Monday, December 19, 2005

 

சீரழிக்கும் சீரியல்கள்

ஒரு பக்கம் ‘குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.

உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம்’ என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!

தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே’ என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி? தரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரி, அத்தோடு இவர்கள் ‘புரட்சி’ முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... ‘‘இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும்.’’ எப்படியிருக்கு ‘கல்கி’ தொடரின் மூல முடிச்சு?

‘கணவருக்காக’ சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.

அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது! ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம்_ ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை!

மனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்து, ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். ‘நீ போடா டுபாக்கூர்’ என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்க, இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். ‘அரசு ஆம்பிளையே இல்லை’ என்று அவள் புது கரடிவிட, ‘என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை’ என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம்’’ என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு ‘முற்போக்காக’ சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்!

‘செல்வி’யில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும், அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து ‘நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும்’ என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்க, இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா? இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா?

அதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன், வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டு, தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டு, அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.

‘கோலங்கள்’ கதையும் என்ன வாழ்கிறது? ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். ‘பாதை’ சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது!

இப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்!

முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள் _ மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல்பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு, அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக, தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள். மனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில், சைக்கோதனமான நடிகை, பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட, வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!

இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.

அவர்கள் ஆதங்கம் நியாயமானது. ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது, குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. ‘‘சீரியல்தான் எனக்கு அந்த துணிச்சலைக் கொடுத்தது’’ என்கிறார் படு காஷ§வலாக. நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும், சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார். அவ்வளவு ஏன், பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன், மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம்பட்சமாகி விடுகிறது.

சீரியல் பிசாசுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது! இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!
நன்றி:குமுதம்

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 16, 2005

 

மாதா,பிதா,குரு தெய்வம்!

ஆணுக்கு நிகராக பெண்கள் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் என்பது முன்னேரிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மிகைப்படுத்தலே. எத்தனை சதவீதம் பெண்கள் முன்னேறி உள்ளார்கள் அவர்களின் முன்னேற்றம் எல்லாத் துறைகளிளும் இருக்கிறதா அவர்களுடய முன்னேற்றம் எல்லா வகையிலும் இருக்கிறதா அவர்களுடய முன்னேற்றத்திற்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் எவ்வளவு பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்பதை ஒரு சில வெளிவந்த செய்திகளை வைத்து நாம் அனுமானிக்க முடியும். பெண்கள் பளளியில் படிக்கின்ற போதே அவர்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொல்லைகள் ஆசிரியர்கள் ரூபத்திலும் சகமாணவர்கள் ரூபத்திலும் ஆரம்பித்து விடுகிறது. மாதா,பிதா, குரு தெய்வம் என்கிறோம் ஆனால் மாதா தெய்வமாகிய பெற்ற தாயே மகளை செக்ஸ் தொழிலுக்கு ஆட்படுத்துவதும் உலகில் நடந்து வருகிரது. குரு தெய்வம் என்கிறோம் அப்படிப்பட்டகுரு மாணவிகளை காமக்கண்களுடன் பார்ப்பவரும் தன்னுடய காமத்தை தனித்துக் கொள்ள வன்புணர்ச்சி செய்பவருமாகத்தான் இருக்கிறார். இப்பேர்ப்பட்ட கொடுஞ்செயலை செய்பவருக்கு தண்டனை தற்காளிக வேலை நீக்கம் அல்லது இடமாற்றம். மீண்டும் பணியில் அமர்ந்து தனது பழய லீலைகளை ஆரம்பித்து விடுகிறார். ஒழுக்கத்தை போதிக்கிகக் கூடியவரிடம் ஒழுக்கமில்லை. அடுத்து காதல் என்ற பெயரில் தனது இச்சயயை தனித்துக் கொள்வது அதன் பின் அவர்களை கைவிட்டு விடுவது. இளம்பென்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வதும் விபச்சாரத்தில் தள்ளப் படுவதும் கதல் என்ற பெயரில் கயவர்களிடம் கற்பை இளந்தவர்கள் தான் என்றால் அது மிகையில்லை.
மாணவன் கூட தனக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியையை குரு என்று பார்க்காமல் பெண்ணாகத்தான் பார்க்கிறான்.(ஆசிரியைகள் மாணவர்களின் உணர்ச்சியை தூண்டுகிரமாதிரி உடை அணிகிறார்கள் என்பது வேரு விசயம்)
சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தை பத்திரிக்கையில் படித்தபோது மேலும் அதிர்ச்சி தரக்குடியாத இருந்தது பிதா தெய்வமாகிய தந்தை மகளுடன் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்த கொடுமை நடந்துள்ளது.
பக்கத்து வீட்டுக்காரன் சிறுமியை கற்பழித்த சம்பவம் இன்னும் கொடுமையானது. வயது வித்திசமின்றி பெண்ணாக இருந்தால் போதும் சிறுமி,மகள், ஆசிரியை,மாணவி என்ற பாகுபடின்றி ஆண்கள் வக்கிரகங்களை நிரைவேற்றக் கூடியவர்களாகவே உள்ளார்கள் என்பதைத்தான் இச்சம்பவங்கள் உணர்த்துகின்றது இவற்றுக்கு என்ன காரணம் இது போன்ற செயல்களை எப்படி தடுப்பது என ஆராயாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபம் செலுத்துவதோடு நமது கடமையை முடித்துக் கொள்கிறோம். சினிமாவிலும் தொலைக் காட்சிகளிலும் இருந்த கவர்ச்சியை மக்கள் நடைமுறை படுத்த துவங்கி விட்டார்கள். இவற்றால் தூண்டப்படுகிற சில வக்கிர புத்தியுடய ஆண்கள் இது போன்ற மிருகச்செயலை செய்கிறார்கள். சினிமா,தொலைக்காட்சி அல்லது ஒரு சில பெண்கள் அணிகின்ற கவர்ச்சியான ஆடைகளால் உந்தப்பட்டு சிறுமிகளிடம் கூட தங்களது இச்சையை தனித்துக்கொள்ள துனிந்து விடுகிறார்கள் என்பதும் உண்மை. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு எல்லம் கிடையாது ஒரு மந்திரி கூட பெண் உயர் அதிகாரியிடம் தவறாக நடக்க முயற்சித்த சம்பவமும் நமது நாட்டில் நடந்துள்ளது இது போன்று வேலை செய்கிற பெண்களும் உடன் வேலை செய்கின்ற ஆண்களால் செக்ஸ் டார்ச்சர் செய்யப் படுகிறார்கள்.உடன் வேலை செய்யும் பெண்களும் சில பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை தவறானப்பாதைக்கு அழைத்துச் செல்கிறவர்களும் உண்டு, தங்களின் வருமையின் காரணமாக பெண்கள் மறைத்து விடுவது இவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது (விதிவிலக்காக ஆண்களின் பலவீனத்தை பயன் படுத்தி காரியம் சாதித்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் ஜெயலட்சுமியை போல)
இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கினால் அச்சத்தின் காரணமாக தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது இவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே கடுமையானதாக இருக்கவேண்டும். குறைந்த பட்ச தண்டனை ஆண்மை நீக்கம் செய்வது (எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ள முடியாத மாதிரி) தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதின் காரணமாக இது போன்ற தவறுகளை குறைக்க முடியும். அவ்வாறு இல்லாமல் மனிதாபிமானம் என்ற பெயரில் தவறு செய்பவர்களுக்கு பரிதாபப் பட்டுக் கொண்டிருந்தால் பாதிக்கப் படுபவர்கள் அதிகமாகிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, November 15, 2005

 

மீண்டும் அரசு!

சிலருக்கு அவர்களுடய கருத்துக்களை கூற மேடைகிடைக்கின்றது சிலர் பத்திரிக்கை மூலமாக அவர்களுடைய கருத்தை தெரிவிக்கிறார்கள், நமக்கும் கருத்துக்களை பதிவு செய்ய தமிழ்மணம் உதவி புரிகிறது ஒரு வலைப்பதிவாளன் என்ற முறையில் எனது கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கருத்துக்கூற உரிமை உள்ளது என்பதால் எதைவேண்டும் என்றாலும் கூறலாம் என்பது உரிமை மீரல் என்பதால் என்னுடயக் கருத்துக்கள் ஒரு வரையறைக்குள் இருக்கும்படி பதிவு செய்ய ஆசைப் படுகிறேன்.

தமிழ் பண்படு, கலச்சாரத்தின் நாயகி தமிழ்ப் பெண்களின் வழி காட்டி திருமதி குஷ்பு அவர்களையும் தமிழர்களின் கொம்பு முளைத்த தலைவி திருமதி சுஹாச்சீ(சி)னி அவர்களையும் முதலில் வாழ்த்தி வரவேற்போம். இப்படி ஒரு கொம்பு முளைத்த தலைவி கிடைத்ததில் தமிழர்களாகிய நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மேடம் நீங்கள் தமிழனுக்கு கொம்பு முளைத்திருக்கான்னு கேட்டிங்களே மனிதனுக்கு கொம்பு முளைக்காது கொம்பு முளைத்தால் அவன் மனிதனாக இருக்கமுடியாது ஆகையால் தமிழனுக்கு மாணாம், சூடு, சொரனை இருக்கா என்பதைத்தான் கொம்பு முளைத்திருக்கான்னு கேட்டதாக நான் நினைக்கிறேன். அந்த கருத்துப்பட கூறி இருந்தால் சந்தேகம் தானுங்க மேடம், ஏன்னா பெருகிவரும் ரசிகர் மன்றங்களையும், கோயில் கட்டி இருப்பதையும் பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோனுது மேடம்.

ஆர்பாட்டம் செய்கிண்ற இந்தப் பெண்னியக்கங்களை பத்தி எல்லாம் கவலைப்படாதிங்க ஆபாச போஸ்டருக்கு தார்பூசி உரிமையை நிலை நாட்டுவார்கள் அவர்களே அதைவிட மோசமன ஆடை அனியும் டென்னீஸ் வீரங்கனை சானியா மிர்ஜாவை ஆதரித்து உரிமை மீருவார்கள். இவர்களுக்கு கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது இதையெல்லாம் கண்டுக்காதிங்க மேடம்.

கூட்டத்தோட கூட்டமாக நடிகர்களும் கோவிந்தா பாடினார்களாமே!

நடிகர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

ஐயா! நடிகர்களே கொஞ்சம் அடக்கி வாசிங்க நடிகைங்க எப்படின்னு உங்களுக்கு தெரியும் நடிகருங்க எப்படின்னு நடிகைகளுக்கும் தெரியும் அப்புரம் உங்களைப்பத்தி நடிகைகள் வாய் திறந்தார்களானால் நாடு தாங்காது. ஏன் சொல்றேன்னா நீங்கள் எல்லாம் ஒன்றாக நடித்து இருக்கீங்க அப்ப அப்ப அவர்களுடய இச்சைகளை தனித்து இருப்பீங்க அல்லது இச்சையை தனித்துக்கொள்ள உதவி இருப்பீங்க அதனால சொன்னேன் ஏதும் தப்பா நினைக்காதிங்க.
(இதுக்கு மேல எழுதினா பச்சை விளக்கு அனைந்து விடும் ஆகையால் விடு ஜூட்)

அம்மண மாக இருக்கிரவர்களுடய ஊரில் ஆடை அனிந்தவன் பைத்தியக்காரன்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, October 19, 2005

 

அ,ஆ(BF)

கதை!கதை! கதைமட்டுமே!
கதையின் கரு ஆபாசப்படம் (BF)
என்னது ரசு தியேட்டரில் பாச படமா?!
கதையை படித்துவிட்டு முடிவு பண்ணுங்க.

என்கதை முடியும் நேரமிது!

ஏன்? ஆபசப்படம் பார்த்ததால் இன்று நான் தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டேன் ஆபாசப்படம் பார்ப்பது குற்றமா? ஆம்,நான் பார்த்ததுதான் குற்றம். அரைமணி நேரத்திற்கு முன்புவரை குற்றமாகத் தெரியவில்லை. இந்த அரைமணி நேரமாகத்தான் குற்றமாக தெரிகிறது. படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்,குற்றமா?இல்லையா? என்று. என் பெயர் தினேஷ் நான் ஒரு பொறிஇயல் படித்த பட்டதாரி, எனது அப்பா ஒரு நடிகர் தமிழ், மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடங்கங்களில் நடிக்கும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர், நான் இப்பொது வெளிநாட்டில் ஒரு கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்குகிறேன்.என்னுடய இந்த நிலைக்கு காரணம் என் அப்பாதான் இன்று அவரே என்சாவுக்கும் காரணமாகி விட்டார் சினிமாவில் நாயகி டைட்டான சின்ன டிரவுசரும் சிரிய ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு “டாடி”என்னுடைய டிரஸ் எப்படின்னு கேட்கும்போது அப்பா வேடத்தில் நடிக்கும் என்னுடய அப்பா சூப்பர் என்பார்.ஆனால் வீட்டில் என்தங்கை குட்டைபாவடை அணியக்கூட அனுமதிக்க மாட்டார் அவ்வளவு கண்டிப்பு. அவர் சினிமா நடிகராக இருந்தாலும் வீட்டில் சினிமா வாடையே இல்லாமல் தான் எங்களை வளர்த்தார்.என் அம்மாவுக்கு நல்ல கணவனாகவும் எங்களுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார். நான் அப்பாவைபற்றி ரெம்ப பெருமையாக நினைத்துக் கொள்வேன். நான் வேலை செய்யும் கம்பெனியில் வட இந்தியர்களும் வேலை செய்கிறார்கள் அவர்களிடம் என்னுடய அப்பாவைபற்றி பெருமையாக பேசிக்கொள்வேன் ஆனால் என்னுடய அப்பா ஒரு நடிகர் என்று அவர்களிடம் கூரியதுமில்லை அப்பாவின் போட்டோவை அவர்களிடம் காட்டியதுமில்லை காரணம் பிரபலங்களின் மகன் என்றால் உண்மையான நட்பு இல்லாமல் பழகி விடுவார்களோ என்ற பயம். அவர்களுடன் சேர்ந்து எப்பவாவது ஆபாசப்படம் (BF) பார்ப்பதுண்டு அது போல் இன்றும் படம் பார்க்க கூப்பிட்டார்கள் புதியப்படம் மலயாள படம் என்று கூறினார்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அவர்களின் அறைக்கு செல்ல கொஞ்சம் தாமதமாகி விட்டது நான் போகும்போது படம்போட்டு ஐந்து நிமிடமாகிவிட்டது என்றார்கள் நான் உட்கர்ந்து TV யை பார்த்தேன் என்னுடய தலையே வெடித்து விடும்போல் ஆகிவிட்டது காரணம் அந்தப்படத்தில் ஆடை ஏதும் இல்லாமல் நின்றுகொண்டிருந்த ஒருபெண்ணின் அருகில் எனது அப்பா ஆடை இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.மேற்கொண்டு என்னால் அங்கு இருக்க முடியவில்லை தலைவலி என்றுஅவர்களிடம் சொல்லிவிட்டு என்னுடய அறைக்கு வந்துவிட்டேன்.எனது கண்முன்னால் அப்பாவின் அந்தக்கோலம் ஆடை இல்லாமல் நின்ற காட்சிகள் வந்து போகிறது. அப்பா வீட்டிலும் நடித்துக் கொண்டிருந்தாக தோன்றுகிறது,ஆம் நல்ல கணவன்,நல்ல தந்தை என்ற கதபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் எப்படி அப்பாவிடம் பழயமாதிரி பேச பழக முடியும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரின் அந்தக் கோலம்தானே என் கண்ணில் தெரியும்.என்னுடய அம்மாவுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்து இருக்கிறார். இவருடைய அசிங்கமான வாழ்க்கை அம்மாவுக்கு தெரியுமா? தெரிந்தும் இந்த அசிங்கத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்களா,இது போன்ற செயலை அம்மா செய்தாள் அப்பா ஒத்துக்கொள்வாரா, கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா? ஆணுக்கு இல்லையா?. என்னுடய நன்பர்கள் யாரவது இந்தப்படத்தை பார்த்தால் என்ன நினப்பார்கள் நான் அவர்களிடம் என் அப்பாவைபற்றி எவ்வளவு பெருமையாக பேசி இருக்கிறேன்,நான் ஊருக்கு சென்றால் எப்போதும் போல் அவர்களிடம் பேசமுடியுமா,நன்பர்களும் அப்பா நடித்த அசிங்கமான படத்தை பார்த்து இருப்பார்களோ என்ற நினைப்புத்தானே மனதில் தோன்றும்.
ஆபாசப்பட நடிகை, ஆபாசப்பட நடிகர் என்று சொல்வார்கள். அது எப்படி நடிப்பு ஆகும் என்று நான் பலமுறை என்னிப் பார்ப்பதுண்டு, ஒரு பாட்டிலில் குடிநீரை வைத்துக்கொண்டு சாராயம் குடிப்பது மாதிரி நடிப்பதை நடிப்பு எனலாம், ஒரு தட்டு நிரைய பிரியானியையும் பொரித்தக் கோழியை தின்றுவிட்டு நான் சாப்பிட்ட மாதிரி நடித்தேன் என்பதையும் எப்படி நடிப்பு என்று சொல்லமுடியும்.

மனதில் இந்த கசப்பான் காட்சியை சுமந்து கொண்டு மற்றவர்கள் முன் ஒன்றும் தெரியாதவனாக என்னால் நடிக்க முடியாது. பிரபல நடிகரின் மகனான எனக்கு நடிக்கத் தெரியவில்லை. இதை நினைத்து தினமும் செத்து பிலைப்பதவிட ஒரே அடியாக செத்துவிடுவதே மேல் என்று முடிவு செய்து விட்டேன். ஒருமுறை செத்து விடுவது நலம்.
துனிந்தவனுக்கு தூக்குக்யிறு பஞ்சுமெத்தையாம் கோழைக்கும் கூட.
இந்தக்கடிதம் எழுதுவதன் நோக்கம் என்னுடய தற்கொலை என்னுடன் இருக்கும் நன்பர்கள் மீது சந்தேகம் ஏற்படக்கூடாதே என்பதால்.

அன்புடன்
தினேஷ்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, October 18, 2005

 

டோண்டு ஐயா அவர்களுக்கு.

கற்பு என்பதும் ஒழுக்கம் என்பதும் ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானது என்பது என்கருத்து அதை என்னளவில் நடைமுறைப் படுத்துபவன் நான்.என்னைப் பார்த்து நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று கேட்ட பெண்ணும் உண்டு, அவளிடம் கட்டியவளிடம் ஆம்பளையா நடந்து கொண்டல் போதும் கண்டவளிடம் ஆம்பளை என்று உருதிப்படுத்த விரும்பவில்லை என்று கூரியதுண்டு.

டோண்டு அவர்களின் இப்பதிவை படித்த போது என்னுள் ஏற்பட்ட சில சந்தேகங்கள்.
//உடல் இச்சையை தணித்துக் கொள்வது தவறு என்று பேசுவது பூனை தன் கண்ணை மூடிக்கொண்டிருப்பதை போலத்தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மற்றப்படி நான் சொல்லி எல்லோரும் கேட்பார்கள் என்றெல்லாம் ஏன் பயப்பட வேண்டும்? //

திருமணத்திற்கு முன் உடல் இச்சையை தணித்துக் கொள்வது தவறு என்று சொல்வதால் எல்லோரும் ஒழுக்கமாக நடப்பதில்லை அது போல நீங்கள் சரி என்று சொல்வதாலும் எல்லோரும் அதன்படி நட்ட்க்கப் போவதுமில்லை அவரவர் மண இச்சைப்படி அவர்கள் நடந்து கொள்வார்கள்.

ஒரு செயலை சிலர் நடைமுறைப் படுத்தும் போதும், நாம் அதை ஆதரிக்கும் போதும் அதனால் வரும் பின் விளைவுகளையும் நம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இச்சையை தணித்துக் கொள்வதாக இருந்தால் விலைமாதுகள் போல் எல்லா ஆண்களிடமும் தனித்துக்கொள்ள முடியாது பழக்கமான அல்லது அறிமுகமான ஆண்களிடம் தான் இச்சையை தணிக்க வேண்டும் அப்படிப்பட்ட ஆண்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக் இருப்பார்களா. அப்படி என்றால் எவ்வளவு காலத்திற்கு திருமணத்திற்குபின் அந்தப் பெண்னின் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்.பின்பு வரும் பிரச்சினைகளை எப்படி கையால்வது.அவளுடய இச்சையை தணிப்பத்ற்கு உதவிய ஆண் அவனுடய இச்சையை தணிக்க என்னிய போதெல்லாம் அப்பெண் அந்த ஆணுக்கு ஒத்துழைப்பு தருவாளா?அவளுடய திருமணத்திற்குப் பின்னும்.

கன்னித்தன்மை என்பது இங்கு முக்கியமில்லை ஒழுக்கம்தான் தான் முக்கியம். ஒரு குழந்தைக்கு தாயான விதவைப் பெண்களை மகிழ்ச்சியோடு திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் ஒழுக்கமில்லாதவள் என்று தெரிந்தபின் மண முடிக்க ஆண்கள் முன்வருகிறார்களா?. அல்லது திருமணத்திற்கு பின்பு மணைவி முன்பு தவறான நடத்தை உடயவளாக இருந்தாள் என்பது தெரிந்த பின்பு அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்களா? திருமணத்திற்கு முன் இச்சையை தனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியவள், பல ஆண்களுடன் இச்சையை தனித்துக் கொண்டவள் திருமணத்திற்கு பின் ஒரு ஆணுடன் மட்டு இச்சையை தணித்துக் கொள்வதில் திருப்தி அடைவாளா?

கர்பம் அடையாமல் இருப்பதும் நோய்வரமல் தடுப்பது மட்டும் தான் பெண்னுக்கு பாதுகாப்பா?.//விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.//

இருவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான வாதமாக இருக்கவேண்டும் அதுதான் விபச்சாரத்தை ஒழிக்கும் அல்லது குறைக்கும் வழியாகவும் இருக்கும்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

நாலு பேருக்கு நன்றி

நாலு பேருக்காக உழைக்க ஆரம்பித்தேன்(பெற்றோர் உடன்பிறந்தோர்)
நாலுபேருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்(மணைவி மக்கள்)
நாலு பேர் மதிக்கவேண்டும் என்று ஒழுக்கத்துடன் வாழ்கிறேன்.
நாலு பேர் பாரட்டவேண்டும் என்று அக்கரையோடு வேலை செய்கிறேன்
நாலு பேரிடம் கடன் வாங்கக்கூடாது என்று சேமித்து வைக்கிறேன்.
நாலு பேர் முன் சுயமரியதையோடு வாழ வேண்டும் என்பதற்காக அதிகமாக சிந்திக்கிறேன்
நாலு பேருக்காக தவறு செய்ய அஞ்சுகிறேன்
நாலு பேருக்காக நல்லது செய்கிறேன்
நாலு பேருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாலு பேருக்காக மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் தவிர்த்துக் கொள்கிறேன்.
நாலு பேர் பின்னூட்டமிடுவதால் எழுதுகிறேன்.
“+”போடும் நாலு பேரால் நான் ஊக்கம் அடைகிறேன்
“-”போடும் நாலு பேரால் என்னைத் திருத்திக் கொள்கிறேன்
நாலு பேர் என்னை கவனிக்கும் போதுதான்
என்னை நான் சரி செய்து கொள்கிறேன்
நாலு கெட்டவர்களைப் பார்த்துதான் எப்படி வாழ்க்கூடாது என்று கற்றுக்கொண்ட நான்
நாலு நல்லவர்களை பார்த்துதான் எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன்

என்னைப் பொருத்தவரை நாலு பேர்தான் என்னை நேர்வழியில் அழைத்துச்செல்லும் வழிகாட்டி என்னுடய ஊக்கசக்தி, என்னை உயர்த்திவிடும் ஏனிப்படிகள், தூக்கிவிடும் கரங்கள்.

உருப்படாததை படித்ததால் எண்ணியதை எழுதியது.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, October 07, 2005

 

முதலாளி ஆகவாவது முயற்சி செய் இப்போது.

ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்ட என்ன நம்ம பாடுபட்டாத்தான் சோறு. இந்த டயலாக்கை கூடியாவிரைவில் தமிழகத்தில் கேட்கலாம் காரணம் சட்டசபை தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது.

நம்ம மக்களுக்கு உழைத்து சம்பாதிப்பதை விட இலவசமா ஏதும் கிடைத்தால் அவர்கள் அடையும் ஆனந்தம் ஆலாதியானது. எட்டு மணிநேரம் வேலை செய்வதினால் கிடைக்கும் 60 அல்லது 70 ருபாயைவிட 5ருபாய் கர்ச்சிப் இலவசாமாக வாங்குவதை பெருமையாக நினைப்பான் அதற்காக நாள் முழுவதும் வரிசையில் காத்து நிற்பான்.
அதை பெரிய சாதனையாக மற்றவர்களிடம் தம்பட்டம் அடிப்பான்
5ருபாய் கர்ச்சிப்பிற்காக காத்துக் கிடந்த நேரத்தில் வேலைக்கு சென்றிருந்தால் 70 ருபய் சம்பளம் கிடைத்து இருக்குமே என்ற உணர்வு இல்லாமல்,உழைப்பின் மேன்மை தெரியாமல்.

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அப்படித்தான் மக்களை மூலைச்சலவை செய்து வைத்துள்ளார்கள்.
அவர்களுக்கு நாட்டுநலனை விட அவர்களுடய நலனே மேலானது. ஆளும் கட்சினருக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதும், எதிர்கட்சியினர் ஆட்சியை பிடிக்க முயல்வதும். இந்த இலவச திட்டங்களின் மூலம்தான்.


இலவசமாக போடுகிற சோத்துக்கு வந்த கூட்டத்தை பார்த்து தான் விஜயகாந்துக்கு கூட கட்சி ஆரம்பிக்கதுனிவும் முதல்வராகவேண்டும் என்ற ஆசையும் வந்தது என்று கருதுகிறேன்
பிறந்த குழந்தைக்கு பேர்வைப்பதில் இருந்து விபத்தில் இறந்து போகின்றவர்களுக்கு உதவி சேய்கிறேன் என்ற பெயரில் பணம் கொடுப்பதுவரை அரசியல் ஆதயமும் விளம்பரமும் தான் இருக்கின்றதே தவிர மனிதாபிமனாம் இருப்பது என்பது மிகவும் குரைந்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை இதற்கு காரணம் மக்களிடமுள்ள இலவச மோகம்.

மக்களிடமுள்ள இலவசமோகம், அடிமைத்தனம், ஜனனாயகக் கடமை செய்யாதது இது போன்றவை தான் இன்று மிகுதியாகக் காணப்படுகிறது.

ருபாய் ஐம்பதுக்கும் நூருக்கும் இலவச சோத்துக்கும் இலவச துண்டுக்கும் ஓட்டுப் போடுபவர்கள் அரசியல்வாதியும் அரசாங்க அதிகாரிகளளும் உழல் செய்வதையும் லஞ்சம் வாங்குவதையும் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது.

நமது தொகுதில் நிற்கும் வேட்பாளர் நானயமானவரா நேர்மையாளரா உன்மையாளரா நம் தொதிக்கு நன்மைசெய்பவரா என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் என்தலைவன் இவரை வேட்பாளரக் நிருத்தி விட்டார் எனக்கு விருப்பமான கட்சின் வேட்பாளர் அதனால் அவர் ரவுடியாக இருந்தாலும் கொள்ளைக்காரனாக சாரய வியாபாரியாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவனுக்கு ஓட்டு போடுகின்ற அளவிற்கு அடிமையாக இருப்பவன் அவ்வாறு வெற்றி அடைந்து வரும் எம்.எல்.ஏ எங்கள் தொதிக்கு ஏதும் செய்யவில்லை என்று புலம்புவது முட்டாள் தனமில்லையா.


வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கடமையை செய்யாதவர்கள் அரசியல்வாதிகள் சரிவரக்கடமையை செய்வதில்லை என்பது அறிவீனம் இல்லையா.

நேர்மையான வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க ஆரம்பித்தால் அரசியல் கட்சிகளும் நல்லவர்களை வேட்பாளரக போட்டியிடச் செய்வார்கள்.
இலவசங்களை உதாசினப் படுத்தினால் நல்லதிட்டங்கள் மூலம் மக்கள் மணதில் இடம்பிடிக்க முயல்வார்கள். மாறாதர்வர்களை மாற்ற முயற்சிக்காமல் மாரவில்லை என்று சொல்வது மடத்தனமில்லையா. அரசியல்வாதிகளை மாற்ற முயல்வோம் நல்லவர்களுக்கு வாக்களிப்போம் அவர் சுயேட்சை வேட்பாளராயினும்.

இலவசச் சோத்துக்கும்,பிச்சைக் காசுக்கும்,
இலவச துண்டுக்கும் ஆசைப்பட்டு
அடுத்தவனை தலைவன் என்றும்
முதாலளி என்றும் அழைப்பதில்
ஆனந்தம் அடைபவனே
நீ தலைவன் ஆவது எப்போது
முதலாளி ஆகவாவது முயற்சிசெய் இப்போது.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, October 04, 2005

 

பாடம் கற்றுக் கொள்ளுமா அமெரிக்கா!

அமெரிக்காவில் ஏற்பட்ட இருவகையான இயற்கை சீற்றங்கள் மூலம் கனிசமான உயிர் சேதமும், மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவும் ஏற்பட்டதாக மீடியாக்கள் கூறின அவர்களுடைய விஷயத்தில் மீடியாக்கள் எப்பொழுதுமே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும். ஆனாலும் உலக நாடுகள் அளித்த நன்கொடைகளை ( நிவாரண நிதி ) பெற்றுக்கொண்டதன் மூலம் அதிகாமான பொருளாதாரச் சரிவு ஓரளவுக்கு உண்மை தான் என்பதை அறிந்து கொண்டோம். முதலில் அமெரிக்காவில் ஏற்பட்ட இயற்கை; சீற்றத்தில் பலியான உயிர்களுக்காக நாம் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் . தங்களது வலிமை வாய்ந்த ரானுவத்தைக் கொண்டு அப்பாவி மக்களின் உயிர்களை நரைவேட்டையாடி கொன்றுக் குவித்தனர். ஆப்கான், ஈராக் மக்கள் செத்து மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்த புஷ்ஷும், டபிள்யூ புஷ்ஷும் கொடுங்கோலர்களாகிய தங்களை மீண்டும் ஆதரித்து வாக்களித்த தங்களது இன மக்கள் இயற்கையின் சீற்றத்தில் மூழ்கி மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்திருப்பார்களா ? மாறாக துடி துடித்திருப்பார்கள்.

அன்னியா நாட்டு மனித வீழ்ச்சியில் மமதை கொண்ட புஷ்ஷினால் அமெரிக்க பொருளாதார விழ்ச்சியில் முகம் வாடிப் போனதேன்.
வீழ்ந்தது இரட்டைகோபுரம் பின்லாடனை பிடிக்கிறேன் பேர்வழி என்று பல்லாயிரம் ஆப்கானியரை கொன்றுகுவித்தீர் பின்லாடனை பிடிக்கிறமாதிரி தெரியவில்லை
ஈராக்கில் இராசயன ஆயுதம் இருக்கிறது என்று துடைதட்டி புஜம் குலுக்கி கிளம்பினீர் பல்லயிரக்கான உயிர்களை கொன்றது மட்டுமின்றி அம்மக்களின் வாழ்க்கையே சீரழித்தீர் இன்றுவரை இராசயன ஆயுதம் ஏதும் கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை.
சதாம் ஆட்சி காலத்தில் பல ஈரக்கியர்களை கொன்றார் என்று அவர்மீது வழக்கு அவருக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் தப்பில்லை. இருப்பினும் அவரின் செயலுக்கு ஒரு நியாயம் இருந்தது. சதாம் ஈரக்கின் ஆட்சி செய்தவர் அவருடய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கொலை செய்தார்.
நீங்கள் ஈராக் மக்களை காப்பாற்ற போகிறேன் பேர்வழி என்று போர் செய்து அம்மக்களை கொன்றது அல்லாமல் இன்றுவரை கொன்று குவித்து வருகிறீர்களே அது மட்டுமில்லாமல் ஷியாக்களுக்கு எதிராக சன்னி பிவினர் சதி செய்வதாக வதந்திகளை பரப்பி அதன் மூலம் கலவரங்களை எற்படுத்தி அதன் மூலம் அமெரிக்காவின் பயங்கரவாத முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு என்ன தண்டனை.டைக்ரீஸ் நதியில் மடிந்த மக்களின் மரணம் அமெரிக்காவின் பயங்கர வாதமல்லவா.
அமெரிக்க படையினர் மனித வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியாதால் ஏற்பட்ட மரணமல்லவா.
உங்களுக்கு யார்கொடுப்பது தண்டனை.
இயற்கை கொடுத்தது தண்டனை அல்லது ஆண்டவர் கொடுத்துவிட்டார் தண்டனை அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிசெய்த புஷ்ஷின் ஆட்சிக் காலத்திலேயே பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறான் கடவுள். உனது பலத்தைவிட அதிகாரத்தைவிட என்னுடய அதிகாரம் வலிமையானது என்பதை இயற்கையின் வலிமை எவ்வகையிலும் குறைந்தது இல்லை என்பதை உணர்த்தி இருக்கிறான்.

அன்று ரஷ்யா ஆப்கான் யுத்ததின் போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த பின்லாடன் இன்று அமெரிக்காவின் பரம எதிரி உலகப் பயங்கரவாதி தீவிரவாதி, ஈராக்-ஈரான் போரின் போது சதாமுக்கு ஆதரவு வழங்கியது அமெரிக்கா, இன்று சதாம் அமெரிக்காவின் எதிரி, இன்று அமெரிக்காவின் தத்து பிள்ளையான இஸ்ரேல் ஒரு நாள் அமெரிக்காவின் எதிரியாக மாறலாம் மாறக்கூடிய சூழ்நிலையை கடவுள் உண்டாக்கலாம் என்பதை அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்வது நல்லது.

நடந்து முடிந்த இயற்கையின் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா அமெரிக்கா!

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது