Tuesday, September 13, 2005

 

எதையாவது எழுது மனமே!

காணவில்லை! காணவில்லை!-என்று
அறிவிப்பு வருமுன்
எதையாவது எழுது மனமே!

ரசியல் பற்றி எழுதுவதா
ன்மீகம் பற்றி எழுதுவதா
லக்கியம் பற்றி எழுதுவதா
கை பற்றி எழுதுவதா
ண்மை பற்றி எழுதுவதா
தாரித்தனம் பற்றி எழுதுவதா
தைப் பற்றி எழுதுவது
தும் அறியா நான்
யா ஏதாவது
ரு செய்தியுடன்
டி வருவேன்
து வரை பொறுங்களேன்.

கச்சை பற்றி எழுதுவதா
இச்சை பற்றி எழுதுவதா
காமம் பற்றி எழுதுவதா
கதையை பற்றி எழுதுவதா
சதையை பற்றி எழுதுவதா
இயற்கையின் சீற்றத்தை எழுதுவதா
செயற்கையான கலவரம் பற்றி எழுதுவதா
மனிதனை பற்றி எழுதுவதா- செத்துவிட்ட
மனிதாபிமானம் பற்றி எழுதுவதா
அன்பு பற்றி எழுதுவதா
அறியாமை பற்றி எழுதுவதா
வாய்மை பற்றி எழுதுவதா
வக்கிர புத்தியை பற்றி எழுதுவதா
பெண்ணைப் பற்றி எழுதுவதா
பெண்ணின் மேன்மை பற்றி எழுதுவதா

காணவில்லை! காணவில்லை!-என்று
அறிவிப்பு வருமுன்
எதையாவது எழுது மனமே!


வாய்மை பற்றி எழுத நான்
வள்ளுவன் இல்லை
வக்கிரமாக எழுத நான்
வாலியுமல்ல
காவியம் எழுத நான்
பாரதியுமல்ல
காமம் பற்றி எழுத நான்
கண்ணதாசனுமல்ல
பண்பாடு பற்றி எழுத நான்
பாரதிதாசனும் இல்லை
கொச்சையாக எழுத நான்
வைரமுத்துவு மில்லை.
எதை எழுதுவது!

காணவில்லை! காணவில்லை!-என்று
அறிவிப்பு வருமுன்
எதையாவது எழுது மனமே!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
சுயசரிதம் எழுத நான் அப்துல்கலாம் அல்ல.
கிசுகிசு எழுத நான் அரசுவும் அல்ல.

;-)
 
யோவ் அரசு, இன்னாய்யா டுபாக்கூர் கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்க.. எழுத மேட்டரில்லைன்னா என்ன மாதிரி SKSK (சொந்த கதை சோகக் கதை) எழுதுங்கய்யா... நேரமிருந்தா வந்து என் வலைப்பதிவை பாருங்க :-)
 
//எழுத மேட்டரில்லைன்னா என்ன மாதிரி SKSK (சொந்த கதை சோகக் கதை) எழுதுங்கய்யா... //

சோகக்கதை ஏதும் இல்லைங்க!

நீங்கள் கதையை தொடருங்கள்.
ஆமா பொழைக்க வந்த பரதேசிக்கு காதல் என்ன வேண்டி கெடக்கு அப்படின்னு அங்க யாரும் கேக்கமாட்டாங்களா!.
எனக்கும் ஒரு சோகக்கதை
எழுத ஆசை.
 
அதெப்படிய்யா இப்படி கலக்கறீங்க!!
 
nallaa irukku Arasu...vaazthukkal..
 
//அதெப்படிய்யா இப்படி கலக்கறீங்க!!//

பயத்துல உலறியதுங்க! வீ.எம்.

உலறலை உதாசீனப்படுத்தாது
வந்தோர் கருத்து பதிந்தோர்
அனைவருக்கும் நன்றி!
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது