Sunday, August 28, 2005

 

முதல்வர் அரசு!

சட்டசபையில் இன்று

என்னுடய கற்பனையில் சட்டசபை விவாதம்
சிலவேளை இது உண்மையாகவும் மாறலாம்.


தமிழக சட்டசபை கூடுகிறது அதை பற்றி
காமஹாசனிடம் நிருபர் கேள்வி கேட்கிறார்

நிருபர்: இன்று தமிழக சட்டசபை கூடுகிறது
அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

காமஹாசன்: நம்மகிட்டவந்து இன்னா கேள்வி கேட்டுப்புட்ட
நம்மளுக்கு இந்த அரசியல் கஸ்மாலமெல்லாப் புடிக்காது,
நாலு புட்டி ரத்தம் குடுத்தோமா,நாலு குட்டிக்கு முத்தம் குடுத்தோமான்னு என் ரூட்ல நான் போய்கினுகீறன் நம்மகிட்டவந்து கேள்வி கேட்டுகினு கீரியே.

அடுத்து சட்டசபை வளாகம்.
முன்னாள் முதல்வர்கள் முதல்வராகத்தான் சபைக்கு வருவேன். என்று சபதம் எடுத்து கொண்டதால் அவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!.


சபாநாயகர் மாரிமுத்து சபைக்கு வருகிறார்.அடுத்து
மற்ற எம்.எல்.ஏக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்
அதில் முக்கியமானவர்கள்

மருத மண்ணாரு:நான் நாட்ட..திருத்தப்போறன் அந்த கோட்டய புடிக்க... போறன் அந்த கோட்டய புடிக்க... போறன் என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்.

ஆகஸ்ட் அர்சுன்:தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்க்ஹிந் என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்

நெல்லை நடகுமார்:இடுப்பு எதுக்கடி துடிக்குது வயிறு எதுக்கடி எரியுது என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்

போயஸ் கார்னர் பாப்பா:
எம்பேரு சடயப்பா எனக்கில்லை முடியப்பா என்கிட்ட உள்ளதெல்லாம் தறுதலை பிள்ளையப்பா தறுதலை பிள்ளையப்பா தறுதலை பிள்ளையப்பா என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார் சபாநாயகர் மாரி முத்து விடம் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்.

திருச்சி கப்போலியன்: திருப்பாச்சி அருவாள தூக்கிட்டு வாடா வாடா என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்

தஞ்சை விசயராசு:எனக்கொரு மகன் இருக்கான் அவன் என்னைபோலவே அறுப்பான் என்று பாடியபடி சபைக்குள் செல்கிறார்.

முதலமைச்சர் அரசு சபைக்குள் செல்கிறார்(நான்தானுங்க)
சபாநாயகர் மாரிமுத்து தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டியபடி எழுந்து குனிந்து கும்பிடுகிறார்.

அவரை அமரச்சொல்லியபடி முதல்வர் இருக்கையில் அமருகிறார்.
சபாநாயகர் மாரிமுத்து போயஸ் கார்னர் பாப்பா எம்.எல்.ஏ கொடுத்த கடிதத்தை முதல்வரிடம் கொடுக்கிறார் நீங்களே படிங்க சபையில் எல்லாருக்கும் தெரியட்டுமே என்று முதல்வர் உத்தரவிட,சபாநாயகர் மாரிமுத்து கடிதத்தை பிரித்து படிக்கிறார்.
மேதகு கணம் பொருந்திய சபையின் நாயகருக்கு எம்.எல்.ஏ
ஆகிய போயஸ் கார்னர் பாப்பா எழுதுவது நான் அவசரமாக இமயமலைக்கு செல்வதால் இந்தக்கூட்டத்திற்கு வரமுடியவில்லை,ஆனா எப்ப வரணுமோ அப்பவருவேன்.

கடுப்பாகிப்போன மருத மண்ணாரு அவர் எப்பவோ வரட்டும் நம்ம ஆரம்பிப்போம் என்கிறார்.

உடனே சபாநாயகர் மாரிமுத்து கம்முன்னுகட,கம்முன்னுகட,கம்முன்னுகட,என்று சொல்ல
முதல்வர் எழுந்து அவர் சொல்லவந்ததை சொல்லட்டுமே என்று சபநாயகர் மாரித்துவிடம் கத்த சரிங்க சாமி என்று கூறியபடி கையால் வாயை பொத்துகிறார்
இதைக்கவனித்த முதல்வர் அப்படியெல்லாம் பன்னப்படாது,
உங்கப் பெயர் மாரிமுத்தா காளிமுத்தா என்று கிண்டலடிக்க சபையோர் அனைவரும் சிரிக்கிறார்கள்.

விவாதம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்
முதல்வர்:மத்திய அரசாங்கம் அதிகமான நிதியை நமது மாநிலத்திற்கு வழங்கி உள்ளது,அந்த நிதியைக் கொண்டு நமது மாநிலத்தில் பல நல்லபணிகளை செய்ய அரசு நாடியுள்ளது ஆகவே அனைத்து உருப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி நமது மாநில முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதைகேட்ட உருப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
முதல்வர் தொடருகிறார் நீங்கள் சந்தோசப்படுகிற மாதிரி
உங்களிடம் இந்த நிதியை வழங்காமல் அரசே நேரடியாக திட்டங்களை செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

மருத மண்னாரு குருக்கிட்டு அரசின் இந்த முடிவிற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்,அரசின் செயல் எங்களை அவமானப் படுத்துவதாக உள்ளது.

ஆகஸ்ட் அர்சுன்: ஜெய்ஹிந்! ஜெய்ஹிந்!

நெல்லை நடகுமார்:ஏனுங்க சாமி நல்ல ரோசனபண்ணித்தான்
சொல்லுறியளா.

திருச்சி கப்போலியன்: எடு அறுவாள வக்காளி என்ன நனைச்சி இருக்கான் அவன்.

உடனே சபாநாயகர் மாரிமுத்து கம்முன்னுகட,கம்முன்னுகட,கம்முன்னுகட,
அவை அடக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர் உரையை தொடரலாம்.

முதல்வர்:நன்றி சபையோர் அனைவரும் நான் சொல்வதை முழுவதுமாக கேட்டுவிட்டு உங்களின் கருத்துக்களை கூறலாம்.
நம் மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லாத எல்லா கிராமங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் கட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மருதமன்னாரு:குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்.
பள்ளிக்கூடங்கள் கட்டுவதால் அரசுக்கு இழப்புதான் ஏற்படும்,
அதனால் எந்த வருவாயும் ஏற்படப் போவதில்லை.ஏற்கனவே படித்த மாணவர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை, இந்ததிட்டத்தின் மூலம் வேலை இல்லாபட்டதாரிகள் அதிகமாவார்கள். அதற்கு பதிலாக எல்லாகிரமங்களிலும் தியேட்டர் கட்டினால் வரி என்ற பெயரில் மறைமுகமாக அரசுக்கு நிதி கிடைக்கும்.,கேபிள் டி.வி, சி.டி க்களுக்கு தடைவிதிக்க வேண்டும் இதனால் தியேட்டருக்கு மக்கள் அதிகம் வருவார்கள், சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கும் உதவிசெய்ததாக இருக்கும்.இப்பொழுது திரைப்படத்துறை மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளது,நடிகர் நடிகைள் உடுக்க துணியில்லாமல் மிகவும் கஷ்ட்டப் படுகிறார்கள். உடுக்க உடை இல்லத காரணத்தினால் குறைந்த ஆடையை அணிந்து கொண்டு தொழில் செய்ய (நடிக்க)வேண்டி உள்ளது. இதை நான் கற்பனையாக சொல்லவில்லை இப்பொழுது வரும் திரைப் படங்களை முதல்வர் பார்த்தால் அவர்களின் கஷ்டம் புரியும்.

முதல்வர்:கல்விக்காக இன்று செலவிடுவதை இழப்பு என்று சொல்கிறீர்கள்,ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை இப்ப உள்ள சமுதாயத்தை முழுமையாக கல்வி கற்றவர்களாக ஆக்கிவிட்டால் இனிவரும் சமுதாயத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள் என்ற தொலை நோக்குப்பார்வையுடன் அரசு சிந்திக்கிறது.படித்த பட்டாதாரி மாணவர்கள் விவசாயம் செய்வதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.அறிவியல் பூர்வமாக விவசாயம் செய்ய அரசு அவர்களுக்கு உதவும், அதன் மூலம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறுவதோடல்லாமல் நாம் விவசாயப் பொருட்களை அண்டை மாநிலத்திற்கு விற்பனை செய்யலாம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை அதிகப்படுத்தலாம்.

திருச்சி கப்போலியன்:ஆங்... கிழிப்பிய தண்ணி இல்லாம என்னத்த புடுங்குவிய.

தஞ்சை விசயராசு:என்மகன் பேரு சாம்பு அவன் உடுவான் அம்பு நீபண்ணுனா வம்பு நான் உடுவேன் பாம்பு.

சபநாயகர் மாரிமுத்து:இது சட்டசபை பாம்பு உங்க வீட்டுல போய்வுடுங்க, உங்க தாடிக்குள்ள பாம்பு இருக்கப்போவுது மொதல்ல தாடிய வெட்டிட்டு வாங்க.

முதல்வர்: காவிரி பிரச்சினையை மனதில் கொண்டு கோபப்படுகிறர் உருப்பினர்.தண்ணீர் பிரச்சினை தீர்ப்பதற்கும் அரசிடம் திட்டம் உள்ளது.காவிரி ஆற்றில் கோடைக் காலங்களில் தண்ணீர் வராததால் அல்லது கர்நாடகம் தண்ணீர் தராததால் மேட்டூர் அனைநீரின்றி வறண்டு போகிறது ஆனால் மழைக் காலங்களில் அதிகமான நீர்வருவதால் அணைநிரம்பி வெல்லப்பெருக்கு ஏற்படுகிறது வீணாக எல்லாத்தண்ணீரும் கடலில் கலக்கிறது,அப்படி வீணாகும் தண்ணீரை தடுக்கும் நோக்கில் காவிரி ஆற்றில் மேலும் ஒரு அணைகட்ட அரசு உத்தேசித்துள்ளது அதன் மூலம் நீர் விரயமாவது தடுக்கப்படுகிறது,நிலத்தடி நீர் பெருக வாய்ப்புள்ளது. மேலும் அந்த அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் அரசு எண்ணியுள்ளது.
மக்கள்நலனை கருத்தில் கொண்டு செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது, எனவே அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் வேண்டி அமறுகிறேன்.

ஆகஸ்ட் அர்சுன்:முதல்வரின் உரையில் மக்கள் நலன் மக்கள் நலன் என்று குறிப்பிட்டாரே தவிர நாட்டு நலன் பத்தி ஏதும் சொல்லவில்லை. பாக்கிஸ்த்தானில் இருந்து ஒரு தீவிரவதா கூட்டம் நம் நாட்டில் புகுந்து நம் நாட்டின் மண்ணை அள்ளிப்போக இருப்பதாக தினமலம் பத்திரிக்கையில் சேதி வந்துள்ளது அதைப்பற்றி அதை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் தென்னங்கன்று கொண்டு போறேன், மாங்கன்று கொண்டு போறேன் என்று அதோடு நம் நாட்டின் மண்ணையும் சேர்த்து அன்னிய நாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் தேச துரோகிகள்.அதை தடுப்பதற்கு அரசிடம் எந்த திட்டமுமில்லை. அரசின் இந்தச் செயலை வண்மையாக கண்டிக்கிறேன். நம் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட வெளி நாட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது பாரத மாதாக்கு ஜே!

மருத மண்ணாரு, ஆகஸ்ட் அர்சுன், நெல்லை நடகுமார், திருச்சி கப்போலியன் ஆகியோர் இதையேத்தான் நாங்களும் சொல்கிறோம் என்றுகோஷம் போடுகிறார்கள்.

தஞ்சை விசயராசு:போடாதடா போடாதடா கோஷம் மீறி போட்டுப்புட்டா ஆகிடுவ நாஷம்.

முதல்வர்: பாரத மாதா! பாரத மாதா! என்று கோசம் போடுகிறீர்களே நம் பாரதத்தில் எத்தனை மாதாக்கள் உடுக்க உடையும் உண்ண உணவும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா?

மருத மண்ணாரு: தவப் புதல்வருக்கு மணிமண்டபம் கட்டுவது விசயமாக எந்த அறிவிப்பும் இல்லை, சுதந்திரத்திற்காக பாடுபட்ட மறைந்த நடிகர் களுக்கும் மணிமண்டபங்கள் சிலைகள் அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை நடகுமார்:மணிமண்டபங்கள் அனைத்தும் கடற்கறையில் கட்டவேண்டும் அப்படி கட்டுவதால் இரண்டு நன்மைகள் உண்டு அவர்களின் புகழ்மறையாமல் காப்பாற்றப்படும்
சுனாமி வரும்போது மணி மண்டபங்கள் தடுப்புச்சுவர்போல் அமைந்து கடல் நீர் வராமல் தடுக்கமுடியும்.

முதல்வர்:தியேட்டர் கட்டுவது மணிமண்டபம் கட்டுவதற்கெல்லாம் அரசாங்கத்தின் பணத்தை செலவுசெய்ய முடியாது. அதுபோல் சிலைவப்பதற்கும் மணிமண்டபம் கட்டுவதற்கும் தடைவிதிக்கும் விதமாக ஒரு அவசரசட்டம்போட அரசு தீர்மானித்துள்ளது.
.
அரசின் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது பள்ளிக்கூடங்கள் கட்டுவது அணைகட்டுவது போன்ற திட்டங்களை உடனே திரும்பப் பெறவேண்டும் தியேட்டர் கட்டுவதற்கும் மணிமண்டபம் கட்டுவதற்கும் உடனே உத்தரவிட வேண்டும் அதற்குண்டான நிதியை எங்களிடம் தரவேண்டும் என அனைவரும் கோஷமிட்டபடி ஆர்பாட்டம்செய்ய.

முதல்வர்:மக்கள் நலப்பனிகளை செய்ய நீங்கள் அனுமதிகாததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.

முதல்வர் வெளியேருகிறார்.!

சபாயநாயகர் மறுதேதி குறிப்பிடாமல் சபையை ஒத்திவைத்தார்.

இவ்வாறாக தமிழக சட்டபையின் இன்றய கூட்டம் அமைதியாக முடிந்தது.!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
********ஒரு முக்கிய அறிவிப்பு*******

ஒரு மனம் பிறழ்ந்தவன் என் பெயரில் போலி பின்னூட்டமிட்டு வருகிறான். உண்மையில் புலிப்பாண்டி என்ற பெயர் நானும் ஆரோக்கியமும் பொதுவாக பயன்படுத்தியது. எப்போதெல்லாம் ஆரோக்கியம் திணருகிறாரோ அப்போதெல்லாம் 'புலிப்பாண்டி' யாக வேசம் போட்டு பின்னூட்டமிட்டு வந்தேன்.

பொதுவாக முஸ்லிம்களை திட்டி எழுதுவதற்காக மடத்திலிருந்து பெறப்படும் நிதியை ஆரோக்கியமே பெற்று எனக்கும் சிறு பங்கு கொடுத்து வந்தார். சமீப காலமாக இஸ்லாத்தை திட்டி வந்த ஆரோக்கியம் அவர்கள் அவர் பதிவை படிப்பவர்களை இந்து மதத்துக்கு வரச் சொல்லாமல், புத்த மதத்துக்கு போகச்சொன்னதால் மட நிர்வாகிகள் கடும் கோபம் கொண்டு அவருக்கு நிதி அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள் என்றும், என் பின்னூட்டங்கள் அவருக்கு தேவை இல்லை என்றும் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி விட்டான் (இவ்வளவு தூரம் நயவஞ்சகனாகி விட்டவனுக்கு இனி என்ன மரியாதை வேண்டி கிடக்கு?) இந்த நெருக்கடியால் நான் தனியாக பின்னூட்டமிட்டு வருகிறேன்.

என் முந்தைய ப்ளாக்கர் எண் 7986293. இதை ஆரோக்கியம் தன் சொந்த விருப்பத்திற்கு மட்டும் பயன் படுத்தி வருவதால், நான் அதில் இனி எழுதப்போவதில்லை. இனி இந்த புதிய ப்ளாக்கர் எண் 11335778 என்ற முகவரியிலிருந்தே என் கருத்தை சொல்வேன். உண்மையில் ஆரோக்கியம் வைத்திருக்கும் புலிப்பாண்டியா நானா என்ற சந்தேகம் வந்தால் எலிக்குட்டியை என் பெயரின் மேல் தடவினால், மேற்கண்ட நம்பர் தெரியாமல், என் புதிய நம்பர் 11335778 தெரியும். ஆகவே ஆரோக்கியம் போன்ற அயோக்கியர்கள் என் பெயரில் அவனை ஜால்ரா அடித்து பின்னூட்டமிட்டால் தயவு செய்து நம்ப வேண்டாம்.

ஆரோக்கியம் ஒரு அயோக்கியன்.தயவு செய்து என் பின்னூட்டத்தை நீக்க வேண்டாம்.
 
நல்லா இருந்துச்சு பா..கலக்கிபுட்டல..

இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
 
\\********ஒரு முக்கிய அறிவிப்பு*******
\\
வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது.
 
supper appu supper
 
/-வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. -/

அவங்கவங்க கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும்.
 
இதெல்லாம் ஒரு பொழப்பா?
 
இந்த பொழப்புக்கு...
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது