Saturday, August 20, 2005

 

(அ)நாகரீகம்

நம் எல்லோரையும் அன்றாடம் பாதிக்கின்ற விசயம் வேதனை படவைக்கின்ற விசயம் பெண்களை கேவலப்படுத்துகின்ற அசிங்க படுத்துக்கின்ற செயல்கள். சிலபேர்கள் பெண்களை கிண்டல் செய்யும் போது கேட்கிற நமக்கே மனதுக்கு கஷ்டமாக இருக்கிணன்றதே அந்த பெண்ணின் தாய்,தந்தை,உடன்பிறந்தவர்கள் கேட்டால் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று எண்ணுவதுண்டு. அவர்கள் கிண்டல் செய்ய பயன்படுத்துகின்ற வார்த்தைகளை எழுதினால் இதை படிப்பவர்களும் (எல்லோரும் அல்ல) பயன்படுத்துவார்களோ என்ற அச்சத்தால் அந்த வார்த்தைகளை தவிர்த்துக்கொள்கிறேன்.
கிண்டல் செய்கின்ற ஆண்களிடம் பெண்கள் கேட்கின்ற ஒரே கேள்வி அக்கா,தங்கையோட பிறக்கலியா?. அக்கா,தங்கையோட பிறந்து இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.நம் தாயும் பெண், நம்முடய மனைவியும் பெண் என்ற உணர்வு இருந்தாலே போதும்.
இது போன்ற கிண்டல்களுக்கு பெண்களும் காரணமா அல்லது பெண்கள்தான் காரணமா என்பதை பெண்ணுரிமை பேசுபவர்கள் சுய சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.
ஒரு ஜாதியையோ ஒரு மதத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ அல்லது கட்சியின் தலைவரையோ கிண்டல்,கேலி செய்கிரமாதிரி திரைப்படம் வந்தால் ஆர்ப்பாட்டம் என்ன கலவரம் என்ன திரைஅரங்கு தீவைப்பு திரைப்படச்சுருள் கடத்தல் எல்லாம் நடக்கின்றது, ஆனால் பெண்களை பற்றி எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக திரைப்படத்தில் காட்டுகிறார்கள். போஸ்ட்டருக்கு தார் பூசுவதோடு கடமையை முடித்துக் கொள்கிறார்கள். யாராவது ஆபாசமாக நடித்த நடிகை வீட்டு முன்போ,அப்படி படம் எடுத்த டைரக்டர் வீட்டு முன்போ அல்லது தயாரிப்பாளர் வீட்டு முன்போ ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்திருந்தால் ஆபாச படங்களை திரையிடும் திரைஅரங்குகள் தீயிடப்பட்டிருந்தால்(வன்முரை அல்ல கருணைக்கொலை) இந்தியாவில் ஆடைபஞ்சமோ என்று எண்ணுமளவுக்கு நடிகைகளின் ஆடை குறைந்திருக்காது. நம்முடய கவனக்குறைவால் பேஷன்ஷோ, அழகிப்போட்டி,விளம்பரம் என்று வளர்ச்சிப்பெற்று இன்று வீதி வரை வந்து விட்டது. விளையட்டு துறையை பாருங்கள் ஆண்களை விடபெண்கள் குறைவான (மோசமான) ஆடைகளையே அணிகிறார்கள். டென்னிஸ் விளைட்டில் பாருங்கள் பெண்வீராங்கனை உடுதும் ஆடை மறைக்கவேண்டியதை மறைக்காத மேலாடை உள்ளாடை தெரியும் படியான கீழாடை. குறைந்த பட்ச்சம் ஆண்கள் உடுத்துவது போன்ற ஆடை அணிந்தாலும் நாகரிகமாக இருக்கும்.
அறிவு வளர்ச்சிபெறாத மனிதன் கூட தன் உடலை இலைகளை கொண்டு மறைத்துக்கொண்டதாக படித்திருக்கிறோம் . மனிதர்களுக்கு அறிவு வளர்ந்து இருக்கு ஆடை குறைஞ்சிடுச்சு.உடல் அங்கங்கள் மற்றவர்களுக்கு தெரிகிறமாதிரி ஆடைஅனிவது நாகரீகம் என்றால் காலப்போக்கில் ஆடை இல்லாமல் இருப்பதும் நாகரீகம் என்று ஆகிவிடும்.
நாம் நல்லவர்களாக இருப்பது மட்டும் இந்த சமுதாயத்திற்கு செய்கின்ற சேவையாக நினைக்காமல் நம்முடய சந்ததிகளும் வருங்காலத்தில் நல்லவர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் அதுவே ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய சமுதாயக்கடமை.ஒரு பெண் பொது இடத்தில் ஈவ்டீஸ்சிங் என்றபெயரில் அவமானப்படும் பொழுது வேடிக்கை பார்த்தசமுதாயம் அந்த அவமானத்தினால் விபரீதமான முடிவை அப்பெண் எடுத்தபின்பு கண்டனப்பேரணி நடத்துவதால் எந்த பயனும் இல்லை.
தீயதை பேசாதே என்பது சரி,ஆனால்தீயதை பார்க்காதே தீயதை கேட்க்காதே என்று சமுதாயதத்தில் நடக்கின்ற தீமைகளை பார்த்தும் பர்க்காமல் கேட்டும் கேட்காமல் போனோம் என்றால்
வருங்கால நம் சந்ததிகளின் நலனுக்கு நாம் கேடுசெய்கிறோம்.
கிராமங்களில் நாலு பெரியவர்கள் திண்னையில் உட்கார்ந்து உலக செய்திகளை பேசி பொழுதுபோக்குவது போல் நாமும்
தமிழ் மணத்தை பயன் படுத்தாமல் நாகரிகம் என்ற பெயரில் நடக்கின்ற அநாகரீகங்களை களைய முயற்சிக்கவேண்டும்.
அதற்கு இந்த இணையதளத்தின் மூலம் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயல்வோம்.
அதிகமான தமிழர்கள் தமிழ்மணத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றோம் அதன்மூலம் ஒரு பொதுவானகருத்தை உருவாக்குவோம்.
பத்திரிக்கைகளில் ஆபாசம் திரைப்படங்களில் அபாசக்கட்சிகள் சின்னத்திரைகளில் அபாசம் போன்றவைகளை கண்டித்து மின் அஞ்சல் மூலமாக அனைத்து மீடியாக்களுக்கும் நாம் அனைவரும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவிக்கவேண்டும்.
அடிக்க அடிக்கத்தான் அம்மியும் நகரும்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
nice and necessary articles in this situation.

A great salute for u to give this articles...
 
அரசு! உங்களை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் தீயதைக் கூட நல்ல விஷயமாகக் காட்டும் முயற்சி வெற்றி பெற்று வருகிறது. இதன் வெளிப்பாடுதான் ஆபாசம் மிகுந்த காட்சிகளைக் கூட கொஞ்சமும் கூச்ச உணர்வின்றி குடும்பத்தோடு கண்டு களிக்கும் போக்கு. 'மாஸ் மீடியா' (MASS MEDIA) என்று சொல்லிக்கொள்ளும் சினிமாதான் இத்தகைய கீழ்த்தரமான உணர்வுகளைப் பரப்பும் 'மாஸ்டர் மீடியா' (MASTER MEDIA). ஜெமினி சினிமாவில் மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்த காட்சிகளெல்லாம் தரமான பத்திரிக்கைகளுக்கும் பரவி விட்டதைப் பார்க்கும்போது மீடியாக்களுக்கு காசு பார்க்கும் நோக்கம் மட்டுமே பிரதானமாகி விட்டது என்பதைப் பறைசாற்றுகிறது. இதைக் கண்டும் காணாமல் செல்லும் ஒவ்வொருவரும் கண்டனத்திற்குரியவர்களே. அத்தகையோரின் செவிகளை உங்கள் கோரிக்கை சென்றடையட்டும்.
 
""ஸ்மேரசாரு முகமண்டலாம் விமலகண்டலம்பி மணிமண்டலாம்

ஹாரதாம பரிசேபமான குசபார பீருதனுமத்யமாம்

வீரகர்வ ஹரநூபுராம் விவித காரணேச வரபீடிகாம்

மாரவைரிஸஹ சாரிணீம் மனஸிபாவயாமி பரதேவதாம்""

இப்படின்னா என்ன அர்த்தம் தெரியுதாங்க அரசே ?

அதாவது ""மன்மதனின் பகைவரான பரமேச்வரன் மனைவியான பரதேவதையின் மனதில் த்யானிக்கிறேன். அவள், புன்முறுவல் பூத்த அழகிய முகமண்டலம் கொண்டவள். சுத்தமான கன்னத்தின் கீழே தொங்கும் மணிக்காதோலையுடையவளும், ஹார வரிசைகள் அழகுறச் செய்த ஸ்தனபாரத்தினால் பயந்ததுபோல மிகக் குறுகிய இடையுடையவளும், வீரர்களுக்கே கர்வத்தைப் போக்கும் காற் சதங்கை கொண்டவளும், பிற்கால காரணேசர்களால் தாங்கப்படும் ஆஸனமுடையவளாயும் திகழ்கிறாள் அவ்வம்பிகை"".

இதை யார் எழுதினது தெரியுமா? அரசே.

ஆதிசங்கரர் போட்டுத்தாக்கன "நவரத்தின மாலிகா"வில இப்படித்தான் வருது. அம்பிகையையே எப்படி சொல்றாரு பாத்திங்களா? நம்ம பத்திரிக்கைகள் இப்ப அடிக்கிறதெல்லாம் வெரும் காப்பி தான்.
 
நம்ம தியேட்டருக்கு வந்தோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி நன்றி.மீண்டும் வருக.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது