Saturday, September 10, 2005

 

அரசு சொல்லுறான் ஆண்டவன் செய்யிறான்!

பெண்களை கேலி- கிண்டல் செய்து பாடல். வாலி - பா.விஜய் உள்பட சினிமா கவிஞர்கள் மீது திடீர் வழக்கு,

பா.விஜய்
சென்னை, செப். 10- பெண்களை கேலி - கிண்டல்; செய்யும் வகையில் சினிமா பாடல்களை எழுதும் சினிமா கவிஞர்கள் வாலி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ரகு. இவர் சென்னை ஐகோர்ட்டில் சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது„-

தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்கள் பெண்களை கேலி-கிண்டல் செய்யும் வகையில் பாடல்களை எழுதி வருகின்றனர். பெண்களை கேலி செய்பவர்கள் மீது ஈவ்டீசிங் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சினிமா கவிஞர்கள் வாலி, வைரமுத்து, விஜய் உள்பட 5 பேர் பெண்களை கேலி-கிண்டல் செய்யும் வகையில் ஆபாசமாக சினிமா பாடல்களை எழுதுகிறhர்கள். சிலர் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பாடல் எழுதுகிறhர்கள்.

இந்த பாடல்களினால், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், இளைய தலைமுறையினரிடையே ஆபாசத்தையும். பாலியல் உணர்ச்சிகளையும் தூண்டிவிடும் வகையில் உள்ளது. ஆகவே இந்த பாடல் ஆசிரியர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நன்றி-தினகரன்

அரசு சொன்னது என்ன இங்க வாங்க

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்பொமே கில்லி கில்லி...

Comments:
வரவேற்கப்படவேண்டிய வழக்கு. சினிமாவில் பார்க்கும் ஆபாசக் காட்சிகள்கூட ஒரு சில நாளில் மனதை விட்டு நீங்கி விடலாம்; ஆன்னால் பாடல் வரிகள் நாம் செல்லும் இடங்களிலெல்லாம் துரத்தி வந்து பசுமையாகவே(பச்சையாகவே) சமுதாயத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. கண்டிப்பாக பாடல் வரிகளுக்கென்றே தனி தணிக்கை அவசியம். உங்கள் ஆகஸ்ட் பதிவு பயனுள்ள கருத்துக்கள் அடங்கியது.
 
நன்றி
தானு.

இதில் பாரட்டுக்குறியவர் வழக்குத்தொடுத்த ரகு அவர்களே. எது நடந்தால் நமக்கு என்ன என்ற மனப்பான்மை மாறி எதிர்ப்பு குரல் கொடுத்தாலெ தவறு செய்பவர்கள் தயங்குவார்கள்.நாம் தவறுகளை கண்டிக்காமல் இருப்பது கூட அவர்களை ஆதரிப்பது போல ஆகிவிடும்.
 
பயனுள்ள பதிவு அரசு
தொடருங்கள்
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது