Thursday, August 18, 2005

 

நான் அடிமைஇல்லை

ரஜினி கர்நாடகாவா இருக்கட்டும் அல்லது காட்டுமண்ணார்குடியா இருக்கட்டும் அதப்பத்தி தமிழனுக்கு எந்த வருத்தமுமில்லை ஏன்னா இந்தியா என் தாய்நாடு இந்தியர் அனைவரும் எம்மக்கள் என்ற பரந்த எண்ணமும் தொலை நோக்குப் பார்வையும் கொண்டவன் தமிழன். கர்நாடக காட்டுமிராண்டிகள்போல் அல்ல அனால் அப்படிப்பட்ட தமிழர்களை முட்டாள்களாக நினைக்கிறாறே உங்க தலீவரு அதுதான் தப்புங்றேன். ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள். தலீவரு படம் 100 நாளை தாண்டி ஓடுதுன்னு எல்லாத்துக்கும் சோறு போட்டியே, தலீவர் இன்னா செஞ்சாரு அடுத்தப்படத்துக்கு ரேட் ஏத்தி இருப்பாறு. சுதந்திரதினம் வத்துச்சே அதுக்கு சோறுபோட்டா பூமி பொலந்துருமா இல்லாங்காட்டி வானம் வுழுந்துருமா. உங்ககிட்ட மனிதாபிமானமுமில்லை தேசபக்தியுமில்லை. ஒரு நடிகனோட அடிமையாக இருக்கீங்க. எலீக்சன்னு ஒன்னு வருமே அப்பால தலீவரு ரொம்ப பிகுபண்ணுவாரு ரொம்ப மவுணமா இருப்பாரு திடீர் திடீரென்று இமய மலைக்கு பரப்பாரு கடைசி அஞ்சி நாளைக்கு முந்தி வந்து சவுண்டு உடுவாரு இன்னான்னு ரோசனை பண்ணி பார்த்தா எல்லாப்பத்திரிக்கைலயும் கருத்து கனிப்பு போடுவானுவ அதப்பார்த்து போட்டு எந்த கட்சி ஜெயிக்கும்னு எழுதறாகளோ அந்த கட்சிக்கு ஆதரவா கொரல்வுடுவாரு இதப்பர்த்துப்புட்டு சில அடிமைகளும் நம்ம தலீவருக்கு இன்னா செல்வாக்குன்னு பீலாய்வுடுவானுவ இதுதான் வேனாங்ரன். கடந்த பாராளுமன்ற தேர்தல்ல பி.ஜெ.பி ஜெயிக்கும்னு எல்லாபத்திரிக்கை காரனுவளும் கருத்து போட்டானுவ அத நம்பி நாம்ம தலீவரும் பி.ஜெ.பிக்கு ஆதரவுன்னு சவுண்டுவுட்டரு தமிழகத்தில் ஒரு தொகுதியில் பி.ஜெ.பிக்கு டெப்பசிடேபோச்சு அதொட தலீவரு சாயம் வெளுத்துப் போச்சு இப்ப ஒரு படம் வெற்றி கண்டவுடன் பழயபடி அடிமைகள் கணவுகான ஆரம்பிடுச்சி. இப்ப ஜெயலலிதாவும் கர்நாடகம்தான். இருந்தாழும் அவுங்க அம்மாவும் அவுங்களும் தமிழகத்துக்கு ரொம்பசேவை செஞ்சி இருக்காங்க. அவுக இந்த பதவிக்கு வரதுக்கு எத்தனை பேருட்ட குத்து வாங்கி இருப்பாங்க அப்படிகுத்துனவுக லிஸ்டுல நம்ம அப்பாவும் இருப்பாகளோ என்று நெனைச்சிதான் ரொம்ப பேரு அம்மா அம்மான்னு அவுக கால்ல வுழுவுறானுவ. சினிமா நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்று எல்லாருக்கும் தெறியும். அதனால ஏதோ படத்ல நடிச்சோமா நாலு காசு பார்த்தோம போனோமா என்பதை உட்டுப்போட்டு லஞ்சத்தை ஒழிக்கப்போரன் ஊழலை ஒழிக்கப்போரன்னு டயலாக்லாம் உடப்படாது. 50ருபா டிக்கெட்டை 250ருபாய்க்கு விற்பனைசெய்து காசு பாக்குற கூட்டத்தை பக்கத்தில் வச்சிக்கிட்டு ஒரு புண்ணாக்கும் செய்யமுடியது.
கலைங்கர பேர்ல நாட்டின் பண்பாடு கலாச்சரத்தை சீறலிக்கிர உங்களால என்னத்த கிழிக்கமுடியும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க ஏன்யா அரசியலுக்கு வந்து புனிதமான அரசியலை கெடுக்குறிங்க, இதையேத்தான் நாங்களும் திருப்பிகேட்கிறோம் பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க கலைங்கர பேர்ல நாட்டின் பண்பாடு கலாச்சரத்தை ஏன்யா சீறலிக்கறீங்கன்னு.
(இதுவரை போஸ்ட்(பின்னூட்டம்) ஒட்டிக்கொண்டிருந்த நான் ஒரு தியேட்டர் ஆரம்பித்து(வலைப்பதிவு)படம் ஓட்டினால் என்ன என்ற நப்பாசையில் ஒரு தியேட்டர் (வலைப்பதிவு)ஆரம்பிச்சாச்சு இது கூட ராஜா ராமதாஸின் வலைப்பூவில் போஸ்ட் ஒட்டியதுதான்.புடிச்சி இருந்தா வாழ்த்துங்கள் அல்லது குட்டுங்கள். எழுத்தில் பிழை இருக்கலாம் எண்ணத்தில் குறை இல்லை.நன்றி.)
அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
வாங்க .. வாங்க.. அரசு அவர்களே.. கலக்குங்கள் ..

நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் .. மேலும் இங்கே
 
நல்ல மனதும்,எண்ணமும்.
 
வாசித்தோருக்கும் வாழ்தியோருக்கும் நன்றி. மீண்டும் வறுக.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது