Sunday, September 04, 2005

 

கிராம பஞ்சாயத்துக்களின் அட்டகாசம்!

கற்பழித்தால் அபராதம் போதுமா? உ.பி.,யில் கொதிப்பு * கிராம பஞ்சாயத்துக்களின் அட்டகாசம்

சாகரான்பூர்: கற்பழித்தவர்களுக்கு வெறும் அபராதம் விதிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர் கிராமப்புற கீழ்தட்டு மக்கள். ஆனாலும், போலீசை விட பலம் வாய்ந்த கிராம பஞ்சாயத்துக்களின் ஆதிக்கமே அதிகம் என்பதால் இந்த கொடூர நடைமுறையை மாற்ற முடியவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பல மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்துக்களின் அட்டகாசம் அதிகம். கீழ்தட்டு மக்களை, மேல் ஜாதி மக்கள் கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதுவும் கூலித் தொழிலாளிகள், ஏழை மக்களை வதைப்பதுடன், கற்பழிப்பு கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இருந்தாலும், கிராம பஞ்சாயத்துக்களை எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் ஆதரவு உள்ளதால், அவர்கள் போலீசை விட பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் முழுக்க இப்படித்தான் மேல் ஜாதி மக்களின் அட்டகாசம், நகரங்களில் இருக்கிறதோ இல்லையோ, கிராமங்களில் பரவலாக உள்ளது. கற்பழிப்புகள் அதிகம் காணப்படுகிறது. சாகரான்பூர் மாவட்டம், சிம்லானா கிராமத்தில் தலித் பெண்ணை கற்பழிக்க முயன்றது ஒரு கும்பல். அந்த பெண் எப்படியோ தப்பி விட்டாலும், கிராம பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், மேல் ஜாதியை சேர்ந்த ஒருவரோ, சிலரோ அமர்ந்து தான் தீர்ப்பு கூறுவர்.

"என்னை கற்பழிக்க முயன்றவருக்கு அபராதம் போடுவதை விட, நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டார் அந்த பெண். விசாரித்த கிராம பஞ்சாயத்து நடுவரோ, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

"எங்களுக்கு பணம் வேண்டாம், நீதி நியாயமே வேண்டும். கடுமையான தண்டனை தர வேண்டும்' என்று கிராம கீழ்த்தட்டு மக்கள் கோரியும் எதுவும் பலனளிக்கவில்லை. இது தொடர்பாக போலீசுக்கும் போக அவர்களுக்கு பயம்.

இதேபோல, தியோபந்த் கோலா பஸ்தி என்ற கிராம பஞ்சாயத்தில், கற்பழிப்பு குற்றவாளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஐந்து மாதத்திற்கு முன்பு கற்பழிக்கப்பட்ட பெண், இப்போது கர்ப்பிணியாக உள்ளார். கற்பழித்தவன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார். இருந்தும், அது பற்றி கவலைப்படாமல், குற்றவாளிக்கு அபராதம் விதித்து விடுவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி-தினமலர்

Comments: Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது