Wednesday, August 31, 2005

 

அரசு பதில்கள்

குமுதம் அரசு தான் பதில் சொல்லுவாரா
நம்ம அரசு பதில் எப்படின்னு பாருங்க.

பதிவும் நானே பின்னூட்டமும் நானே என்கிற மாதிரி கேள்வியும் நானே பதிலும் நானே!விக்ரம்ப்ரியன்
சங்கரன் கோவில்.
கேள்வி:-அந்நியன் படம் பார்த்தீங்களா?

பதில்:-இந்தியன் பார்த்துவிட்டதால் அந்நியன் பார்க்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சிங்.
அயோத்தி குப்பம்.
கேள்வி:-அரசுக்கு பிடித்தது எது? பிடிகாதது எது?

பதில்:-பிடித்தது அத்வானி பாக்கிஸ்தான் போனது.
பிடிக்காதது அவர் திரும்பி வந்தது.

எம்.ஜி. ராமசாமி.
மாந்தோட்டம்
கேள்வி:-இரட்டை இலைக்கு என்ன அர்த்தம்

பதில்:-ஒன்னு தின்னுரதுக்கு ஒன்னு ஆய்போறதுக்கு.இங்கிலீஸ்காரன்
சத்யாந்கர்.
கேள்வி:-உங்களுக்கு ஆங்கிலம் புடிக்காதா உங்கள் பதிலில் ஆங்கில வார்த்தைகளே இருப்பதில்லை.

பதில்:-என்னமாக்கன்னு உனக்கு விஷயம் தெரியாதா.அரசுக்கு ஆங்கிலத்தின் மீது வெறுப்புல்லாம் கிடையாது ஆங்கிலம் தெரியாது. நீ கேட்டுப்புட்ட இந்தாபுடி ABCDEFGH.போதுமா.

சின்னச்சாமி
சிவகாசி.
கேள்வி:அரசு ஒரு ஏ ஜோக் சொல்லுங்களேன்

பதில்:-ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஜோக்!.போதுமா

லலிதா
போன்னாவரம்
கேள்வி:-உங்களுக்கு பிடித்த முதல்வர்.

பதில்:-இந்தியாவில் நான். தமிழகத்தில் என்மனைவி.

விஜயன்
மதுரை
கேள்வி:-விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாறே அதை பறிய உங்கள் கருத்து.

பதில்:-மொதல்ல கொ.ப.செ.யாருன்னு சொல்லட்டும் அப்புறம் பார்ப்போம்
(இது திருநாவுக்கரசு கிட்ட கேட்ட கேள்வி இல்லையே!)

பன்னீர்
தஞ்சாவூர்
கேள்வி:-காவிரி பிரச்சினை தீருமா.
பதில்:-வாஸ்த்துப்படி காவிரி என்பது சரி இல்லை, கா என்பது காகம், காகம் சனி பகவான், வி அப்படின்னா விட்டம் காகமாகிய சனி வி ஆகிய விட்டத்தில் இருப்பதால் காவிரி பிரச்சினை தீரூவதற்கான வாய்ப்பு இல்லை.(உங்க மனைவி பெயர் காவிரி இல்லைய,.நான் சொன்ன பதில் காவிரி ஆற்றுக்கு, உங்க ஆத்துக்காரிக்கு பொருந்தாது)

ராமானுஜம்
ராமநாடு
கேள்வி:-ஒரு கணக்கு சொல்லுங்களேன்.

பதில்:-பள்ளியில் படிக்கும் போது கணக்கு வாத்தியாருக்கே அரசு தான் கணக்கு சொல்லிக் கொடுக்கறது, அரசு கணக்குல புலின்னு நெனச்சுக்காதிங்க, என்னோட கணக்கு வாத்தியார் மக்கு. இந்த கணக்கு எப்படின்னு சொல்லுங்க.
(1) 12345679*9=111111111.
(2) 12345679*18=222222222.
(3) 12345679*27=333333333.
(4) 12345679*36=444444444.
(5) 12345679*45=555555555.
(6) 12345679*54=666666666.
(7) 12345679*63=777777777.
(8) 12345679*72=888888888.
(9) 12345679*81=999999999.

துரை முருகன்
கோபாலபுரம்
கேள்வி:-கருணாநிதி ராஜ தந்திரியா?
பதில்:-எப்பவும் ராஜா என்கிறமாதிரி எப்பவும் முதல்வர் ஆகவல்லவா இருந்து இருப்பார்!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
1) கோழி முன்னாடி வந்ததா? முட்டையா?

ஜும்பலக்கா
ஜிம்பாப்வே
 
//கோழி முன்னாடி வந்ததா? முட்டையா?//
கோழிக்கு பின்னாடித்தான் முட்டை வருமுங்க.
 
sirandha kelviku parisu illaya?

irattai ilaidhan sirandha kelviyaga therigiradhu.
 
காஞ்சி சுப்பிரமணிக்கும் ஐடியல் சுப்பிரமணிக்கும் என்ன வித்தியாசம்?
 
super
 
99.95 காசுக்கு செருப்பு வாங்கினேன். காலைக் கடிக்குது.கடிக்காம இருக்க ஏதாச்சும் வழி உண்டா?
 
//காஞ்சி சுப்பிரமணிக்கும் ஐடியல் சுப்பிரமணிக்கும் என்ன வித்தியாசம்?//

மூன்றாம் பிறை சுப்பிரமணிதான் ஞாபகத்துக்கு வருதுங்க!

//99.95 காசுக்கு செருப்பு வாங்கினேன். காலைக் கடிக்குது.கடிக்காம இருக்க ஏதாச்சும் வழி உண்டா?//
பல்லை புடிங்கிடுங்க,
இனிமேலாவது பல் இல்லாத செருப்பா பாத்து வாங்குங்க.
Mr.Bill Clinton
மோனிகா நல்லா இருக்காகளா?
 
This comment has been removed by a blog administrator.
 
வெளிநாட்டு முதலீட்டை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள், வெளிநாட்டு கம்யூனிஸ்ட் கொள்கையை மட்டும் ஆதரிப்பதேன்?
 
//வெளிநாட்டு முதலீட்டை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள், வெளிநாட்டு கம்யூனிஸ்ட் கொள்கையை மட்டும் ஆதரிப்பதேன்?//

ஓட்டுக்கு ஐயா!ஓட்டுக்கு.வாக்குகளை மாத்தினால்தான் "வாக்கு" கிடைக்கும்
 
M.G.R. ஐ எப்படி செந்தமிழில் அழைப்பது?
 
//M.G.R. ஐ எப்படி செந்தமிழில் அழைப்பது? //
இது கூட தெரியாதா "வெள்ளை விஜயகாந்"
 
பக்கிஸ்தான்லேர்ந்து 40 வருசத்துக்கு முந்தி இந்தியாவிற்குள் எல்லை தாண்டிய அத்வானியும் எல்லை தாண்டிய பயங்கரவாதின்னு என் தோஸ்து சொல்றான். நீ இன்னாபா சொல்றே?
 
//பக்கிஸ்தான்லேர்ந்து 40 வருசத்துக்கு முந்தி இந்தியாவிற்குள் எல்லை தாண்டிய அத்வானியும் எல்லை தாண்டிய பயங்கரவாதின்னு என் தோஸ்து சொல்றான். நீ இன்னாபா சொல்றே?//
நான் இன்னாத்த சொல்றது நைனா, அதுதான் நீங்களே சொல்லிட்டிகளே.
 
"கேள்வி:-விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாறே அதை பறிய உங்கள் கருத்து.

பதில்:-மொதல்ல கொ.ப.செ.யாருன்னு சொல்லட்டும் அப்புறம் பார்ப்போம்"

- இதுக்குத்தான் ஒழுங்கா 'முக்கியமான' பதிவுகளைப் படிக்கணும்னு சொல்றது. போங்க, முதல்ல இந்த பதிவைப் பாருங்க.
(
 
வினாயகர் சதுர்த்தில கணபதி சிலையை போட்டு உடைக்கும் இந்துக்கள் அதே மாதிரி பிற மதத்தினரும் போட்டு உடைத்தால் ஏற்றுக் கொள்வார்களா?
 
//வினாயகர் சதுர்த்தில கணபதி சிலையை போட்டு உடைக்கும் இந்துக்கள் அதே மாதிரி பிற மதத்தினரும் போட்டு உடைத்தால் ஏற்றுக் கொள்வார்களா?//
அவர்களுக்கு வினாயகர் மீது கோபம் உடைக்கிறார்கள்.உங்களுக்கு யார் மீது கோபம்?(கணபதியை வைத்து கொஞ்சம் பேர் காலத்தை ஓட்டுகிறார்கள் அவர்களை ஏன் தொல்லை செய்றீங்க)
 
அப்கனில் தாலிபான்கள் புத்த்ர் சிலையை தகர்த்தன்ர். இதை புத்தர் சதுர்த்தின்னு எடுத்துக்கலாம?
 
//அப்கனில் தாலிபான்கள் புத்த்ர் சிலையை தகர்த்தன்ர். இதை புத்தர் சதுர்த்தின்னு எடுத்துக்கலாம?//
ஓ! அப்படியும் எடுத்துக்கலாமோ?
 
//- இதுக்குத்தான் ஒழுங்கா 'முக்கியமான' பதிவுகளைப் படிக்கணும்னு சொல்றது. போங்க, முதல்ல இந்த பதிவைப் பாருங்க.//
The page cannot be found.
Mr.தருமி போனதுக்கு இதுதாங்க பதிலாக கிடைத்தது!(ஏமாத்திட்டிங்களே!).
 
சூப்பர் அரசு சூப்பர்

குமுதத்துல வேலை இருக்கு போறீங்களா?
 
1) கோழி முன்னாடி வந்ததா? முட்டையா?

முனியாண்டி விலாஸ் ல எதை முதலில் ஆர்டர் பன்றமோ அது மொதல்ல வரும்..
5 * ஓட்டல்ல எப்படி ஆர்டர் பண்ணாலும் எல்லாம் ஒண்ணா தான் வரும்
 
தனுஷ்-சிலம்பரசன் இவர்களுக்குள் மோதல் தேவையா? (நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி)
 
//தனுஷ்-சிலம்பரசன் இவர்களுக்குள் மோதல் தேவையா? (நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி)//

ரொம்ப முக்கியமான கேள்வி கேட்டீங்க.
அவனுங்க மோதிக்கைறது பணம் சம்பாதிக்க, ரசிகன் என்கிரபேரில் மத்தவர்கள் மோதமல் இருந்தால் நாட்டுக்கு நல்லது!.
 
//குமுதத்துல வேலை இருக்கு போறீங்களா?//
குமுதம் மீது உங்களுக்கு ஏதும் கோபமா? வீ.எம்.
 
T. ராஜேந்தர் TEA குடிப்பாரா?
 
//T. ராஜேந்தர் TEA குடிப்பாரா?//

இந்த கேள்வி உஷா ராஜேந்தருக்கு அனுப்ப படுகிறது!
 
//- இதுக்குத்தான் ஒழுங்கா 'முக்கியமான' பதிவுகளைப் படிக்கணும்னு சொல்றது. போங்க, முதல்ல இந்த பதிவைப் பாருங்க.//
The page cannot be found.
Mr.தருமி போனதுக்கு இதுதாங்க பதிலாக கிடைத்தது!(ஏமாத்திட்டிங்களே!).

May be its too late now, but Dharumi's URL was appended with your URL, in the original post. here is the original url:

http://dharumi.blogspot.com/2005/08/60.html
 
வணக்கம் அரசு
பின்கினியில் யார் சூப்பர் ?
நயனதாரா, நமீதா, ஹிலாரி கிளிண்டன் , ஜெயலலிதா,சோனியா காந்தி
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது