Wednesday, September 07, 2005

 

சிறந்த ஆசிரியர்கள் யார்?

தன்னிடம் படிக்கும் மாணவ மாணவிகளை பண்பாடு மிக்கவர்களாகவும் ஒழுக்கம் மிக்கவர்களாகவும் அவர்களின் வாழ்வின் மேன்மைக்கு வழி காட்டுபவர்களாகவும் அமைபவர்களே சிறந்த ஆசிரியர்கள். அவர்களுடய நடைமுறைகளும் மாணவர்களுக்கு ஒருபாடமாக இருக்கவேண்டும்.

நான் படித்த உயர் நிலைப் பள்ளியில் என்னுடய ஆசிரியர்களில் அப்படி ஒரு சிறந்த ஆசிரியர் அமையப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பெயர் சூசைராஜன் மிகவும் எளிமையானவர் நல்லகுணம் படைத்தவர். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் அவர் நடத்தியது உயிரியல்(Biolage) பாடம், வாரத்தில் இரண்டு நாட்கள்தான் அவருடய பிரியட், பிரியட் நேரம் 45 நிமிடங்கள்தான் அதில் 15 நிமிடங்கள் மாணவர்களின் ஒழுக்கங்கள் பற்றியே அவருடய பாடம் இருக்கும்.
மது அருந்துவதின் தீமைகள் பீடி, சிகெரட் பிடிப்பதின் தீமைகள், மாணவர்களின் ஒழுக்க கேடால் அவர்களுட வாழ்க்கை எவ்வாறு கெட்டுப் போகிறது, மாணவர்களின் வாழ்க்கையை எதிர்காலத்தில் எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும், உங்களின் தவறான செயல்கள் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது போன்ற பல அறிவுறைகளை சொல்லியபின்பே அவர் பாடம் நடத்துவார்.
அவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதால் அவர் சொல்கின்ற விதம் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்கும்படியாக இருக்கும். மாணவர்களை அடிப்பது கிடையாது, அவரிடமும் எந்த கெட்டப் பழக்கங்களும் கிடையாது அதனால்தான் அவருட அறிவுறைகளை பற்றி விமர்சனம் செய்யாமல் என் போன்றவர்களால் நடைமுறைப் படுத்த முடிந்தது.
மாணவர்களின் முன்னிலையில் புகை பிடிப்பது, மது அருந்திவிட்டு போதையில் பாடம் நடத்துவது, அல்லது போதையில் டீச்சர்ஸ் ரூமிலேயே இருந்து விடுவது போன்ற ஆசிரியர்களும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்
இது போன்ற ஆசிரியர்களிடம் படித்த மாணவர்களிடம் எப்படி ஒழுக்கத்தையும் நேர்மையும் நன்னடத்தையும் எதிர்பார்க்கமுடியும். வருங்காலத்தில் நல்ல சமுதயத்தை உருவாக்குகின்ற பொறுப்பு நம்மிடமுள்ளது என்ற உணர்வு எல்லா ஆசிரியர்களிடமும் இருக்கவேண்டும்.

மற்றவர்களுக்கு அறிவுறை சொன்னால் மட்டும் போதாது சொல்லுகிறவர் அதற்கு தகுதியானவர்களாக இருக்கவேண்டும் அப்பொதுதான் கேட்கிறவர்களுக்கும் நடைமுறைப்படுத்த கூடிய ஆர்வம் இருக்கும்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் எந்த விதிமுறைகளுமின்றி
ஆசிரியர் பணிக்கு சேர்த்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம்.


ஆசிரியர் பணிக்கு கல்வித்தகுதி மட்டும் இல்லாமல் ஒழுக்கமும், நேர்மையும், உண்மையும், சமுதாயப் பொறுப்பும் அவசியம். மாணவர்களை நல்லவர்களாக ஆக்குவது ஆசிரியரின் கடமை என்றால் அதற்குத் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் கடமை.

திரைப்படத்தில் மது அருந்துவதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தடை விதித்த அரசாங்கம் ஆசிரியர்களுக்கும் இது போன்ற தடைவிதித்தால் மிகவும் நன்மையாக இருக்கும்.
அதை மீருபவர்களுக்கு கடும் தண்டனையும் வழங்கவேண்டும்.
செய்வார்களா!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
தம்பீ நீங்க சொல்றதெல்லாம் சரிதான். நாங்களும் மனுசந்தானுங்களே. பாருங்க வீட்டுல எம்பொஞ்சாதிக்கு வயசாயிடுச்சு. எனக்கோ ஆசை ஏறிக்கினே போகுது. என்னா பண்றது மனச கட்டுப்படுத்திக்கினு ஸ்கூலு/காலேஜ் வர்ரோம்.

பாருங்க எங்க மாணவிகள் செக்ஸியா டிரஸ் பண்ணிகின், டைட் ஜீன்ஸோட, TWIN TOWERS என்ற ஸ்லோகத்தோட டைட் டீ சர்ட்டோட வர்ராங்க.

ஆனானப் பட்ட காஞ்சி சங்கராச்சாரியாராலேயே மனச கட்டுப்படுத்தப் முடியலே. நாங்களோ துறவி கிடையாது. என்ன செய்யிறது இப்படித்தான் எங்களில் சில பேரு கிறங்கி போயி ஏடாகூடமா எங்காவது கைய வச்சுடுறோம்.

இதப்போயி பத்திரிக்கை காரங்க "மாணவிகளிடம் சல்லாபம்", " காமவெறி தலைமை ஆசிரியர் கைது" அப்படி இப்படீன்னு எழுதி நாறடிக்கிரானுங்க.

இப்ப சொல்லுங்க தம்பி இதுமாதிர் ஒழுக்கச் சேர்கேடுக்கு நாங்களா காரணம்?
 
பத்திரிக்கை காரங்க ரொம்ப மோசமுங்க.
உங்களைப் போல ஆசிரியர்களிடமிருந்து மாணவிகளை காப்பத்தனும் என்ற என்னத்தில் பள்ளி மாணவிகள் செக்ஸியா ஆடை அனியக்கூடாதுன்னு சொன்னா பெண்னை அடிமைப் படுத்துராங்க,ஆணாதிக்கம் என்று எழுதுவாங்க. மாணவிகள் செக்ஸியா டிரஸ் பண்ணிகிட்டு வர்ரதுதான் பெண் சுதந்திரமுன்னு எழுதுவாங்க.
இப்படி எழுதரவுக பேசுரவுக இருக்கிறவரைக்கும் உங்களுக்கு ஜாலிதான். நடத்துங்க!
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது