Saturday, August 27, 2005

 

பதவிப்பிரமானம்

முதல்வர் பொறுப்பு ஏற்கும் அரசு ஆகிய நான் ஆண்டவனுக்கும் என்னுடய மனசாட்சிக்கும் பயந்து செய்து கொள்ளும் உறுதிமொழி.
நான் நம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் நம் நாட்டின் நலனுக்காகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன்.
ஊர்வலம் என்ற பெயரில் ஊதாரித்தனம் பண்ணாமலும்,மாநாடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றமலும்,பொதுக்கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளை அடிக்காமலும்,கமிஷன் வாங்குபவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவர்கள் பெயரில் விசாரனை கமிஷன் அமைக்கிறேன் என்றுமக்களை ஏமாத்தாமலும்,ஊழல் செய்பவர்களுக்கு ஒத்து ஊதாமலும்,ரவுடிகளுக்கு காவடி தூக்காமலும், நீதி செய்பவருக்கும் அநீதியை தடுப்போருக்கும் துணை நிற்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.என்னுடய எல்லா நற்செயல்களுக்கும் சபையின் எல்லா உருப்பினர்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் தருவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பர்க்கிறேன்.
ஜெய்ஹிந்! ஜெய்ஹிந்! ஜெய்ஹிந்!

குறிப்பு: நாளை சட்டசபை கூட்டம் நடைபெறும்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 25, 2005

 

ஆத்தா உன்கோவிலிலே.

சபலபுத்திக்காரன் எழுதுவது

முன்னொரு காலத்தில் கோயிலுக்கு சாமிகும்பிடப் போயிருந்தேனுங்க உண்மையாலும் சாமிகும்பிடத்தானுங்க
கொவில் வளாகத்தில் நுழைந்தவுடன் என் பார்வையில் பட்டது, வயதான தம்பதிகள் ஒரு ஓரமா உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்,வீட்டில் மருமகளின் ஆட்சி போல என்று நினைத்துக் கொண்டேன். இன்னொரு பக்கம் காதல் ஜோடி ரெம்ப நெருக்கமாக அமர்ந்து கொண்டு காதலியின் கையை காதலன் பற்றியபடி உரையாடிக் கொண்டிருந்தார்கள்,அப்படியே போய் சாமிமுன்னால் நின்னேனுங்க எதிர்ல ஒருபொண்ணு கண்ணை மூடியபடி பக்தியோட சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தாங்க,அவங்க கட்டி இருந்த சேலை நல்லா இருந்ததுங்க மெய்யாலுமே சேலை நல்லா இருந்ததுங்க.அப்படியே என்னுடய பார்வை கிழே இறங்கியது அந்த ஜாக்கெட்டுக்கும் சேலைக்கும் இடையில் ஒரு பகுதி பார்வையில் பட்டிடுச்சிங்க, (அந்த பொண்ணு கண்ணை முடியபடி இருந்ததால் நான் பார்த்ததை கவனிக்கவில்லை பார்த்து இருந்தா என்னுடைய ஜிப்பை பார்த்துஇருக்கும்.)கபக்குன்னு நானும் கண்ணை மூடியபடி சாமிகும்மிட முயற்சி பண்ணினேனுங்க என் நினைவுக்கு சாமிவரவேயில்லிங்க. அந்த ஜாக்கெட்டுக்கும் சேலைக்கும் இடையில் ஒரு பகுதிதாங்க மூடிய கண்ணிலும் தெரிந்தது.என்மனசாச்சி கேட்டதுங்க வயதான தம்பதிய பார்த்த காதல் ஜோடியை பார்த்த அதெல்லாம் உன்நினைவுக்கு வராமல் இந்த கொஞ்சம் பகுதிதான் உன்நினைவுக்கு வரணுமா அப்படின்னு.
இப்பவும் சாமிகும்பிடும் போது அந்த ஜாக்.... ஏய் ஏய் சும்மா எத்தன தடவ அதயே சொல்லுவ பார்திபன் கிட்டவேலைபார்தியா மனசாச்சி பேசுதுங்க! மனசாச்சி பேசுது!
என்ன பன்ரது படைக்கும்போதே ஆண்டவன் நம்ம மண்டையில அப்படி ஒரு புரோகிறாம் பண்ணிப்போட்டான்.
இதுக்கு எதாவது ஒரு தடா போட்டங்கன்னா என்னைப்போல் சபலபுத்திக்காரங்க நிம்மதியா சாமி கும்பிடமுடியும்.
ஆடு வெட்டுறதுக்கும் கோழி வெட்டுறதுக்கும் அவசர சட்டம் போடுர அரசாங்கம்.இதுக்கு எதாவது சட்டம் போடுவாங்களா?

இப்படிக்கு
சபலபுத்திக்காரன்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

கண்ணகி தீவிரவாதியா?

நம்ம பக்கத்துவீட்டுக் காரர் நம்மகிட்ட வந்து நான் சொல்லுகின்ற ஆள் கூடத்தான் நீ பேசவேண்டும், நான் சொல்லுகின்ற கடையில் தான் பொருள் வாங்கவேண்டும், நான் சொல்லுகின்ற போதுதான் நீ தூங்கவேண்டும், என்னுடய அனுமதி இன்றி அல்லது உத்தரவின்றி எதுவும் செய்யக்கூடாது, என்று சொன்னால் நாம் கேட்போமா, அப்படி அவர் சொல்லுகிறபடி நடந்தால் நாம் வீரமுள்ள அல்லது தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள ஆண் என்று நம்மை யாரும் சொல்லுவார்களா?.பக்கத்து வீட்டுக்காரன் என்ன நம்ம அப்பா,அம்மா அல்லது அண்ணன் சொன்னாலே கேட்கமாட்டோம்.
ஆனால் அமெரிக்கா, பிரிட்டீஷ் போன்ற நாடுகள் சொல்லுவதற்கெல்லாம் உலக நாடுகள் தலையாட்டுகின்றன.நான் எதை வேண்டுமென்றாலும் செய்வேன் யாரும் எதும் செய்யக்கூடாது ஏன் என்று கேட்கவும் கூடாது, நான் எதை வேண்டுமென்றாலும் வச்சிருப்பேன் நீங்க ஒன்னும் வச்சிக்கக் கூடாது என்னை ஏன்வச்சிருக்க என்று கேட்கவும் கூடாது அப்படின்னு சொல்லிகிட்டு, இருக்கிறவன் கண்ணுல ஒருத்தன் விரலவுட்டு ஆட்டுறான்பாரு அது ரெம்பபுடிச்சிருக்கு!.

உலகத்துக்கே நான்தான் நாட்டமை என்று கட்டப் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு அராஜகம் பண்ணிக்கிட்டு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கின்றான்,ஐ.நா. சபையை மதிக்காமல் ஈராக்மீது போர் நடத்துகிறான், ஐ.நாவில் இவன் சொல்லுரபடிதான் பேசவேண்டும். நம்மசட்டசபையை விட ஐ.நா மோசமான நிலையில் உள்ளது, அதன் தலைவரை பார்க்கும் போது நம்ம காளிமுத்து எவ்வளவோ தேவலாம்.இப்படி அராஜகம் பண்ணுகிரவனை தட்டிகேட்க திரானி இல்லாமல் உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக இவன்களுக்கு ஜல்லி அடிக்கும்போது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை எதிர்த்து போரடுகிறார்களே கில்லி அடிக்கிறார்களே அவர்கள் வீரர்களய்யா.
இவர்கள் ஏன் இப்படி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று நாம் சிந்தித்து பர்த்து இருப்போமா?. சொத்து தகறாறா அல்லது அமெரிக்கா, பிரிட்டீஷ் அதிபர் பதவிக்காகவா. நீதி என்ற பெயரில் இவர்கள் செய்கின்ற அநீதியை எதிர்த்து போறாடுகிறார்களே .இவர்கள்தானய்யா வீரமுள்ள அல்லது தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள ஆண். அவனுக்குப் பெயர்தான் தீவிரவாதியா?
ஈராக் நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கு பல கற்பனை கதைகளை சொல்லி அந்த நாட்டின் மீது போர் நடத்தி பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை பலகொலைகளை நடத்திய தோடல்லாமல் அதை எதிர்த்து போரடும் அந்நாட்டு மக்களை சிறைச்சாலைகளில் சித்திரவதை செய்பவர்கள் அகிம்சாவாதிகள்,உரிமைக்காக சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள்.ஆனால் ஈராக்கில் இறந்து போகின்ற அமெரிக்க கூட்டனியின் ஆக்கிரமிப்புபடை வீரர்களின் உறவினர்கள் அமெரிக்க அதிபர் புஷ்சை திவரவாதி என்கிறார்கள்!.அநீதியை தட்டிக்கேட்க உலக நாடுகளுக்கு திரானிதான் இல்லை.இதை கண்டிக்க மனசாட்சியுமா இல்லை.உலக நடுகள் நடத்துவது தீவிரவாதத்திற்கு எதிரான போரட்டமில்லை,அமெரிக்கவை, அநீதியை செய்பவனை, அக்கிரமக்காரனை எதிர்ப்பவர்களை எதிர்த்து போராடுகிறார்கள்.

எல்லா தீவிரவாதத்தின் பின்னாலும் ஒரு அநீதி இருக்கும் அல்லது ஒரு அடக்குமுறை இருக்கும் அல்லது பாதிப்பு இருக்கும் இதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்.பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையை எரித்த கண்ணகியை தீவிரவாதி என்று நாம் இதுவரை சொன்னதில்லியே! பாண்டிய மன்னன் செய்தது தவறு என்று ஜல்லிதானே அடித்து இருக்கின்றோம்.
பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையையும் மதுரை மக்களையும் கண்ணகி ஏன் எரித்தாள் என்று யாரவது கில்லி அடித்து இருப்பார்களா?
இன்றய தீவிரவாதாம் என்பது, அக்கிரமம், அநீதி செய்கின்றவர்கள் அல்லது அமெரிக்கா, பிரிட்டீஷ் என்ற ஆலமரத்தின் விழுதுகள் அந்த விழுதுகள் தறையை தொடுவதற்குமுன் அக்கிரமம் அநீதி என்கின்ற ஆலமரத்தை வெட்டுவதே சாலச்சிறந்தது.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 24, 2005

 

நான் ஒரு முட்டாளுங்க

புறந்தூய்மை நீரான் அமையும்;அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் (குறள்)

முட்டாள் கூட பேசஎட்டு ஆள் வேண்டும்.

நேசகுமார்=ஆரோக்கியம்+புலிப்பாண்டி
1.அபூ உமர்
2.அப்துல் குத்தூஸ்
3.அப்துல்லாஹ்
4.அபூ முஹை
5.நல்லடியார்
6.சலாகஹுத்தீன்
7.அமைதிநேசன்
8.ஆரோக்கியம் உள்ளவன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 23, 2005

 

சொர்ணமால்யாவின் சோகக்கதை

என்னைப் போல்யாரும்
கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க!
இன்று நாம் பண்பாட்டைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், அந்தப் பண்பாட்டைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை.

பண்பாட்டைக் கற்றுத் தருவது என்றால் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று புதிது புதிதாகக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருப்பது அல்ல. மொத்த உடம்பும் மறைகிற மாதிரிதான் பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்கள் என்றால் சிகரெட் பிடிக்கக் கூடாது. மது குடிக்கக் கூடாது என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் கண்டிஷன் போட்டுக் கொண்டிருப்பதல்ல பண்பாடு.

ஸ்லீவ்லஸ் பிளவுஸ் போட்டுக் கொள்வதற்கும் பண்பாட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிகரெட் பிடிப்பதற்கும் பண்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களைப் பல இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நம் வீட்டுக் குழந்தைகளை இன்டர்நெட் பார்க்காதே என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம். மனிதன் எப்போதுமே தவறுகளைத்தான் முதலில் செய்கிறான். புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் அந்த மொழியில் உள்ள கெட்ட வார்த்தைகளைத்தான் முதலில் கற்றுக் கொள்கிறோம். ஆனால், அதோடு யாரும் நின்றுவிடுவதில்லை. அடுத்து நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்கிறோம்.

டி.வி., இன்டர்நெட், செல்போன் என்று உலகமே உள்ளங்கை அளவுக்கு சுருங்கி விட்ட இந்தக் கால கட்டத்தில் எஃப் டி.வி பார்க்காதே, குட்டைப் பாவாடை போடாதே, காதில் வளையத்தை மாட்டிக் கொள்ளாதே என்றெல்லாம் நாம் சொல்லக் கூடாது. அப்படியே சொன்னாலும் அவர்களால் அதுபடி நடக்கவும் முடியாது. அப்படி நடப்பது இயற்கைக்கு எதிராக நடக்கிற மாதிரி, தகாத விளைவுதான் ஏற்படுத்தும். பண்பாடு என்பது, என்னவென்று தெரிந்துகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளுவதல்ல. எல்லாவற்றையுமே தெரிந்துகொண்டு, அந்த விஷயம் நமக்குச் சரிப்பட்டு வருமா? எந்த அளவுக்கு அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்பதை நன்றாக யோசித்து அதன்படி நடப்பது.

இன்றைய தேதியில் நம்முடைய பெற்றோருக்கு, முக்கியமாக பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு, மிகப் பெரிய அதிர்ச்சியாக இருப்பது ‘டேட்டிங்’. டேட்டிங் என்றாலே அது என்னவென்றுகூட புரிந்து கொள்ளாமல் பயத்தில் நடுங்கி, கோபத்தில் கொந்தளித்து, கரித்துக் கொட்டுகிறார்கள். டேட்டிங் என்பது ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் ஒரு ஹோட்டலுக்கோ அல்லது பார்க்கிற்கோ சென்று பேசிக் கொண்டிருப்பதுதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு இந்த டேட்டிங் நிச்சயம் பயன்படும். எனவே, அதை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், டேட்டிங் என்கிற பெயரில் யார் கூப்பிட்டால் போகலாம்? எந்தெந்த இடத்துக்குப் போகலாம்? எந்த அளவுக்கு பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் சகிக்கலாம்? ஏதாவது பிரச்னை என்றால் எப்படி சமாளிப்பது? என்கிற மாதிரியான விஷயங்களை மனம் திறந்து அக்கறையோடு எடுத்துச் சொல்லலாம். இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்லப்படும் அட்வைஸ்களை விட நட்பு ரீதியில் விளக்கிச் சொல்வதைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

தண்ணீரைக் கண்டாலே ஒதுங்கி விடு என்று சொல்வதை விட நீச்சலடிக்கக் கற்றுக் கொடுப்பது புத்திசாலித்தனம். அது சரி, அம்மா, அப்பாவே டேட்டிங் பற்றி எப்படிச் சொல்வது? எனவே, அந்த விஷயமே வேண்டாம் என்று சொல்வது திருட்டுத்தனங்களுக்குத்தான் வழி வகுக்கும். உங்கள் மகனை டேட்டிங்கிற்கு போகவே கூடாது என்று சொன்னால் அவன் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக போக நிச்சயம் வாய்ப்புண்டு.

நண்பர்கள் போல எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி என்னை வளர்த்தார்கள் என்னுடைய பெற்றோர்கள். அதனால்தான் அடுத்தடுத்து இரண்டு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்ட போதும் உடைந்து போய்விடாமல், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிந்தது. என்னை மாதிரி மிகக் குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை யாரும் கண்டிருக்கவும் முடியாது. இருபத்தோரு வயதில் இவ்வளவு கஷ்டமும் அனுபவித்திருக்கவும் முடியாது. ‘நான் இவ்வளவு கஷ்டப்படுவேன்னு நீ நினைச்சியாம்மா?’ என்று ஒருமுறை என் அம்மாவிடம் கேட்டேன். ‘எந்த அம்மாவாவது தன் குழந்தை கஷ்டப்படப் போகிறாள் என்று நினைப்பாளா?’ என்று கேட்டார். பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்காததைச் சரி செய்யப் பார்த்தோம். முடியவில்லை. பிடிக்காத வாழ்க்கையை பொறுத்துக் கொண்டு வாழ்வதை விட, வேண்டாம் என்று ஒதுங்கி விட்டோம். இதற்காக வீட்டில் யாரும் என்னைக் குறை சொல்லவில்லை. காரணம், அவர்கள் என்னை சரியாகவே வளர்த்திருக்கிறார்கள். நானும் சரியாகத்தான் வளர்ந்திருக்கிறேன். இன்று வரை நன்றாக யோசித்து என் பண்பாட்டுக்கு சரியென்று பட்டதை மட்டுமே செய்கிறேன்.
நன்றி :குமுதம் 17/8/2005


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

புதிய வெளியிடு

நமது தியேட்டரில் கீழ்கண்ட
புதிய திரைப்படங்கள் விரைவில் திரையிடப்படும்
என இந்த அறிவிப்பின் மூலம் மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சொர்ணமால்யாவின் சோகக்கதை.

நான் ஒரு முட்டாளுங்க.

கண்ணகி தீவிரவாதியா?!

ஆத்தா உன்கோவிலிலே.

அனைவரும் வருக ஆதரவு தருக!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 22, 2005

 

குட்டி சாமியார்!.

இன்றய தினமலர் பத்திரிக்கையில் குட்டி சாமியார் பக்திமிகு ஸ்ரீ பரனீதரன் அவர்களை பற்றிய செய்தியில் இருந்து சுட்டவையும், நான் சொன்னவையும்

இதனால் சங்கரமடத்தின் அடுத்த வாரிசு:-
இன்றய குட்டி சாமியார் நாளை குட்டியை வச்சி இருக்கிர சாமியார் ஆவார் என எதிர்பார்ப்போம்!

உறவுகளே கிடையாது என்றும் தத்துவம் பேசி போலீஸாரை குழப்பினார்:-
இனி நிறைய பேரோட உறவு வச்சிக்கலாம் என்று நினைத்து சொல்லி இருப்பாருங்க!.

திடீரென பரனீதரன் வெளியே தலை காட்டாமல் இருந்தார்:-
சங்கராச்சரியரும் இப்படித்தான் கொஞ்சநாள் காணாம போயிருந்தாரு!

18வயது வரை அவர் பெரிய காரியாங்களில் இறங்காமல் இருப்பது நல்லது:-
பெண்களுக்குத்தான் 18வயது சாமியாருக்குமா?! (சங்கராச்சாரியார் போல 2ம் நம்பர் காரியமா?)

பக்தர்கள் என்னை வந்து சந்தித்து ஆசி பெற்றுச் செல்ல ஒரு இடம் தற்போது அமந்துள்ளது:-
ஆசி மட்டும்தானா!.
http://www.dinamalar.com/2005Aug22/imp13.asp

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

முக்கியச் செய்திகள்!

தினமனி பத்திரிக்கையின் இன்றய முக்கியச் செய்திகளுக்கு ஒரு பின்னூட்டம்


//வன்முறையை எந்த வடிவிலும் பொறுத்துக் கொள்ள் முடியாது
நக்சல்களுக்கு மன்மோகன் எச்சரிக்கை://

அப்படியே ஆர்.எஸ்.எஸ். குண்டர் சாரி தொண்டர்களிடமும் சொல்லிப்போடுங்க.

//மாதா அமிர்தானந்த மயியை கொலை செய்ய முயற்சி://
தொழில் செய்து பொழைக்க முடியாது போல!

//கட்சிக்கு எதிராக செயல்படவில்லை:குரானா விளக்கம்.//

மாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொண்குடம்

//நடிகர் கார்த்திக்கின் சரணாலயம் விழாவில் ரசிகர்கள் ரகளை:போலிஸார் தடியடி//

பேசாம காங்கிரஸில் சேர்ந்துடுங்கப்பா?

//முத்திரைத்தாள் மோசடி விவகாரம்:டி.ஜி.பி.ரமணிக்கு உள்துறை நோடீஸ்://

நோடீஸ்ல மோசடி இல்லாமல் இருந்தா சரி.

//வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழக அரசு வித்திடவில்லை:ப.சிதம்பரம்.//

முதல்ல தண்னிய உடுங்கய்யா அப்பால வித்திடலாம்.

//அரசியல் வாடையே ஆகாது-ஷருக்கான்//

மும்பாய் ரெம்ப நாரிப்போச்சோ

//ரஜினி நடிக்கும் புதியப்படம்-சிவாஜி.//

சிவாஜிபிலிம்ஸ் படம், அடுத்து படத்தின் பெயரே சிவாஜி. டாக்டரே ஒன்னும் பண்ணமுடியாது.

//கைவிட்டார் கணவர்: நீதிமன்றத்தில் நடிகை கரிஷ்மா மனு//

பத்தோடு பதினொன்று

//நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை//

இந்த வருடத்தில் இந்தியாவில் பிறந்த முதல் ஆண் குழந்தை.

//இடஒதுக்கீடு உச்சாநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை:பாமாகா வலியுறுத்தல்//

அப்பாட நம்ம கடமை முடிந்தது.

//சேலத்தில் ஆசிரமம் துவக்கினார் இளந்துறவி//

ரெம்பப் பேரு சிரமப்படப் போகிறார்கள்.

//கதிர்கமரின் அஸ்தியால் குடும்பத்தில் புகைச்சல்//

அஸ்தியிலும் புகையா?.

//காமன்வெல்த் குத்துச்சண்டை:இந்தியா சாம்பியன்//

இந்திய மக்கள் தொகையை பார்த்தே தெரிஞ்சி இருக்கனும், இப்பவாவது தெரிஞ்சிக்கங்க(காமன்வெல்த் என்பதை கவனிச்சுக்கோங்க)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

மாயவரத்தான் நம்பர் 1

நீங்கத்தான் எப்பவுமே நம்பர் 1 போதுமா!

நமக்கு முகஸ்துதி புடிக்காது, நீங்க ரொம்ப கோவமா இருக்கீக அதனாலத்தான். ஒன்னும் தப்பா நினைக்காதீக.

மாயவரத்தான் தியேட்டர் ரொம்ப சூடாக இருப்பதால் இந்தப்படத்தை நம்ம தியேட்டரில் போடவேண்டியதாக ஆயிடுச்சு,
வருத்தப்படாதிக.

நாளது August 20, 2005 7:28 PM-ல், நம்ம அரசு என்ன கருத்து சொல்லியிருக்காரு பாருங்க.....->
//ரஜினியின் புதிய படம் 2006-ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
2006ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று எதிர்பார்ப்போம்!.


நாளது August 20, 2005 9:39 PM-ல், நம்ம மாயவரத்தான்... என்ன கருத்து சொல்லியிருக்காரு பாருங்க.....->
//2006ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று எதிர்பார்ப்போம்//
2005-ல் நீங்கள் என்னத்த கிழித்து விட்டீர்கள் இந்தியாவை வல்லரசாக்க 'அரசு'?!

அப்ப ஆவாதுங்களா!
நீங்கவேற ஜாக்கிசான் லெவலுக்கு எழுதினீகளா,
நீங்க வேற நம்பர் 1, இந்தியாவையும் நம்பர் 1 அக்கிடுவீக என்று நெனச்சேனுங்க
தப்புதாங்க!

என்னத்த கிழிக்க சொல்லுரிய இருந்த கோவணாத்தையும் உருவி தோரணம் கட்டிபுட்டீக அப்புறம் என்னத்த கிழிக்க, இருந்தாதானே கிழிக்க. அங்க ஒருத்தரு 3000 ருபாய் கடன் அப்படீன்னு பயமுறுத்துராரு நம்ம குடும்பம் வேறபெருசு
(இந்தியாவின் மொத்த மக்கள் தொகை: 1,065,070,607)அதுல நிறைய தறுதலை புள்ளைங்கவேற வேலை வெட்டிக்கு போகாம ஒரு படத்தை 102 தடவை பார்த்திட்டு தியேட்டரே கதின்னு கெடக்குது இந்த லட்சனத்தில என்னத்த கிழிக்க சொல்லுரிய.

ஆண்டவன் தான் காப்பத்தனும் அட ஒங்கள இல்லீங்க, எங்களை சொல்லுறேன்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, August 21, 2005

 

காந்தி தேசமே...!

குஜராத் பள்ளி பாடப் புத்தகத்தில் “கேவலமன” புரட்டு!
*சுதந்திரத்தை காந்தியே வாங்கித்தரலையாம்
ஆமதாபாத்:
*பிரிட்டிஷ் ஆதிக்கத்தினர்,அவர்களின் பலவீனத்தால் இந்தியாவில் இருந்து வெளியேறினர்.
*சத்தியா கிரகப் போர் மேற்கொண்டது தவறு என்று காந்திஜி வருந்தினார்.
*ஜனாதிபதியை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்றனர்.
*குழந்தை பிறப்பு அதிகரிக்க விதவை திருமணங்களே காரணம்.

இவ்வளவு கேவலாமான தவல்களும் நம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.எல்லா கூத்தும்,ஒன்பதாவது வகுப்பு “சோஷியல் சயின்ஸ்”பாடப் புத்தகத்தில் தான்.குஜராத் மாநில செகண்டரி கல்வி வாரியம் இந்த புத்தகத்தை தயார் செய்துள்ளது.
இப்படி வரலாற்றை கண்டபடி “புரட்டுக்களாக”தந்துள்ளது என்றால்,இளைஞ்சர்கள் பற்றிய ஒரு பாடத்தில்,இந்திய இளைஞர்கள் எல்லாருக்கும் சரிவர சத்துணவு இல்லை.அவர்கள் இப்போது கிடைக்கும் சில தவறான உணவுகளை சாப்பிட்டு, உடல்நலம் பாதிக்கின்றனர்.அவர்களால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. அதுபோல, சிறுமிகளுக்கு சத்துணவு இல்லாததால்.ரத்தசோகை ஏற்படுகிறது என்று ஒரே சாடல் புராண்மாக தகவல்கள் உள்ளன.
இன்னொரு பாடத்தில்,”ஒரு காலத்தில் தீரமிக்க இந்திய இளைஞர்கள் இருந்தனர்.அதுபோல் நாம் நாட்டுபற்றை அதிகம் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் மக்கள்தொகை குறையும்”என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைவிட வேதனையான தகவல் இன்னொரு பாடத்தில் எழுதப்பட்டுள்ளது.”முன்பொரு காலத்தில் இந்திய தேசிய புரட்ச்சிப்படை இருந்தது. அதில் ஒவ்வொரு இளைஞர்களும் பங்காற்றினர்.அவர்கள் தீரத்தை பற்றி சொல்லவேண்டுமானால், அவர்கள்சாவை மடியில் கட்டிக்கொண்டு அலைந்தவர்கள்.அவர்கள் ராணுவத்திடம் பிடிபட்டால்,உடனே. இன்குலாப் ஜிந்தாபாத் வந்தேமாதரம் என்று கோசமிட்டு தற்கொலை செய்து கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் சில சிறிய பிழைகள் உள்ளன.அவற்றை புதிய இனைப்பு சேர்க்கப்பட்டு சரிசெய்யப்படும் .மற்றபடி எந்த தவறும் இல்லை என்று கூறிவிட்டது கள்விபோர்டு.எனினும்,மனித உரிமை அமைப்புகள்,தியாகிகள் அமைப்பினர்,கல்வியாளர்கள் சிலர் என்று பலதரப்பிலும் எதிர்ப்பு அதிகரித்து வருகிரது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்த “புரட்டு” தகவல்களை வாபஸ்பெற்று புதிய பாடப் புத்தகத்தை கொண்டுவருவரா என்பது கேள்விக்குறியான விஷயமே.
நன்றி : தினமலர்-18/8/2005

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது