Saturday, August 20, 2005

 

(அ)நாகரீகம்

நம் எல்லோரையும் அன்றாடம் பாதிக்கின்ற விசயம் வேதனை படவைக்கின்ற விசயம் பெண்களை கேவலப்படுத்துகின்ற அசிங்க படுத்துக்கின்ற செயல்கள். சிலபேர்கள் பெண்களை கிண்டல் செய்யும் போது கேட்கிற நமக்கே மனதுக்கு கஷ்டமாக இருக்கிணன்றதே அந்த பெண்ணின் தாய்,தந்தை,உடன்பிறந்தவர்கள் கேட்டால் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று எண்ணுவதுண்டு. அவர்கள் கிண்டல் செய்ய பயன்படுத்துகின்ற வார்த்தைகளை எழுதினால் இதை படிப்பவர்களும் (எல்லோரும் அல்ல) பயன்படுத்துவார்களோ என்ற அச்சத்தால் அந்த வார்த்தைகளை தவிர்த்துக்கொள்கிறேன்.
கிண்டல் செய்கின்ற ஆண்களிடம் பெண்கள் கேட்கின்ற ஒரே கேள்வி அக்கா,தங்கையோட பிறக்கலியா?. அக்கா,தங்கையோட பிறந்து இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.நம் தாயும் பெண், நம்முடய மனைவியும் பெண் என்ற உணர்வு இருந்தாலே போதும்.
இது போன்ற கிண்டல்களுக்கு பெண்களும் காரணமா அல்லது பெண்கள்தான் காரணமா என்பதை பெண்ணுரிமை பேசுபவர்கள் சுய சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.
ஒரு ஜாதியையோ ஒரு மதத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ அல்லது கட்சியின் தலைவரையோ கிண்டல்,கேலி செய்கிரமாதிரி திரைப்படம் வந்தால் ஆர்ப்பாட்டம் என்ன கலவரம் என்ன திரைஅரங்கு தீவைப்பு திரைப்படச்சுருள் கடத்தல் எல்லாம் நடக்கின்றது, ஆனால் பெண்களை பற்றி எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக திரைப்படத்தில் காட்டுகிறார்கள். போஸ்ட்டருக்கு தார் பூசுவதோடு கடமையை முடித்துக் கொள்கிறார்கள். யாராவது ஆபாசமாக நடித்த நடிகை வீட்டு முன்போ,அப்படி படம் எடுத்த டைரக்டர் வீட்டு முன்போ அல்லது தயாரிப்பாளர் வீட்டு முன்போ ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்திருந்தால் ஆபாச படங்களை திரையிடும் திரைஅரங்குகள் தீயிடப்பட்டிருந்தால்(வன்முரை அல்ல கருணைக்கொலை) இந்தியாவில் ஆடைபஞ்சமோ என்று எண்ணுமளவுக்கு நடிகைகளின் ஆடை குறைந்திருக்காது. நம்முடய கவனக்குறைவால் பேஷன்ஷோ, அழகிப்போட்டி,விளம்பரம் என்று வளர்ச்சிப்பெற்று இன்று வீதி வரை வந்து விட்டது. விளையட்டு துறையை பாருங்கள் ஆண்களை விடபெண்கள் குறைவான (மோசமான) ஆடைகளையே அணிகிறார்கள். டென்னிஸ் விளைட்டில் பாருங்கள் பெண்வீராங்கனை உடுதும் ஆடை மறைக்கவேண்டியதை மறைக்காத மேலாடை உள்ளாடை தெரியும் படியான கீழாடை. குறைந்த பட்ச்சம் ஆண்கள் உடுத்துவது போன்ற ஆடை அணிந்தாலும் நாகரிகமாக இருக்கும்.
அறிவு வளர்ச்சிபெறாத மனிதன் கூட தன் உடலை இலைகளை கொண்டு மறைத்துக்கொண்டதாக படித்திருக்கிறோம் . மனிதர்களுக்கு அறிவு வளர்ந்து இருக்கு ஆடை குறைஞ்சிடுச்சு.உடல் அங்கங்கள் மற்றவர்களுக்கு தெரிகிறமாதிரி ஆடைஅனிவது நாகரீகம் என்றால் காலப்போக்கில் ஆடை இல்லாமல் இருப்பதும் நாகரீகம் என்று ஆகிவிடும்.
நாம் நல்லவர்களாக இருப்பது மட்டும் இந்த சமுதாயத்திற்கு செய்கின்ற சேவையாக நினைக்காமல் நம்முடய சந்ததிகளும் வருங்காலத்தில் நல்லவர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் அதுவே ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய சமுதாயக்கடமை.ஒரு பெண் பொது இடத்தில் ஈவ்டீஸ்சிங் என்றபெயரில் அவமானப்படும் பொழுது வேடிக்கை பார்த்தசமுதாயம் அந்த அவமானத்தினால் விபரீதமான முடிவை அப்பெண் எடுத்தபின்பு கண்டனப்பேரணி நடத்துவதால் எந்த பயனும் இல்லை.
தீயதை பேசாதே என்பது சரி,ஆனால்தீயதை பார்க்காதே தீயதை கேட்க்காதே என்று சமுதாயதத்தில் நடக்கின்ற தீமைகளை பார்த்தும் பர்க்காமல் கேட்டும் கேட்காமல் போனோம் என்றால்
வருங்கால நம் சந்ததிகளின் நலனுக்கு நாம் கேடுசெய்கிறோம்.
கிராமங்களில் நாலு பெரியவர்கள் திண்னையில் உட்கார்ந்து உலக செய்திகளை பேசி பொழுதுபோக்குவது போல் நாமும்
தமிழ் மணத்தை பயன் படுத்தாமல் நாகரிகம் என்ற பெயரில் நடக்கின்ற அநாகரீகங்களை களைய முயற்சிக்கவேண்டும்.
அதற்கு இந்த இணையதளத்தின் மூலம் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயல்வோம்.
அதிகமான தமிழர்கள் தமிழ்மணத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றோம் அதன்மூலம் ஒரு பொதுவானகருத்தை உருவாக்குவோம்.
பத்திரிக்கைகளில் ஆபாசம் திரைப்படங்களில் அபாசக்கட்சிகள் சின்னத்திரைகளில் அபாசம் போன்றவைகளை கண்டித்து மின் அஞ்சல் மூலமாக அனைத்து மீடியாக்களுக்கும் நாம் அனைவரும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவிக்கவேண்டும்.
அடிக்க அடிக்கத்தான் அம்மியும் நகரும்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 18, 2005

 

காவிரி ஆறு கஞ்சியா ஓடினாழும்

காவிரி ஆறு கஞ்சியா ஓடினாழும்
நாய் நக்கித்தான் குடிக்கும்.
குடும்பம் மணைவி மக்களை பிரிந்து
வெளி நாட்டில் போய் வேலை செய்ய வேண்டிய தலையெழுத்தை நினைத்து மனவேதனையோட குடும்பத்தாரிடம்
பிரியா விடைபெற்று ஏர்போட்டில் நுளைஞ்சா ஏர்போட்டில் வேலை செய்கின்ற காவலர் “சார் இந்திய ருபாய் இருந்த கொடுத்திட்டு போங்கசார்”. கை நிறைய சம்பளம் வாங்கினாலும் பிச்சை எடுப்பதை கௌவுரவமாக நினைக்கின்ற பிச்சைக்காரர்கள்.
அய்யா இவர்கள் இப்படி பிச்சை எடுப்பதால் இவர்களுக்கு மானம் போகுதோ இல்லையோ(இருந்தாதான போரதுக்கு) நம்ம நாட்டின் மானம் போகுதய்யா.
அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

நான் அடிமைஇல்லை

ரஜினி கர்நாடகாவா இருக்கட்டும் அல்லது காட்டுமண்ணார்குடியா இருக்கட்டும் அதப்பத்தி தமிழனுக்கு எந்த வருத்தமுமில்லை ஏன்னா இந்தியா என் தாய்நாடு இந்தியர் அனைவரும் எம்மக்கள் என்ற பரந்த எண்ணமும் தொலை நோக்குப் பார்வையும் கொண்டவன் தமிழன். கர்நாடக காட்டுமிராண்டிகள்போல் அல்ல அனால் அப்படிப்பட்ட தமிழர்களை முட்டாள்களாக நினைக்கிறாறே உங்க தலீவரு அதுதான் தப்புங்றேன். ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள். தலீவரு படம் 100 நாளை தாண்டி ஓடுதுன்னு எல்லாத்துக்கும் சோறு போட்டியே, தலீவர் இன்னா செஞ்சாரு அடுத்தப்படத்துக்கு ரேட் ஏத்தி இருப்பாறு. சுதந்திரதினம் வத்துச்சே அதுக்கு சோறுபோட்டா பூமி பொலந்துருமா இல்லாங்காட்டி வானம் வுழுந்துருமா. உங்ககிட்ட மனிதாபிமானமுமில்லை தேசபக்தியுமில்லை. ஒரு நடிகனோட அடிமையாக இருக்கீங்க. எலீக்சன்னு ஒன்னு வருமே அப்பால தலீவரு ரொம்ப பிகுபண்ணுவாரு ரொம்ப மவுணமா இருப்பாரு திடீர் திடீரென்று இமய மலைக்கு பரப்பாரு கடைசி அஞ்சி நாளைக்கு முந்தி வந்து சவுண்டு உடுவாரு இன்னான்னு ரோசனை பண்ணி பார்த்தா எல்லாப்பத்திரிக்கைலயும் கருத்து கனிப்பு போடுவானுவ அதப்பார்த்து போட்டு எந்த கட்சி ஜெயிக்கும்னு எழுதறாகளோ அந்த கட்சிக்கு ஆதரவா கொரல்வுடுவாரு இதப்பர்த்துப்புட்டு சில அடிமைகளும் நம்ம தலீவருக்கு இன்னா செல்வாக்குன்னு பீலாய்வுடுவானுவ இதுதான் வேனாங்ரன். கடந்த பாராளுமன்ற தேர்தல்ல பி.ஜெ.பி ஜெயிக்கும்னு எல்லாபத்திரிக்கை காரனுவளும் கருத்து போட்டானுவ அத நம்பி நாம்ம தலீவரும் பி.ஜெ.பிக்கு ஆதரவுன்னு சவுண்டுவுட்டரு தமிழகத்தில் ஒரு தொகுதியில் பி.ஜெ.பிக்கு டெப்பசிடேபோச்சு அதொட தலீவரு சாயம் வெளுத்துப் போச்சு இப்ப ஒரு படம் வெற்றி கண்டவுடன் பழயபடி அடிமைகள் கணவுகான ஆரம்பிடுச்சி. இப்ப ஜெயலலிதாவும் கர்நாடகம்தான். இருந்தாழும் அவுங்க அம்மாவும் அவுங்களும் தமிழகத்துக்கு ரொம்பசேவை செஞ்சி இருக்காங்க. அவுக இந்த பதவிக்கு வரதுக்கு எத்தனை பேருட்ட குத்து வாங்கி இருப்பாங்க அப்படிகுத்துனவுக லிஸ்டுல நம்ம அப்பாவும் இருப்பாகளோ என்று நெனைச்சிதான் ரொம்ப பேரு அம்மா அம்மான்னு அவுக கால்ல வுழுவுறானுவ. சினிமா நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்று எல்லாருக்கும் தெறியும். அதனால ஏதோ படத்ல நடிச்சோமா நாலு காசு பார்த்தோம போனோமா என்பதை உட்டுப்போட்டு லஞ்சத்தை ஒழிக்கப்போரன் ஊழலை ஒழிக்கப்போரன்னு டயலாக்லாம் உடப்படாது. 50ருபா டிக்கெட்டை 250ருபாய்க்கு விற்பனைசெய்து காசு பாக்குற கூட்டத்தை பக்கத்தில் வச்சிக்கிட்டு ஒரு புண்ணாக்கும் செய்யமுடியது.
கலைங்கர பேர்ல நாட்டின் பண்பாடு கலாச்சரத்தை சீறலிக்கிர உங்களால என்னத்த கிழிக்கமுடியும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க ஏன்யா அரசியலுக்கு வந்து புனிதமான அரசியலை கெடுக்குறிங்க, இதையேத்தான் நாங்களும் திருப்பிகேட்கிறோம் பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க கலைங்கர பேர்ல நாட்டின் பண்பாடு கலாச்சரத்தை ஏன்யா சீறலிக்கறீங்கன்னு.
(இதுவரை போஸ்ட்(பின்னூட்டம்) ஒட்டிக்கொண்டிருந்த நான் ஒரு தியேட்டர் ஆரம்பித்து(வலைப்பதிவு)படம் ஓட்டினால் என்ன என்ற நப்பாசையில் ஒரு தியேட்டர் (வலைப்பதிவு)ஆரம்பிச்சாச்சு இது கூட ராஜா ராமதாஸின் வலைப்பூவில் போஸ்ட் ஒட்டியதுதான்.புடிச்சி இருந்தா வாழ்த்துங்கள் அல்லது குட்டுங்கள். எழுத்தில் பிழை இருக்கலாம் எண்ணத்தில் குறை இல்லை.நன்றி.)
அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 17, 2005

 

ரசிகன் ஒரு சோமாறி

ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
தில்லாலாங்கடி லாங்குதான்
இடுப்புசேலை நழுவுதாம்
தொப்புலுல பம்பரத்தை
உடுறாம் பாரு நம்மாழு
இவன் கட்டவுட்டுக்கு கற்பூரத்தை
காட்டுரவன் சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
மார்பை மறைக்கும் துப்பட்டா
கைகுட்டையா மாரிபோச்சு
நாகரிகம் கூடிப்போச்சு
பலர் வாழ்க்கையும் நாசமா போச்சு
ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
ஜாக்கெட் போடமறந்து போச்சு
உள்ளாடையே ஜாக்கெட்டாச்சு
ஜட்டி ஒன்று இருந்ததால
மாணம் காக்க உதவியாச்சு
பாக்குரவன் மாணம் காக்க உதவியாச்சு
ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
அவ தொடையை தடவி பாக்குறான்
மார்பில் முகத்தை தேய்க்கிறான்
இவன் கட்டவுட்டுக்கு கற்பூரத்தை
காட்டுரவன் சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
வேசிக்கு கோவில் கட்டியாச்சு
கண்ணகி சிலை கானாமப்போச்சு
ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது