Monday, September 05, 2005

 

டாக்டர் செய்தது சரியா?

எனது நன்பர் மூலம் அறிந்தது அவருடய மனைவிக்கு இரண்டாவது பிரவசத்திற்கு மருத்துவமனையில் சேர்த்து இருந்தபபோது மருத்துவரிடம் குழந்தை பிறந்தவுடன் எனது மனைவிக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்து விடுங்கள் எனகூறியுள்ளார். அதற்கு மருத்துவர் அவரிடம் கேட்ட கேள்வி ஏன் நீங்கள் கருத்தடை செய்து கொள்ளலாம்தானே என்று. நன்பர் பரவாயில்லை எனக்கும் கருத்தடை ஆப்ரேசன் செய்து கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
டாக்டர் மீண்டும் ஆப்ரேசன் செய்வதற்கு முன் என்னுடய கருத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அதன் பின்பு உங்கள் முடிவை கூறுங்கள் என்று இந்த கருத்தை கூறியுள்ளார்.

1) உங்கள் இரண்டு குழந்தைகளின் ஆயுளுக்கு உத்திரவாதம் என்ன?
2) கணவன் மனைவி இருவரும் சின்ன வயதுடையவர்கள் நீங்கள் கருத்தடை அப்ரேசன் செய்து கொண்டால், உங்கள் மனைவி இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்களின் மறுவாழ்க்கை கேள்விக் குறியாகிவிடாதா, கருத்தடை ஆப்ரேசன் செய்துகொண்ட உங்களை திருமணம் செய்ய பெண் முன்வருவார்களா?
3) நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் மனைவின் மறுவாழ்க்கை கேள்விக் குறியாகிவிடாதா, ஆப்ரேசன் செய்துகொண்ட உங்கள் மனைவியை திருமணம் செய்ய ஆண் முன்வருவார்களா?
4) நீங்கள் நிறந்தறமான கருத்தடை செய்வதற்கு பதிலாக தற்காலிகமாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாமே என்று அறிவுரையும் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் ஆப்ரேசன் செய்யும் எண்ணத்தை கைவிட்டுவிட்டதாக கூறினார்.

இப்போது என்னுடய கேள்வி

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை மாறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகி இப்போது நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்ற வேலையில் டாக்டர் இதுபோன்று செய்வது தேசதுரோக மில்லையா?

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
டாக்டர் இதில் என்ன தேசத் துரோகம் செய்துவிட்டார்? அரசின் பாலிசி கொள்கைகளுக்கும் மருத்துவரின் தனிப்பட்ட அறிவுரைகளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.நிரந்தர கருத்தடை முறை தான் வேண்டாமென்று சொன்னாரே தவிர இன்னுமொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. மறுமணம் செய்துகொள்வது சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது- சமுதாய முன்னேற்றத்துக்கு வாழ்த்துக்கள்- அதில் எத்தனை தம்பதியர் (recanalisation)மறுபடி கர்ப்பம் தரிக்கும் ஆப்பரேஷன் பொருட்டு மருத்துவர்களை அணுகுகிறார்கள்! சுனாமியின் போது இரண்டு மக்களையுமே பறிகொடுத்துவிட்டு வாழ்க்கைக்கு அர்த்தமே புரியாமல் நின்ற பெற்றோர் எத்தனை பேர்!
மருத்துவர் தன்னால் விளக்கப்படக்கூடிய அத்தனை விபரங்களையும் தன்னை நாடி வருபவர்களிடம் சொல்வதைத் தார்மீகக் கடமை என்று நான் நினைக்கிறேன். முடிவு எடுக்கும் உரிமை உங்களிடம்தானே இருக்கிறது?
 
என் நண்பர் ஒருவர் (பெருசு) சொன்னார் தனக்கு ஆறு பிள்ளைகள் என்றும் குடும்பக் கட்டுப்பாட்டை பேணி வருவதாகவும் சொன்னார். ஆறு பிள்ளைகளைப் பெற்று விட்டு குடும்பக் கட்டுப்பாட்டை எப்படி பேணுகிறீர்கள் என்றேன்.

அவருக்கு கல்யாணம் ஆன போது கவர்மெண்ட் பாலிசி, "மூன்றே போதும்" என்று சிகப்பு முக்கோணத்தைக் காட்டி விளம்பரம் செய்த போது மூன்று பிள்ளைகள் பிறந்ததாம். பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு, "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற பாலிசிபடி, மேலும் இரண்டு குழந்தை பிறந்ததாம். கடைசியா "நாம் இருவர்-நமக்கு ஒருவர்" பாலிசி படி மேற்கொண்டு இன்னொன்று பெற்றுக் கொண்டார்களாம். மொத்தம் ஆறு குழந்தைகள். தற்போது நாம் இருவர்-நமக்கு எதற்கு என்று 'சும்மா' இருப்பதாக கேள்வி.

இவர் அரசின் குடும்பக்கட்டுப்பாட்டு பாலிஸியை மதித்தார இல்லையா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

"அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி..."

இதைக்கூட அரசின் அடுத்த குடும்பக்கட்டுப்பாடு சுலோகமாக வைக்கலாமே!
 
நாளைக்கே இந்தியா வல்லரசாகி, பாலாறும் தேனாரும் ஓடினால், சிவப்பு முக்கோணம் நேராக நின்றால், அரசாங்கம் எல்லோரையும் 3 , 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் சொன்னால்.. ??
இந்த மருத்துவர் தொலைநோக்கு கொண்ட, முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வீர்களா ??
 
//அரசின் பாலிசி கொள்கைகளுக்கும் மருத்துவரின் தனிப்பட்ட அறிவுரைகளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.நிரந்தர கருத்தடை முறை தான் வேண்டாமென்று சொன்னாரே தவிர இன்னுமொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை.//

நிரந்தர கருத்தடை செய்வது கூடாது என்று அறிவுரை சொல்லும் ஒரு
சமுதாயத்தவர்களை தேசதுரோகிகள் என்று சொல்லுகிறார்கள்,
மருத்துவர் சொன்னால் தப்பில்லையா?
 
//சுனாமியின் போது இரண்டு மக்களையுமே பறிகொடுத்துவிட்டு வாழ்க்கைக்கு அர்த்தமே புரியாமல் நின்ற பெற்றோர் எத்தனை பேர்!//

நிரந்தர கருத்தடையினால் சிலர் இது போன்ற உயிரிழப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். இதை மனதில்கொண்டுதான் டாக்டர் அறிவுரை கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். நாமும் சிந்திக்கக் கூடியாதகவே உள்ளது.

அறிந்தோருக்கும் கருத்தை பதிந்தோருக்கும் நன்றி!
 
இந்த டாக்டர் கூறியதைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இஸ்லாம் தெளிவாக கூறிவிட்டது.
 
//இதை மனதில்கொண்டுதான் டாக்டர் அறிவுரை கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்//
 
அனேகமா அந்த டாக்டரும் பெட்ரோ-டாலர் வாங்கி இருப்பாரோ?
 
ஏனுங்க கவர்மெண்ட்ட எதிர்த்து என்னால போராட முடியும் ???
 
//* ஏனுங்க கவர்மெண்ட்ட எதிர்த்து என்னால போராட முடியும் ???
# posted by Go.Ganesh : 6:05 AM *//

ஏனுங்கோ இது போராட்டம் இல்லங்கோ. அறிவுரைத்தானுங்கோ.
 
"அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி..."
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது