Wednesday, September 21, 2005

 

இதோ எந்தன் தெய்வம்!

ஆளும் அரிதாரம்

தமிழர்கள் மீது திரைப்படத் துறை செலுத்திவரும் ஆளுமை பற்றிய சித்திரத் தொடர்
முதல் பகுதி
திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் விம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து.
மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு (எம்.ஜி.ஆர்) கோயில் கட்டுவதற்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணமாகும்.
ஆம், சென்னையில் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி அதில் தொடர்ந்து பூசை செய்துவரும் காந்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் அந்தளவுக்கு எம்.ஜி.ஆரை தனது தெய்வமாகவே வரித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் குடித்த எச்சி குளிர்பானத்தை தான் பருகியதை இன்றும் காந்தா ஒரு பெரும் விசயமாகக் கூறுகிறார். தனது இந்தப் பக்தியை எவரும் பரிகாசம் செய்வதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை.
திரைப்படக் காதாநாயகர்களின் விம்பங்களை ஆராதிக்கும் இந்த பாங்கு எம்.ஜி.ஆருக்கு மாத்திரமான ஒரு சிறப்பு என்றும் கூறமுடியாது.இன்றும் ஏனைய காதாநாயகர்களுக்கும் இது தொடர்கிறது.


இதற்கு இன்னுமொரு உதாரணமாக நடிகர் விஜயகாந்துக்கு கோயில் கட்டியுள்ளார் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசப்பட்டியில் இருக்கும் இராஜேந்திரன்.
ஒரு நடிகருக்கு ஏன் கோயில் கட்டினீர்கள் என்று எமது செய்தியாளர் கேட்டதற்கு, “ உங்களுக்கு அவர் கடவுள், ஆனால் எனக்கு அவர் கடவுள்” என்று பதிலளித்தார் இராஜேந்திரன்.
இராஜேந்திரனை பொறுத்தவரை அரிதார ஆளுமைக்குக் முன்னால் அன்னைக்குக்கூட
இரண்டாவது இடந்தான்.

நன்றி: BBC

Comments:
/இராஜேந்திரனை பொறுத்தவரை அரிதார ஆளுமைக்குக் முன்னால் அன்னைக்குக்கூட இரண்டாவது இடந்தான்/

சரியான வார்த்தைகள். என்றுதான் இவர்கள் திருந்தப் போகிறார்களோ?
 
பாமரத்தனமாகத் தோன்றும் பெற்றோரின் குழந்தைக்குப் பெயர், அவர்களால் சரியாக உச்சரிக்கமுடியாத அஜீத், தனுஷ்- இது குட்டி அளவு ஆளுமையோ?
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது