ளது அதன் மூலம் நீர் விரயமாவது தடுக்கப்படுகிறது,நிலத்தடி நீர் பெருக வாய்ப்புள்ளது. மேலும் அந்த அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் அரசு எண்ணியுள்ளது.
மக்கள்நலனை கருத்தில் கொண்டு செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது, எனவே அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் வேண்டி அமறுகிறேன்.

ஆகஸ்ட் அர்சுன்:முதல்வரின் உரையில் மக்கள் நலன் மக்கள் நலன் என்று குறிப்பிட்டாரே தவிர நாட்டு நலன் பத்தி ஏதும் சொல்லவில்லை. பாக்கிஸ்த்தானில் இருந்து ஒரு தீவிரவதா கூட்டம் நம் நாட்டில் புகுந்து நம் நாட்டின் மண்ணை அள்ளிப்போக இருப்பதாக தினமலம் பத்திரிக்கையில் சேதி வந்துள்ளது அதைப்பற்றி அதை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் தென்னங்கன்று கொண்டு போறேன், மாங்கன்று கொண்டு போறேன் என்று அதோடு நம் நாட்டின் மண்ணையும் சேர்த்து அன்னிய நாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் தேச துரோகிகள்.அதை தடுப்பதற்கு அரசிடம் எந்த திட்டமுமில்லை. அரசின் இந்தச் செயலை வண்மையாக கண்டிக்கிறேன். நம் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட வெளி நாட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது பாரத மாதாக்கு ஜே!

மருத மண்ணாரு, ஆகஸ்ட் அர்சுன், நெல்லை நடகுமார், திருச்சி கப்போலியன் ஆகியோர் இதையேத்தான் நாங்களும் சொல்கிறோம் என்றுகோஷம் போடுகிறார்கள்.

தஞ்சை விசயராசு:போடாதடா போடாதடா கோஷம் மீறி போட்டுப்புட்டா ஆகிடுவ நாஷம்.

முதல்வர்: பாரத மாதா! பாரத மாதா! என்று கோசம் போடுகிறீர்களே நம் பாரதத்தில் எத்தனை மாதாக்கள் உடுக்க உடையும் உண்ண உணவும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா?

மருத மண்ணாரு: தவப் புதல்வருக்கு மணிமண்டபம் கட்டுவது விசயமாக எந்த அறிவிப்பும் இல்லை, சுதந்திரத்திற்காக பாடுபட்ட மறைந்த நடிகர் களுக்கும் மணிமண்டபங்கள் சிலைகள் அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை நடகுமார்:மணிமண்டபங்கள் அனைத்தும் கடற்கறையில் கட்டவேண்டும் அப்படி கட்டுவதால் இரண்டு நன்மைகள் உண்டு அவர்களின் புகழ்மறையாமல் காப்பாற்றப்படும்
சுனாமி வரும்போது மணி மண்டபங்கள் தடுப்புச்சுவர்போல் அமைந்து கடல் நீர் வராமல் தடுக்கமுடியும்.

முதல்வர்:தியேட்டர் கட்டுவது மணிமண்டபம் கட்டுவதற்கெல்லாம் அரசாங்கத்தின் பணத்தை செலவுசெய்ய முடியாது. அதுபோல் சிலைவப்பதற்கும் மணிமண்டபம் கட்டுவதற்கும் தடைவிதிக்கும் விதமாக ஒரு அவசரசட்டம்போட அரசு தீர்மானித்துள்ளது.
.
அரசின் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது பள்ளிக்கூடங்கள் கட்டுவது அணைகட்டுவது போன்ற திட்டங்களை உடனே திரும்பப் பெறவேண்டும் தியேட்டர் கட்டுவதற்கும் மணிமண்டபம் கட்டுவதற்கும் உடனே உத்தரவிட வேண்டும் அதற்குண்டான நிதியை எங்களிடம் தரவேண்டும் என அனைவரும் கோஷமிட்டபடி ஆர்பாட்டம்செய்ய.

முதல்வர்:மக்கள் நலப்பனிகளை செய்ய நீங்கள் அனுமதிகாததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.

முதல்வர் வெளியேருகிறார்.!

சபாயநாயகர் மறுதேதி குறிப்பிடாமல் சபையை ஒத்திவைத்தார்.

இவ்வாறாக தமிழக சட்டபையின் இன்றய கூட்டம் அமைதியாக முடிந்தது.!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது