Sunday, August 21, 2005

 

காந்தி தேசமே...!

குஜராத் பள்ளி பாடப் புத்தகத்தில் “கேவலமன” புரட்டு!
*சுதந்திரத்தை காந்தியே வாங்கித்தரலையாம்
ஆமதாபாத்:
*பிரிட்டிஷ் ஆதிக்கத்தினர்,அவர்களின் பலவீனத்தால் இந்தியாவில் இருந்து வெளியேறினர்.
*சத்தியா கிரகப் போர் மேற்கொண்டது தவறு என்று காந்திஜி வருந்தினார்.
*ஜனாதிபதியை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்றனர்.
*குழந்தை பிறப்பு அதிகரிக்க விதவை திருமணங்களே காரணம்.

இவ்வளவு கேவலாமான தவல்களும் நம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.எல்லா கூத்தும்,ஒன்பதாவது வகுப்பு “சோஷியல் சயின்ஸ்”பாடப் புத்தகத்தில் தான்.குஜராத் மாநில செகண்டரி கல்வி வாரியம் இந்த புத்தகத்தை தயார் செய்துள்ளது.
இப்படி வரலாற்றை கண்டபடி “புரட்டுக்களாக”தந்துள்ளது என்றால்,இளைஞ்சர்கள் பற்றிய ஒரு பாடத்தில்,இந்திய இளைஞர்கள் எல்லாருக்கும் சரிவர சத்துணவு இல்லை.அவர்கள் இப்போது கிடைக்கும் சில தவறான உணவுகளை சாப்பிட்டு, உடல்நலம் பாதிக்கின்றனர்.அவர்களால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. அதுபோல, சிறுமிகளுக்கு சத்துணவு இல்லாததால்.ரத்தசோகை ஏற்படுகிறது என்று ஒரே சாடல் புராண்மாக தகவல்கள் உள்ளன.
இன்னொரு பாடத்தில்,”ஒரு காலத்தில் தீரமிக்க இந்திய இளைஞர்கள் இருந்தனர்.அதுபோல் நாம் நாட்டுபற்றை அதிகம் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் மக்கள்தொகை குறையும்”என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைவிட வேதனையான தகவல் இன்னொரு பாடத்தில் எழுதப்பட்டுள்ளது.”முன்பொரு காலத்தில் இந்திய தேசிய புரட்ச்சிப்படை இருந்தது. அதில் ஒவ்வொரு இளைஞர்களும் பங்காற்றினர்.அவர்கள் தீரத்தை பற்றி சொல்லவேண்டுமானால், அவர்கள்சாவை மடியில் கட்டிக்கொண்டு அலைந்தவர்கள்.அவர்கள் ராணுவத்திடம் பிடிபட்டால்,உடனே. இன்குலாப் ஜிந்தாபாத் வந்தேமாதரம் என்று கோசமிட்டு தற்கொலை செய்து கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் சில சிறிய பிழைகள் உள்ளன.அவற்றை புதிய இனைப்பு சேர்க்கப்பட்டு சரிசெய்யப்படும் .மற்றபடி எந்த தவறும் இல்லை என்று கூறிவிட்டது கள்விபோர்டு.எனினும்,மனித உரிமை அமைப்புகள்,தியாகிகள் அமைப்பினர்,கல்வியாளர்கள் சிலர் என்று பலதரப்பிலும் எதிர்ப்பு அதிகரித்து வருகிரது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்த “புரட்டு” தகவல்களை வாபஸ்பெற்று புதிய பாடப் புத்தகத்தை கொண்டுவருவரா என்பது கேள்விக்குறியான விஷயமே.
நன்றி : தினமலர்-18/8/2005

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
இதை இப்படியே விட்டால் பிற்காலம்
குஜராத் கலவரம் (மோடிக்காலம்)எப்படியெல்லாம் பாடத்தில் பதிவு செய்யப்படும் ? அல்லது மறக்கப்பட்டு விடுமா ?
 
ஆரோக்கியத்தின் வாரிசுகள் இது போன்ற புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு தேசப்பிதா காந்தியையும் சுதந்திரப் போரட்ட வரலாற்றையும தப்பா எழுதுவார்கள்.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது