Thursday, August 25, 2005

 

கண்ணகி தீவிரவாதியா?

நம்ம பக்கத்துவீட்டுக் காரர் நம்மகிட்ட வந்து நான் சொல்லுகின்ற ஆள் கூடத்தான் நீ பேசவேண்டும், நான் சொல்லுகின்ற கடையில் தான் பொருள் வாங்கவேண்டும், நான் சொல்லுகின்ற போதுதான் நீ தூங்கவேண்டும், என்னுடய அனுமதி இன்றி அல்லது உத்தரவின்றி எதுவும் செய்யக்கூடாது, என்று சொன்னால் நாம் கேட்போமா, அப்படி அவர் சொல்லுகிறபடி நடந்தால் நாம் வீரமுள்ள அல்லது தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள ஆண் என்று நம்மை யாரும் சொல்லுவார்களா?.பக்கத்து வீட்டுக்காரன் என்ன நம்ம அப்பா,அம்மா அல்லது அண்ணன் சொன்னாலே கேட்கமாட்டோம்.
ஆனால் அமெரிக்கா, பிரிட்டீஷ் போன்ற நாடுகள் சொல்லுவதற்கெல்லாம் உலக நாடுகள் தலையாட்டுகின்றன.நான் எதை வேண்டுமென்றாலும் செய்வேன் யாரும் எதும் செய்யக்கூடாது ஏன் என்று கேட்கவும் கூடாது, நான் எதை வேண்டுமென்றாலும் வச்சிருப்பேன் நீங்க ஒன்னும் வச்சிக்கக் கூடாது என்னை ஏன்வச்சிருக்க என்று கேட்கவும் கூடாது அப்படின்னு சொல்லிகிட்டு, இருக்கிறவன் கண்ணுல ஒருத்தன் விரலவுட்டு ஆட்டுறான்பாரு அது ரெம்பபுடிச்சிருக்கு!.

உலகத்துக்கே நான்தான் நாட்டமை என்று கட்டப் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு அராஜகம் பண்ணிக்கிட்டு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கின்றான்,ஐ.நா. சபையை மதிக்காமல் ஈராக்மீது போர் நடத்துகிறான், ஐ.நாவில் இவன் சொல்லுரபடிதான் பேசவேண்டும். நம்மசட்டசபையை விட ஐ.நா மோசமான நிலையில் உள்ளது, அதன் தலைவரை பார்க்கும் போது நம்ம காளிமுத்து எவ்வளவோ தேவலாம்.இப்படி அராஜகம் பண்ணுகிரவனை தட்டிகேட்க திரானி இல்லாமல் உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக இவன்களுக்கு ஜல்லி அடிக்கும்போது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை எதிர்த்து போரடுகிறார்களே கில்லி அடிக்கிறார்களே அவர்கள் வீரர்களய்யா.
இவர்கள் ஏன் இப்படி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று நாம் சிந்தித்து பர்த்து இருப்போமா?. சொத்து தகறாறா அல்லது அமெரிக்கா, பிரிட்டீஷ் அதிபர் பதவிக்காகவா. நீதி என்ற பெயரில் இவர்கள் செய்கின்ற அநீதியை எதிர்த்து போறாடுகிறார்களே .இவர்கள்தானய்யா வீரமுள்ள அல்லது தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள ஆண். அவனுக்குப் பெயர்தான் தீவிரவாதியா?
ஈராக் நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கு பல கற்பனை கதைகளை சொல்லி அந்த நாட்டின் மீது போர் நடத்தி பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை பலகொலைகளை நடத்திய தோடல்லாமல் அதை எதிர்த்து போரடும் அந்நாட்டு மக்களை சிறைச்சாலைகளில் சித்திரவதை செய்பவர்கள் அகிம்சாவாதிகள்,உரிமைக்காக சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள்.ஆனால் ஈராக்கில் இறந்து போகின்ற அமெரிக்க கூட்டனியின் ஆக்கிரமிப்புபடை வீரர்களின் உறவினர்கள் அமெரிக்க அதிபர் புஷ்சை திவரவாதி என்கிறார்கள்!.அநீதியை தட்டிக்கேட்க உலக நாடுகளுக்கு திரானிதான் இல்லை.இதை கண்டிக்க மனசாட்சியுமா இல்லை.உலக நடுகள் நடத்துவது தீவிரவாதத்திற்கு எதிரான போரட்டமில்லை,அமெரிக்கவை, அநீதியை செய்பவனை, அக்கிரமக்காரனை எதிர்ப்பவர்களை எதிர்த்து போராடுகிறார்கள்.

எல்லா தீவிரவாதத்தின் பின்னாலும் ஒரு அநீதி இருக்கும் அல்லது ஒரு அடக்குமுறை இருக்கும் அல்லது பாதிப்பு இருக்கும் இதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்.பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையை எரித்த கண்ணகியை தீவிரவாதி என்று நாம் இதுவரை சொன்னதில்லியே! பாண்டிய மன்னன் செய்தது தவறு என்று ஜல்லிதானே அடித்து இருக்கின்றோம்.
பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையையும் மதுரை மக்களையும் கண்ணகி ஏன் எரித்தாள் என்று யாரவது கில்லி அடித்து இருப்பார்களா?
இன்றய தீவிரவாதாம் என்பது, அக்கிரமம், அநீதி செய்கின்றவர்கள் அல்லது அமெரிக்கா, பிரிட்டீஷ் என்ற ஆலமரத்தின் விழுதுகள் அந்த விழுதுகள் தறையை தொடுவதற்குமுன் அக்கிரமம் அநீதி என்கின்ற ஆலமரத்தை வெட்டுவதே சாலச்சிறந்தது.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
கண்ணகி மதுரையை எரித்தது பற்றி எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு. அவள் செய்தது ஓவர்தான். இது பற்றி நான் என் வலைப்பூவில் பதிவும் போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/07/100.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது